எது சிறந்தது.. பிக்ஸட் செய்ய எந்த நிறுவனம் சிறந்தது.. என்ன ரேட்டிங்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட, வங்கி அல்லாத நிறுவனங்கள் தான், பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கின்றன.

 

இது மற்ற முதலீடுகளை போல் அல்லாமல், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் லாக் செய்யப்பட்டவுடன், வட்டி விகிதங்கள், சந்தை ஏற்ற இறக்க அபாயம் இல்லாமல் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பானதாக இருக்கும். இதனால் இன்றைய காலகட்டத்திலும் குறைவான வருமான இருந்தாலும், சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது.

அதோடு முன்பெல்லாம், வைப்பு தொகைக்கு முன் கூட்டியே வித்ட்ராயல் செய்யும் போது, அதற்கும் அபராதம் இருக்கும். இல்லையெனில் முன் கூட்டியே பணத்தினை எடுக்க முடியாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் இன்று அதிலும் பல விலக்குகள் உள்ளன. அதோடு முன் கூட்டியேவும் பணத்தினை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.

ஹவ்கின்ஸில் எவ்வளவு?

ஹவ்கின்ஸில் எவ்வளவு?

இப்படி வட்டி கொடுக்கும் சில நிதி நிறுவனங்களில் என்ன வட்டி விகிதம்? எவ்வளவு ரேட்டிங்ஸ்? ஹவ்கின்ஸ் குக்கர்ஸில் வட்டி விகிதம் அதிகபட்சமாக 9% வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 12 - 36 மாதம் கால அவகாசத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா MAA/stable என்ற ரேட்டிங்க்ஸை வழங்குகிறது.

ஸ்ரீ ராமில் எவ்வளவு?

ஸ்ரீ ராமில் எவ்வளவு?

இதே ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸில் 8.09% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 12 - 60 மாதம் கால அவகாசத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனத்திற்கு மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா MAA/stable என்ற ரேட்டிங்க்ஸை வழங்கியுள்ளது. இதே இந்தியா ரேட்டிங்ஸ் tAA என்ற ரேட்டிங்கினையும் வழங்கியுள்ளது.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸின் என்ன வட்டி விகிதம்?
 

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸின் என்ன வட்டி விகிதம்?

இதே ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸில் 8.09% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 12 - 60 மாதம் கால அவகாசத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனத்திற்கு மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் FAAA/negative என்ற ரேட்டிங்ஸை வழங்கியுள்ளது. இதே இந்தியா ரேட்டிங்ஸ் நெகட்டிவ் என்ற ரேட்டிங்கினையும், இக்ரா tAA என்ற ரேட்டிங்கினையும் வழங்கியுள்ளது.

ஹட்கோவில் என்ன விகிதம்?

ஹட்கோவில் என்ன விகிதம்?

ஹட்கோவில் வட்டி விகிதம் 7.30 சதவீதமாகும். இந்த நிறுவனத்தில் 12 - 60 மாதம் கால அவகாசத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனத்திற்கு மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா MAAA/negative என்ற ரேட்டிங்ஸை வழங்கியுள்ளது. இதே இந்தியா ரேட்டிங்ஸ் tAA என்ற ரேட்டிங்கினையும் வழங்கியுள்ளது. கேர் ரேட்டிங்க்ஸ் AAA என்ற ரேட்டிங்கினையும் வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் ஹவுஸிங் பைனான்ஸ்

பஞ்சாப் நேஷனல் ஹவுஸிங் பைனான்ஸ்

பஞ்சாப் நேஷனல் ஹவுஸிங் பைனான்ஸில் 6.50% வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 12 - 120 மாதம் கால அவகாசத்தில் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த நிதி நிறுவனத்திற்கு கிரிசில் நிறுவனம், FAA+/negative, AA/stable என்ற மதிப்பீட்டினை கேர் ரேட்டிங்ஸ் நிறுவனமும் வழங்குகிறது.

பஜாஜ் பைனான்ஸில் என்ன ரேட்டிங்ஸ்

பஜாஜ் பைனான்ஸில் என்ன ரேட்டிங்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் 6.41% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 12 - 60 மாத கால அவகாசத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த நிதி நிறுவனத்திற்கு கிரிசில் நிறுவனம், FAA+/stable என்ற மதிப்பீடும், MAAA/stable என்ற மதிப்பீட்டினை இக்ரா நிறுவனமும் வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Compare top firms FD rates and ratings

Bank FD updates.. Compare top firms FD rates and ratings
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X