குழந்தையின் எதிர்காலத்திற்காக 15 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் வேண்டுமா? எதில் முதலீடு செய்யலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நமது குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் நம்மில் பலரின் கனவே.

 

ஆக நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்போம். ஆனால் எதில் முதலீடு செய்வது? எதில் லாபம் அதிகமாக இருக்கும். எது பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

அதிலும் இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு இப்படி பலவற்றிற்கும் திட்டமிட்டு அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது.

எந்த முதலீடு சிறந்தது?

எந்த முதலீடு சிறந்தது?

கணவரை இழந்த ஒரு 28 வயது தாய், தனது குழந்தைக்காக எவ்வளவு முதலீடு செய்யலாம்? தனது மாத சம்பளம் ரூ.48,000. தனது குழந்தையின் வயது 3. வருங்காலத்தில் குழந்தையின் உயர் படிப்புக்காக 50 லட்சம் ரூபாய் தேவை. அதற்காக தான் ஆக்ஸிஸ் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 3,000 ரூபாய் முதலீடு செய்து வருவதாகவும். இதன் மூலம் அடுத்த 15 வருடத்தில் 50 லட்சம் ரூபாய் எடுக்க முடியுமா? இது நல்ல லாபம் கொடுக்குமா? எந்த மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது. எது நல்ல லாபம் கொடுக்கும். ஆக்ஸிஸ் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் சிறந்ததா? அல்லது நான் வேறு ஏதேனும் பண்டுக்கு மாறலாமா? என்று கேட்டுள்ளார்.

 இந்த முதலீடு போதாது?

இந்த முதலீடு போதாது?

ஆனால் இதற்கு பதிலளித்த நிபுணர்கள் அடுத்த 15 ஆண்டுகளில் உங்கள் குழந்தைகளின் கல்விக்கு சராசரியாக, 10% கூட்டுத் தொகையை உருவாக்க, நீங்கள் மாதத்திற்கு சுமார் 12,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதோடு மிட் கேப் பண்டுகள் சற்று ஆபத்தினை கொண்டுள்ளன. ஆனால் உங்கள் நீண்டகால இலக்கிற்காக இந்த ஆக்ஸிஸ் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டினை தொடரலாம் என்றும் கூறியுள்ளார்.

மியூச்சுவல் பண்ட் பரிந்துரை
 

மியூச்சுவல் பண்ட் பரிந்துரை

எனினும் அவசர தேவைக்கு பணம் தேவைப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, நீங்கள் SBI Magnum Gilt Fundல் மாதத்திற்கு 3,000 ரூபாய் முதலீடு செய்யலாம். இது கடன் சந்தைகளில் முதலீடு செய்வதால் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.ஆக மீதமுள்ள 6000 ரூபாயினை மாதத்திற்கு பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்

இதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்

Nippon India Index Fund, சென்செக்ஸ் பிளான், Quantum Long Term Equity Value Fund, எந்தவொரு அவசர நிலையும், கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தினையோ அல்லது மெடிக்கல் பாலிசியை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளனர். இந்த கட்டுரை லைவ் மிண்டில் வந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best mutual funds to create Rs.50 lakh for your child education in next 15 years?

Investment plan.. Best mutual funds to create Rs.50 lakh for your child education in next 15 years?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X