வருமான வரியில் சந்தேகமா? எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஒரு வீட்டை விற்று வரும் லாபத்தில் கூட வரி செலுத்த வேண்டும் தெரியுமா? உங்களுக்கு சொந்த வீடு இருந்தால் நீங்கள் வீட்டு வாடகையைக் கணக்கு காட்டி வரிக் கழிவு பெற முடியாது தெரியுமா (கண்டீஷன்ஸ் அப்ளை)?

 
வருமான வரியில் சந்தேகமா? எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்!

அட தங்கத்தை விற்று வரும் லாபத்தை கூட வருமான வரித் துறையிடம் கணக்கு காட்டி வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் + வட்டி இரண்டுக்குமே வரிக் கழிவு பெறலாம் தெரியுமா? நம்மில் எத்தனை பேருக்கு, இந்த கேள்விகளுக்கு விடை தெரியும்? இந்த கேள்விகளுக்கான விடையை நாங்கள் சொல்கிறோம். கேள்வி கேட்க நீங்கள் தயாரா?

இந்தியா, ஒரு வளரும் பொருளாதாரம். அடுத்த சில தசாப்தங்களில், உலகின் டாப் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வளர்ச்சியோடு, வளர்ச்சியாக வருமான வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வருமான வரி தொடர்பாக தமிழ் குட் ரிட்டன்ஸில் வீடியோக்கள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறோம்.

வருமான வரியில், அடிப்படையான விஷயங்களை பேசிக் கொண்டிருந்த நாங்கள், இனி உங்கள் கேள்விகளுக்கு ஆடிட்டர் மூலமாக விடை கொடுக்க விரும்புகிறோம். எனவே உங்கள் வருமான வரி தொடர்பான சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.

சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் எஸ் பாஸ்கரன், உங்கள் கேள்விகளுக்கு விடை கொடுப்பார். இவர் கடந்த 18 ஆண்டுகளாக பட்டையக் கணக்காளர் சேவையில் இருக்கிறார். வருமான வரி தொடர்பாக பல விஷயங்களைக் கையாண்டு இருக்கிறார்.

எப்படி கேள்வி கேட்பது

1. உங்கள் கேள்விகளை tamilgr@one.in என்கிற மின்னஞ்சலுக்கு தெளிவாக எழுதி அனுப்புங்கள்.

2. ஆழமான கேள்விகளைக் கேட்கும் போது, அதற்குத் தேவையான தரவுகள் மற்றும் விவரங்களையும் மறக்காமல் குறிப்பிடவும்.

3. உங்கள் கேள்விகளுக்கான விடையை தமிழ் குட் ரிட்டன்ஸ் முகநூல் பக்கத்தில் வீடியோவாகவும், தமிழ் குட் ரிட்டன்ஸ் வலைதளத்தில் செய்தியாகவும் பதிவிடுகிறோம்.

இதுவரை தமிழ் குட் ரிட்டன்ஸ் வெளியிட்டுள்ள வருமான வரி தொடர்பான வீடியோக்களைக் காண கீழே கொடுத்து இருக்கும் லிங்கை க்ளிக் செய்யுங்கள். https://www.facebook.com/watch/TamilGoodReturns/3241054319285914/

நீங்கள் கேட்கும் கேள்வி உங்களுக்கு மட்டும் பயன் படாமல், மற்றவர்களுக்கும் பயன்படட்டும். பதில் சொல்ல நாங்க ரெடி, கேள்வி கேட்க நீங்க ரெடியா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Clear doubts related to income tax with Goodreturns Tamil

To clear all your doubts and answer all your questions related to income tax and savings ideas, Reach us Good Returns Tamil. We will clarify your doubts and provide you complete solutions on Income tax.
Story first published: Thursday, July 23, 2020, 14:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X