2019 - 20 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி 8.5%-ல் இருந்து குறைக்க வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் அமைப்பு சார்ந்த பொருளாதார துறைகளில் (Organized Economy) வேலை பார்க்கும் அத்தனை பேரும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பளம் வாங்கினால் அவர்கள், பிஎஃப் செலுத்த வேண்டி இருக்கும். அப்படி இந்தியாவின் சுமாராக 6 கோடி பி எஃப் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம்.

 
2019 - 20 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி 8.5%-ல் இருந்து குறைக்க வாய்ப்பு!

இந்த 6 கோடி பி எஃப் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பிஎஃப் தொகைக்கு, அரசு அமைப்பான Employees' Provident Fund Organisation (EPFO) ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாகச் கொடுப்பார்கள். அந்த வட்டியை, நம் பிஎஃப் கணக்கிலேயே வரவும் வைத்துவிடுவார்கள்.

கடந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு, பிஎஃப் பணத்துக்கு 8.5 சதவிகிதம் வட்டி கொடுப்பதாகச் சொல்லி இருந்தார்கள். ஆனால் தற்போது, அந்த வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பிரச்சனையால், அரசுக்கு பண வரவு மிகவும் குறைந்து இருக்கிறதாம். எனவே முன்பே அறிவித்த வட்டி விகிதங்களை கொடுப்பது பி எஃப் அமைப்புக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த பி எஃப் அமைப்பு, சொன்ன படி, வட்டி விகிதத்தைக் கொடுக்க முடியுமா என, பி எஃப் அமைப்பின் நிதி முதலீடு மற்றும் ஆடிட் கமிட்டி (finance, investment and audit committee - FIAC) மதிப்பீடு செயய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, பி எஃப் அமைப்பு அறிவித்த 8.5 சதவிகிதம் வட்டித் தொகையை, இதுவரை மத்திய நிதி அமைச்சகம் அனுமதிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் நிதி அமைச்சகம், பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை அப்ரூவ் செய்த பின்னர் தான், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், அதை அதிகார பூர்வமாக அறிவிக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா வைரஸ் காலத்தில், பி எஃப் வாடிக்கையாளர்களுக்கு, பி எஃப் பணத்தைக் கொடுப்பது போன்ற பல நல்ல திட்டங்களை அரசு கொண்டு வந்திருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

இன்னும் இந்த கொரோனா வைரஸால், உலகம் என்ன மாதிரியான மாற்றங்களை எல்லாம் பார்க்கப் போகிறதோ தெரியவில்லை. அரசு மக்களின் எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு செய்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO may reduce 2019 - 20 interest from 8.5 percent

The EPFO organization may reduce financial year 2019 - 20 interest from 8.5 percent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X