யூலிப் திட்டம்: இந்த பிரிவினருக்கு தேவையற்றது..? உஷாரா இருங்க மக்களே..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்புயெல்லாம் வங்கிலேருந்து பணம் எடுத்துக்கிட்டு வரும்போதுதான் ஜாக்கிரதையா இருக்கணும், இப்ப பணத்தை எடுத்துக்கிட்டு வங்கிக்கு போகும் போதும் ஜாக்கிரதையா இருக்கணும் போலருக்கு.

 

முதியோர்

முதியோர்

வங்கி வைப்பு நிதி போடப்போகும், இருக்கும் வைப்பு நிதியை புதுப்பிக்கப் போகும் முதியோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நேரமிது. Fixed Deposit Renewal பண்ணுங்கன்னு போய் நின்னா ஊர்பட்ட பொய்களைச் சொல்லி அவங்க தலையில் ULIP திட்டங்களைக் கட்டிறாங்க வங்கி அலுவலர்கள்.

டைட்டானியம் பிளஸ் திட்டம்

டைட்டானியம் பிளஸ் திட்டம்

கணவன், மனைவி இருவரும் ஓய்வு பெற்றவர்கள். ஒரே பிள்ளைக்குக் கப்பலில் வேலை. தனியே இருக்கும் முதியவர்கள் கனரா வங்கியில் இருக்கும் வைப்பு நிதியை நீட்டிக்கப் போனபோது அவர்களை டைட்டானியம் பிளஸ் என்னும் திட்டத்துக்குப் பணத்தை மாத்தப் வங்கி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

 ULIP வகைத் திட்டம்.
 

ULIP வகைத் திட்டம்.

இது ஒரு ULIP வகைத் திட்டம். இதில் சிறிதளவு காப்பீடு இருக்கும் அதுக்கு Mortality Charges போடுவாங்க, அப்புறம் இதுக்கு அதுக்குன்னு கட்டண வரிசை இருக்கும், இவை எல்லாம் போனப்புறம் மிச்சம் இருக்கும் பணம் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யப்படும். 10 ஆண்டுகள் கழிச்சு பங்குச் சந்தையின் போக்கைப் பொருத்து உங்களுக்கு லாபமோ நஷ்டமோ வரக்கூடும்.

கவனிக்க வேண்டி 5 விஷயம்

கவனிக்க வேண்டி 5 விஷயம்

1. ஓய்வூதியம் பெறும் 65 வயதானவருக்கு எதற்கு ஆயுள் காப்பீடு?

2. வயது ஏற ஏற ஆயுள் காப்பீட்டின் ப்ரீமியம் அதிகரிக்குமென்று நமக்குத் தெரியும். 65 வயது காரருக்கு Mortality Charges மிக அதிகமா இருக்கும். அதுவும் கட்டணங்களும் போகக் கொஞ்சூண்டு பணம் மட்டுமே முதலீடு செய்யப்படும்

3. Maturity Amount என்பது வைப்பு நிதிக்கு பொருந்தும். ULIP க்கு எப்படி? திட்ட முடிவின் போதும் கையில் இருக்கும் யூனிட்களின் மதிப்பு என்னவோ அதுதான் பயனருக்கு

4. இதில் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்குத் தொகை 10 ஆண்டுகள் முடிவில் வரணும்னா முதலீடு செய்யும் தொகை முழுவதும் 12% அளவில் வளரணும். காப்பீட்டு ப்ரீமியம் கட்டணம் எல்லாம் போக மிச்சமிருக்கும் பணம் மட்டும் முதலீடு செய்யும் போது அது 20% க்கு மேல் வளர்ந்தால் தான் அந்த அளவுக்குப் பணம் வரும்

5. இதில் ஒத்த ரூபாய்க்கு கூட உத்தரவாதம் கிடையாது.

6. பங்குசார் முதலீடு செய்யணும்னா நேரடியா செஞ்சா முழுத் தொகையும் முதலீடு செய்யப்படும், 10 வருட முடிவில் இத்திட்டத்தை விட மிக அதிக அளவில் பணம் சேர்ந்திருக்கும்

 

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

யூலிப் திட்டம் மூத்த குடிமக்கள் பெரிய அளவில் உதவாது என்று தெரிந்தும் ஏமாறக்கூடிய மக்களிடம் தன்னுடைய டார்கெட் மற்றும் கமிசனுக்காகச் சில வங்கி ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் விற்க தயாராக உள்ளது. நாமதான் கவனமா இருக்கணும்.

வங்கி சேவை

வங்கி சேவை

வங்கிக்கு போனா வங்கி வேலையை மட்டும் பாருங்க. வங்கி தரும் சேவைகள் - வங்கிக் கணக்கு, நடப்புக் கணக்கு, வைப்பு நிதி, கடன்கள், லாக்கர் - இவ்வளவே - ஒவ்வொன்றுக்கும் நீங்க வங்கிக்குக் கட்டணம் தர்றீங்க இவற்றைப் பெறுவது உங்க உரிமை. வங்கி விவகாரங்கள் தவிர வேறு எதையும் (முக்கியமா காப்பீடு, முதலீடு) விவாதிக்காதீங்க.

உஷார் மக்களே

உஷார் மக்களே

காப்பீடுன்னா குடும்பத்திலேயே முகவர் இருக்காங்கன்னு சொல்லுங்க, முதலீடுன்னா என் முதலீட்டு ஆலோசகரைக் கேக்கணும்னு சொல்லுங்க. முக்கியமா உடனே எதிலும் கையெழுத்து போடாதீங்க, ரொம்ப வற்புறுத்தினா Brochure & Quotation கொடுங்க, யோசிச்சு சொல்றேன்னு வந்துட்டு விவரம் தெரிஞ்சவங்க கிட்ட ஆலோசனை கேளுங்க எனப் பேஸ்புக்கில் பாஸ்டன் ஸ்ரீராம் என்பவர் யூலிப் திட்டம் மற்றும் அதன் மூலம் வங்கிகளில் நடக்கும் பிரச்சனை குறித்து விளக்கியுள்ளார்.

Disclaimer

Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி காலி.. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does ULIP scheme is good for senior citizens; facebook post explains how it works

Does ULIP scheme is good for senior citizens; facebook post explains how it works யூலிப் திட்டம்: இந்தப் பிரிவினருக்கு தேவையற்றது..? உஷாரா இருங்க மக்களே..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X