சம்பளதாரர்களுக்கு வட்டியில்லாமல் கடன் பெற எளிய வழி.. எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய கால கட்டத்தில் கடன் என்றாலே எவ்வளவு வட்டி? எந்த வங்கியில் செயல்பாட்டு கட்டணம் குறைவு? பிணையமாக என்ன கொடுக்க வேண்டும். அப்படியே பிணையாக ஏதேனும் கொடுத்தாலும் அவசரத்திற்கு கிடைக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. பல்வேறு வழிமுறைகள் என பல நாட்களாகும்.

 

இதற்கிடையில் சிபில் ஸ்கோர்? வட்டி விகிதம் என பல விஷயங்கள் கவனிக்க வேண்டியுள்ளது.

ஆனால் இதெல்லாம் இல்லாமல் தொழிலாளர்கள் எளிதில் கடன் பெற ஒரு வாய்ப்புண்டு. எனினும் அதற்கு சில விதிமுறைகளும் உண்டு. சரி அதென்ன விதிமுறைகள். யார் யார் தகுதியானவர்கள். எப்படி வட்டியில்லாமல் கடன் பெற முடியும் வாருங்கள் பார்க்கலாம்.

எதற்காக EPF personal loan

எதற்காக EPF personal loan

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஊழியர்களை தங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெற அனுமதிக்கிறது. குறிப்பாக திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல பல காரணங்களுக்காக இந்த EPF personal loan-ஐ பெறலாம்.

வட்டி விகிதம் எப்படி?

வட்டி விகிதம் எப்படி?

இந்த EPF personal loan முன் கூட்டியே உங்களது வருங்கால வைப்பு நிதியை பெறுவதை குறிக்கிறது. ஆக இதற்கு வட்டி விகிதம் இல்லை. எனினும் நீங்கள் இந்த தொகையை திரும்ப செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்த தொகை உங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு வட்டியுடன் கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஈபிஎஃப்ஒ தனது ஊழியர்களை தங்கள் பிஎஃப் கணக்குகளில் இருந்து 90% டெபாசிட்களை ஒரளவு திரும்பப் பெற அனுமதிக்கிறது. இதற்கு வரி விலக்கும் உண்டு.

கல்வி செலவுக்கான கடன்
 

கல்வி செலவுக்கான கடன்

இதே கல்வி செலவுக்காக எனில், ஒரு ஊழியர் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம். எனினும் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்த ஊழியர்கள் மட்டுமே இந்த தொகையை எடுக்க முடியும். இது ஊழியரின் குழந்தைகள் 10ம் வகுப்புக்கு மேலாக செல்லும் போது எடுத்துக் கொள்ளலாம்.

திருமண செலவு

திருமண செலவு

இது ஊழியரின் திருமணம் அல்லது ஊழியரின் குழந்தைகளுக்கான திருமணத்திற்கு கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கும் ஊழியர் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம்.

வீடு கட்ட, வாங்க என்ன நிபந்தனைகள்

வீடு கட்ட, வாங்க என்ன நிபந்தனைகள்

வீட்டை வாங்க அல்லது புதுப்பிப்பதற்கான கடன் பெற சொத்து தொழிலாளர் அல்லது அவரின் மனைவி பெயரில் இருக்க வேண்டும் அல்லது இருவர் பெயரிலும் இருக்கலாம். வீட்டின் கட்டுமானம் கடன் பெற்ற ஐந்து வருட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும், 12 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். புதுப்பித்தல் பணியும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

மருத்துவ செலவுக்கான கடன்

மருத்துவ செலவுக்கான கடன்

இது ஊழியரின் மருத்துவ செலவு அல்லது ஊழியரின் கணவன்/மனைவிக்கான செலவு, அல்லது குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளுக்கு பணம் பெற முடியும். இதே பேரழிவு காலத்திலும் ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இருப்பில் 50% வரை பெற்றுக் கொள்ள முடியும்.

கடனை திரும்ப செலுத்த?

கடனை திரும்ப செலுத்த?

வீட்டுக் கடனை சற்று விரைவில் செலுத்த விரும்புவோர் பிஎஃப்க்கு எதிரான கடனை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதன் மூலமோ கட்டி முடிக்கலாம். எனினும் ஒரு முறை மட்டுமே இந்த வசதியை பெற முடியும். வீட்டு கடன் இஎம்ஐக்களை திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு நபர் 36 மாத அடிப்படை ஊதியங்கள் மற்றும் டிஏ அல்லது ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்கை வட்டி அல்லது மொத்த நிலுவை தொகையை அசல் மற்றும் வட்டியுடன் திரும்பப் பெற தகுதியுடையவர். எனினும் இதற்காக ஊழியர் 10 ஆண்டு காலம் பணியில் இருக்க வேண்டும்.

வீட்டைப் புதுப்பித்தல் & பழுதுபார்த்தல்

வீட்டைப் புதுப்பித்தல் & பழுதுபார்த்தல்

ஒருவர் தனது வீட்டை புதுப்பிக்க, அந்த வீடு விண்ணப்பதாரர் அல்லது அவரின் மனைவி அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். இதற்காக அவர் 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். இதே வீடு பழுது பார்க்க கடன் வாங்க 5 ஆண்டு பணியில் இருக்க வேண்டும். ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். வீடு கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

இபிஎஃப் கடன் பெற ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக ஊழியர் அவரது UAN மற்றும் பாஸ்வேர்டினை பயன்படுத்தி EPFO போர்ட்டலில் உள்நுழையவும்.

அதில் ஆன்லைன் சேவைகள் பகுதிக்குச் சென்று க்ளைம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

க்ளைம் கிளிக் செய்தவுடன், ஒரு புதிய பக்கத்திற்குச் செல்லும். அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும்.

அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு கடன் வாங்க விரும்பும் காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும்.

பின் கையொப்பமிட்டு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும்.

OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Sunmit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்பு உங்களுக்கு கடன் வழங்கும் செயல்முறை தொடங்கும்.

உமாங்க் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்

உமாங்க் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்

இது தவிர அரசின் உமாங் ஆப் மூலமும் நீங்கள் இந்த வசதியினை பெற முடியும்.

இதற்காக ஹோம் பேஜ் சென்று EPFO என்பதை கிளிக் செய்யவும். அதற்கு employee centric services என்ற ஆப்சனில் raise claim என்பதை கொடுக்கவும். இதனை உங்களது UAN மற்றும் OTPயை கொடுத்து லாகின் செய்து கொள்ளவும். இந்த ஆப் மூலம் அரசின் இன்னும் சில சேவைகளையும் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: provident fund loan கடன்
English summary

Employees provident fund loan: check full details

EPF loan.. Employees provident fund loan: check full details
Story first published: Friday, April 9, 2021, 6:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X