மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கும் செக்.. இனி இதற்கும் 10% வரி.. கடுப்பில் முதலீட்டாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே அது சிக்கலானதாகத் தான் இருக்கும். இது மிக அச்சத்துக்குரியது என்ற சிந்தனைகள் தான், இன்று நம்மில்; பலருக்கு இருக்கும்.

 

இதனால் மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமான அளவு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறைவாகவே இருக்கும்.

சற்று முன்பு தான் இது மக்களுக்கான பட்ஜெட், ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கும், புதிய தசாப்த்தத்தில் பொருளாதாரத்தின் அடிதளத்தை வலுப்படுத்தும் என்றும் பிரதமர் கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி சற்று ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது.

10% டிடிஎஸ்

10% டிடிஎஸ்

இந்த நிலையில் மத்திய அரசு கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2020ல் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் பெறப்படும் வருமானம் 5,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், 10% வருமான வரி பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வருமான வரி திட்டத்தின் படி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் நிறுவன பங்குகள் போன்றவற்றில் இருந்து வரும் வருமானத்துக்கு விலக்கு கிடையாது. இதனால் இவ்வாறு பிடிக்கப்படும் வருமான வரியை மீண்டும் பெற முடியாது.

வருமானம் குறையும்

வருமானம் குறையும்

இந்த டிடிஎஸ் வரி திட்டத்தினை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதால் இனி இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. ஆக இந்த திட்டத்தின் கீழ் 5000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் கட்டாயம் 10% வரி செலுத்த கட்டாயப்படுத்தபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அடி
 

முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அடி

இந்த வரி நடவடிக்கையானது டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூசன் வரி ஒழித்தலுக்கு பின்பு வருகிறது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் இந்த DDT உட்பட்டவையாக இருந்தன. அதே சமயம் அத்தகைய வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது மியூச்சுவல் பண்ட் முதலீடுகளிலும் டிடிஎஸ்ஸை பயன்படுத்தினால் இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அடியாகத் தான் இருக்கும்.

முதலீட்டாளர்கள் வருத்தம்

முதலீட்டாளர்கள் வருத்தம்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு பொதுவான நிதி சார்ந்த குறிக்கோளைக் கொண்ட ஏராளமான முதலீட்டாளர்களின் சேமிப்பானது, நிதி மேலாளரால் பல்வேறு வகையான பிணையங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இவை நடுத்தர காலத்திலும், நீண்ட காலத்திலும் முதலீட்டின் மதிப்பை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டவையாகும். இத்திட்டங்கள், சீரான வருமானத்தை நாடுகின்ற அல்லது குறுகிய காலத்தில் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்புகின்ற முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது. இந்த நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு வரி திட்டத்தினை கொண்டு வந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: Govt proposes 10% TDS on mutual fund income, please check here details

Government proposes 10 percent TDS on mutual fund income above Rs.5,000, its announced in budget 2020. and Its may hurt investors income.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X