கொரோனா வைரஸை காரணம் காட்டி PF பணத்தை எடுக்கலாம்! இந்த அரிய வாய்ப்பில் எவ்வளவு எடுக்கலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ், உலக நாடுகளையும், நாட்டு மக்களையும் துவைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த நேரத்தில் இந்திய அரசிடம் எல்லோரையும் காப்பாற்ற போதுமான பணம் இல்லை என்பதால் சம்பளம் வாங்குபவர்களின் PF பணத்தைக் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்து இருக்கிறது.

நாம் எவ்வளவு ரூபாய் வரை பணத்தை எடுக்கலாம்? இதை எப்படி கணக்கிடுவது என விரிவாகப் பார்ப்போம்.

தட தடவென ஏற்றம் கண்ட தங்கம் விலை.. அதுவும் ஏழு வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்றம்..!

கொரோனா வைரஸ் PF அட்வான்ஸ்
 

கொரோனா வைரஸ் PF அட்வான்ஸ்

வழக்கத்தை விட தற்போது PF அலுவலகம் வேகமாக செயல்படத் தொடங்கி இருக்கிறது போலத் தெரிகிறது. "Settlement of Covid-19 advance claims are being given high priority by EPFO and, for faster relief, you can apply even if you have already made any other claim. We are processing other claims too, but disposal is affected due to lockdown." என பலருக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கலாம்.

அரசு நடவடிக்கை

அரசு நடவடிக்கை

இந்த நெருக்கடியான கொரோனா லாக் டவுனால், பலர் தங்கள் வேலையையே இழக்கும் சூழல் நிலவிக் கொண்டு இருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கும் பொருந்தும். எனவே அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, அரசு சம்பளதாரர்களின் PF பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்து இருக்கிறது.

கவனிக்கவும்

கவனிக்கவும்

PF திட்டத்தில் இணைந்து இருப்பவர்கள் அனைவரும் இந்த கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸ் தொகை பெறலாம். இப்போது பெறும் தொகையை மீண்டும் EPFO அலுவலகத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

எவ்வளவு எடுக்கலாம் 1
 

எவ்வளவு எடுக்கலாம் 1

ஒருவரின் மொத்த PF பாக்கித் தொகையில் அதிகபட்சமாக 75 சதவிகித தொகையை பெறலாம். உதாரணமாக ஒருவருக்கு PF பாக்கித் தொகை 2 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால், அவர் 1,50,000 ரூபாயை கொரோனா வைரஸை காரணமாகக் காட்டி பெறலாம். இது தான் பொதுவான கணக்கு. ஆனால் இதிலும் அரசு ஒரு செக் வைத்திருக்கிறது.

பேசிக் + டிஏ கணக்கு

பேசிக் + டிஏ கணக்கு

ஒருவர் சம்பளமாகப் பெறும் தொகையில் Basic Pay + DA (Dearness Allowance) இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மொத்த தொகையை 3 மாதம் எவ்வளவு பெறுவீர்களோ அவ்வளவு தான் PF தொகையில் இருந்து கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம் என்கிறார்கள்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

உதாரணமாக: ரவி, மாதம் 15,000 ரூபாய் பேசிக் ஆகவும், 5,000 ரூபாயை டிஏ-வாகவும் பெறுகிறார். ஆக மொத்தம் 20,000 ரூபாய் . எனவே 20,000 * 3 மாதம் = 60,000 ரூபாய். ரவிக்கு PF பாக்கித் தொகை எத்தனை லட்சம் இருந்தாலும் சரி, அவர், தற்போது 60,000 ரூபாயை மட்டும் தான் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம்.

குழப்பிக் கொள்ள வேண்டாம்

குழப்பிக் கொள்ள வேண்டாம்

என்னங்க ஒன்னுமே புரியல என குழம்புகிறீர்களா. கவலை வேண்டாம்.

1. PF பாக்கித் தொகையில் 75% பணம்

அல்லது

2. பேசிக் + டிஏ பணம் 3 மாதம் எவ்வளவு பெறுகிறீர்களோ அந்தப் பணம்.

அல்லது

3. நீங்கள் குறிப்பிடும் பணம்.

இந்த மூன்றில் எது குறைவோ, அந்த பணத்தை மட்டும் தான், PF-ல் இருந்து கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம்.

உதாரணம்

உதாரணம்

1. அப்துலுக்கு 5 லட்சம் ரூபாய் PF பாக்கித் தொகை இருக்கிறது. ஆக 5,00,000 * 75% = 3,75,000.

2. அப்துல் பேசிக் + டிஏ என மாதம் 35,000 பெறுகிறார் ஆக 35,000 * 3 = 1,05,000.

3. அப்துல் கொரோன வைரஸைக் காரணம் காட்டி 1,00,000 ரூபாய் தான் அட்வான்ஸ் தொகை கேட்கிறார்.

ஆக மேலே சொன்ன மூன்றில் அப்துல் குறிப்பிட்ட 1,00,000 ருபாய் தான் குறைவு எனவே EPFO அலுவலகம் ஒரு லட்சம் ரூபாயைத் தான் கொடுக்கும்.

Employer + Employee

Employer + Employee

PF பாக்கித் தொகை என்பது Employer பங்கு மட்டுமா அல்லது Employee பங்கும் சேர்த்தா என்கிற கேள்வியும் அதிகம் கேட்கிறார்கள். இரண்டு பங்கும் சேர்த்து இருக்கும் மொத்த பாக்கித் தொகையில் தான் இந்த 75 சதவிகிதம் கணக்கிடப்படும் என EPFO அலுவலகமே தெளிவுபடுத்தி இருக்கிறது.

முன்பே க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள்

முன்பே க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள்

இந்த கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே வேறு சில காரணங்களுக்கு (மருத்துவ செலவுகள், திருமணம், கல்வி, வீடு...) க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள் கூட கொரோனா வைரஸ் க்ளெய்ம் பெறலாமா? என்கிற கேள்வியும் கேட்கிறார்கள். இதற்கு அரசு PF வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ் எம் எஸ்-களிலேயே பதில் இருக்கிறது. ஏற்கனவே க்ளெய்ம் பெறுபவர்கள் கூட, இந்த கொரோன வைரஸைக் காரணம் காட்டி க்ளெய்ம் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த க்ளெய்மை எப்படிப் பெறுவது என்பதை அடுத்த கட்டுரையில் விரிவாக, ஒவ்வொரு படி நிலையாகப் பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus is now a reason for PF withdrawal know how much can you withdraw

The EPFO office is allowing PF subscribers to withdraw due to coronavirus. We are explaining how much can a person withdraw from their PF balances.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more