வேலை போச்சா.. வேலை கிடைக்கவில்லையா.. எப்படி நிதி நெருக்கடியை கையாள்வது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் கோரப்பிடிக்கும் மத்தியில் பலரும் எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. பலர் ஏற்கனவே இந்த பிரச்சனையை அனுபவித்திருக்கலாம். அது வேலையிழப்பு. வேலையின்மை. வருமானமின்மை. வருவாய் இழப்புகள்.

 

கொரோனா காலத்தில் பல லட்சம் பேர் தங்களது வேலையை இழந்து, தங்களது வாழ்வாதாரத்தினை இழந்தனர். பல வகையிலும் இன்னல்களை அனுபவித்தனர் எனலாம். அந்தளவுக்கு இந்த கொரோனா மக்களை பாடாய் படுத்தி வருகின்றது.

உங்கள் முதலீடு இருமடங்காக எந்த திட்டத்தில் முதலீடு.. எவ்வளவு ஆண்டு செய்ய வேண்டும்.. !

தற்போதும் கூட கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், மூன்றாவது அலை பரவல் என்பது இன்னும் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

மூன்றாம் கட்ட பரவல் குறித்து அச்சம்

மூன்றாம் கட்ட பரவல் குறித்து அச்சம்

ஒரு புறம் நிபுணர்கள் அவ்வளவாக மூன்றாம் அலையின் தாக்கம் என்பது இருந்தாலும், இரண்டாம் அலையை போல் மோசமாக இருக்காது என கூறி வருகின்றனர். இது சற்று ஆறுதல் அளிக்குமாறு இருந்தாலும், இது இன்னும் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

நிதி ரீதியிலான பிரச்சனை

நிதி ரீதியிலான பிரச்சனை

ஏற்கனவே முதல் கட்ட அலையின்போதும், இரண்டாம் கட்ட அலையின்போதும் வேலையினை இழந்து தவித்தவர்கள், நிதி ரீதியாக எந்த மாதிரியான பிரச்சனைகளை மேற்கொண்டு இருப்பார்கள் என்பதை தெரிந்திருக்கலாம். இதனை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம் என்பதைத் தான் இதில் பார்க்க விருக்கிறோம்.

பிக்ஸட் டெபாசிட்டுகளை எடுக்கலாம்?
 

பிக்ஸட் டெபாசிட்டுகளை எடுக்கலாம்?

நிலையான வருமானம் தரக்கூடிய வங்கி பிக்ஸட் டெபாசிட், அரசின் சேமிப்பு திட்டங்கள், தொடர் வைப்பு நிதிகள், சிறு முதலீட்டு திட்டங்கள் என நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் இதனை எடுக்கலாம். ஏனெனில் இதில் மற்ற முதலீடுகளை விட வட்டி குறைவாக இருக்கும். ஆக இதனை முதிர்ச்சிக்கு முன்னரே எடுத்துக் கொள்ளலாம். எனினும் இதற்காக கட்டணங்கள் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். மொத்தத்தில் உங்களது மூலதனத்தில் குறையலாம்.

இபிஎஃப் கார்ப்பஸ்

இபிஎஃப் கார்ப்பஸ்

நீங்கள் சம்பளம் வாங்கும் சம்பளதாரர் எனில், இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும். ஆக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணபித்து பெற முடியும்.

திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக, பணம் எடுக்கும் வசதி உண்டு.

இதற்காக நீங்கள் பார்ம் 31-ஐ நிரப்ப வேண்டியிருக்கும். இதே ஆன்லைன் மூலம் என்றால் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

தொழிலாளர்கள் தங்களின் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இது உங்கள் ஓய்வுகால திட்டத்தினை பாதிக்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கிரெடிட் கார்டு நிலுவையை இஎம்ஐ ஆக மாற்றலாம்

கிரெடிட் கார்டு நிலுவையை இஎம்ஐ ஆக மாற்றலாம்

இது பலரும் எதிர்கொள்ளும ஒரு முக்கிய பிரச்சனை. ஏனெனில் நன்றாக இருக்கும் காலத்தில் தாம் தூம் என செலவு செய்துவிட்டு, நெருக்கடியான காலகட்டங்களில் கிரெடிட் கார்டு கடனை கட்ட முடியாமல் தவிப்பதுண்டு. இந்த மாதிரியான காலகட்டத்தில் இஎம்ஐ ஆக மாற்றிக் கட்டலாம். இதற்கான ஆப்சன் ஒவ்வொரு வங்கிகளிலும் உண்டு. எனினும் சில கார்டுகளுக்கு இந்த ஆப்சன்கள் இருப்பதில்லை.

அரசின் நிவாரண சலுகையை பெறலாம்

அரசின் நிவாரண சலுகையை பெறலாம்

கடந்த ஆண்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வங்கி தவணைக்கு அவகாசம், அதன் பின்னர் கடன் மறுசீரமைப்பு என பல சலுகைகளை அளித்தது. ஆக இதுபோன்ற ஆப்சன்களையும் நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இது வட்டி செலவினை அதிகரிக்கலாம்.

சம்பள குறைப்பு ஏற்பட்டால்?

சம்பள குறைப்பு ஏற்பட்டால்?

இந்த கொரோனா காலகட்டத்தில் எனக்கு வேலை போகவில்லை. ஆனால் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என நினைப்பவர்கள், எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம். குறிப்பாக நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது? அதற்கான வழிகள் என்ன? எதிர்காலம் என்பது நிச்சயமற்று இருக்கும் நிலையில், அனைவரும் முன் கூட்டியே இதற்காக திட்டமிட்டு செயல்படுவது நல்ல விஷயம் தான்.

அவசர கால நிதியை அதிகரிக்கலாம்

அவசர கால நிதியை அதிகரிக்கலாம்

உங்களது நிதி ரீதியிலான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது அவசர கால நிதியினை சரியாக பராமரிப்பது என்பது தான். ஏனெனில் திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளை யாராலும் தவிர்க்க இயலாது. அதிலும் வருவாய் இழப்பு காலத்தில் என்றால், இதுவும் கூடுதல் சுமையாக வந்து விடும். ஆக உங்களது சம்பளத்தின் ஒரு பகுதியினை இதற்காக ஒதுக்குவது அவசியம்.

இன்சூரன்ஸ் அவசியம்

இன்சூரன்ஸ் அவசியம்

குறிப்பாக மருத்துவ காப்பீடு என்பது அவசியம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவசர காலக்கட்டங்களில் ஆபத்பாந்தவானாக உதவுவது இது தான். இதன் மூலம் குடும்பத்தார் அவசர காலகட்டங்களில் அடுத்த கையை எதிர்பார்க்கும் நிலை இருக்காது. குறிப்பாக ரிஸ்கான துறைகளில் இருப்பவர்கள் இதனை கட்டாயம் எடுத்துக் கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facing a pay cut or job loss? How you must deal with money distress

Job latest updates.. Facing a pay cut or job loss? How you must deal with money distress
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X