6 மாத இஎம்ஐ ஒத்திவைப்பு, கடன்களுக்கான வட்டி தள்ளுபடி பற்றி சொல்லுமா ஆர்பிஐ? எதிர்பார்ப்பில் மக்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் இன்று ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும், தேங்கிக் கிடக்கிறது. லட்சக் கணக்கானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், மரணித்து இருக்கிறார்கள்.

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மத்திய ரிசர்வ் வங்கி, தன் பங்குக்கு சில காரியங்களைச் செய்தது.

அப்படி எதை எல்லாம் ஆர்பிஐ செய்து இருக்கிறது? இனி எதை எல்லா, செய்ய வாய்ப்பு இருக்கிறது எனப்தைப் பார்ப்போம்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

ஆர்பிஐ தன் கையில் இருந்த மிக முக்கிய ஆயுதத்தை இறக்கியது என்றால், அது வட்டி விகிதங்களைக் குறைத்தது தான். ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.75% மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 0.90 % குறைத்தது. இதனால் மக்களூக்கு கிடைக்கும் கடன்கள் குறைந்த வட்டிக்குக் கிடைக்கச் செய்தது.

இ எம் ஐ

இ எம் ஐ

அதோடு தனி நபர்கள் மற்றும் வங்கிக் கடன் வழியாக வியாபாரத்தைச் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு, கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதத்தில் 3 மாத இஎம்ஐ கடன் தவணைகளை ஒத்திப் போட அனுமதி கொடுத்தது ஆர்பிஐ. அதனைத் தொடர்ந்து வங்கிகளும் இந்த ஒத்திவைப்பைக் கொடுத்தார்கள்.

6 மாதம் இஎம்ஐ
 

6 மாதம் இஎம்ஐ

சமீபத்தில் வங்கியாளர்கள், கொரோனா வைரஸ் லாக் டவுனைக் காரணம் காட்டி, 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்தி வைக்கச் சொல்வதாகச் செய்திகள் வெளியாயின. அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி செவி சாய்க்கிறதா? என்பதை இன்று சக்தி காந்த தாஸின் நேர்காணலில் பார்த்துவிடலாம்.

வட்டி பிரச்சனை

வட்டி பிரச்சனை

மிக முக்கியமாக மார்ச் 27, 2020 அன்று, இஎம்ஐ தவணைகளை மட்டுமே ஒத்திவைக்க ஆர்பிஐ அனுமதி கொடுத்தது. கடன் தவணைகளுக்கான வட்டி விகிதங்களை ரத்து செய்வது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. வெறுமனே ஒத்தி வைப்பதால் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு தான் சுமை கூடும். எனவே வட்டி தள்ளுபடி பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் ஆர்பிஐ என்ன முடிவு எடுத்து இருக்கிறது எனத் தெரிந்து விடும். இஎம்ஐ-களை 6 மாதங்களுக்கு ஒத்திப் போடவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த கடன்களுக்கான வட்டி விகிதங்களை மட்டுமாவது குறைத்தால் நன்றாக இருக்கும். என்ன சொல்கிறார்கள் என பார்த்துவிடுவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Expectation from RBI 6 month EMI deferment with complete Interest waiver

6 month Loan EMI deferment with complete Interest waiver from the reserve bank of india those are the expectation now.
Story first published: Friday, April 17, 2020, 9:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X