உங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நம்மில் பலரும் நினைப்பது நமது இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, வயதான காலத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான்.

 

ஆனால் நினைப்பதோடு சரி? அதற்கான சரியான திட்டமிடல் என்பது பலரிடமும் இருப்பதில்லை. அப்படியே நினைத்தாலும் எதில் முதலீடு செய்வது? எப்படி வருமானம் பெறுவது என்பதை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ஆக அதனை பற்றித் தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு திடீரென அதிகரிக்கும் கிராக்கி.. காரணம் என்ன?

பென்ஷன் திட்டம்

பென்ஷன் திட்டம்

பொதுவாக ஓய்வு காலத்திற்காக சேமிப்பு என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது பென்ஷன் திட்டம் தான். இது தனி நபர்களின் வருமானத்தின் ஒரு பகுதியினை தங்களின் ஓய்வுக்காலத்திற்காக சேமித்து வைக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வுகாலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஆக ஓய்வுகாலத்தில் இதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.

என்னென்ன பென்ஷன் திட்டங்கள்

என்னென்ன பென்ஷன் திட்டங்கள்

இது ஒத்தி வைக்கப்பட்ட பென்ஷன் திட்டம்.. இது ஒரு ஒற்றை பிரீமியம் மூலம் செலுத்தப்படும் தொகையாகும். முழு ஆயுள் காப்பீடு, உத்தரவாதம் அளிக்கப்பட்ட மரண திட்டம், உடனடி பென்ஷன் திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் ஒற்றை பிரீமியத்தின் மூலம் மாத மாதம் பென்ஷன் பெரும் விதமாக திட்டமிடலாம்.

குறிப்பிட்ட வருடாந்திரம், இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு மாத மாதம் வருமானம் கிடைக்கும் வகையில் செய்து கொள்ளலாம். உத்தரவாத வருமானம், தேசிய ஓய்வூதிய திட்டம் என பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் நமக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

வாடகை வருமானம்
 

வாடகை வருமானம்

உங்கள் பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் தொகையினை, அசையா சொத்துகளில் முதலீடு செய்யலாம். அல்லது இரண்டாம் வருமானமாக அதுவும் நிலையான வருமானம் கிடைக்கும் வகையில், வேறு ஏதேனும் வகையில் முன்பிருந்தே திட்டமிடலாம். அதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு வருமானம் வரும் வகையில் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு வீடு, கடை இது போன்று மாத மாதம் வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்யலாம்.

அதிலும் தற்போது கொரோனா நெருக்கடியின் காரணமாக வங்கிகளில் வட்டி விகிதமும் குறைவாகவே உள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்க சரியான நேரம் தான். எனினும் உங்களது வங்கிக் கடன், உங்கள் கைக்கும் கணிசமான தொகை கிடைக்கும் விதமாக செய்து கொள்ளலாம்.

எனினும் அதிலும் பராமரிப்பு உள்ளிட்ட பல செலவுகள் உள்ளதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வங்கி பிக்ஸட் டெபாசிட்

வங்கி பிக்ஸட் டெபாசிட்

இன்றைய நெருக்கடியான கால கட்டத்திலும் நிலையான வருமானம் கொடுக்கும் ஒரு திட்டம் பிக்ஸட் டெபாசிட். அதிலும் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்காக 8% வரையிலும் கூட வட்டி கொடுக்கின்றன. மூத்த குடி மக்களுக்காக சிறப்பான பிக்ஸட் திட்டங்கள் உள்ளன. இது சந்தை ஏற்ற இறக்கம், பொருளாதார சரிவு இப்படி பல முக்கிய காரணங்களால் பாதிக்கப்படுவதில்லை. வட்டி குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கமும் வருவதில்லை.

இதனாலேயே பெரும்பாலும் பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டங்களில், இது முதலாவதாக உள்ளது. அதோடு மூத்த குடிமக்களுக்கு அதிகவட்டி விகிதம் கொடுப்பதால் இது, மூத்த குடிமக்களுக்கு சரியானதொரு சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

மாத வருமானம் கொடுக்கும் MIP திட்டங்கள்

மாத வருமானம் கொடுக்கும் MIP திட்டங்கள்

மாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், ஒரு திறந்த நிலையில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இது நிலையான வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கிறது.

பொதுவாக மாத வருமான திட்டம் என்பது கடன் மற்றும் பங்குகளின் கலவையாகும். இதில் 65%க்கும் அதிகமான முதலீடுகள் நிலையான வருமானம் தரக்கூடிய, கடன் நிதி, கடன் பத்திரம், வைப்பு சான்றிதழ், பத்திரங்கள், அரசாங்க பத்திரம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் உங்கள் ஓய்வுகாலத்திற்கு தகுந்த வருமானம் வரும் அளவுக்கு முதலீடு செய்து கொள்ளலாம்

சிறு வர்த்தகம் – பகுதி நேர வேலை

சிறு வர்த்தகம் – பகுதி நேர வேலை

இன்று பலரின் விருப்பமே ஓய்வுகாலத்தில் வேலைக்கு போக கூடாது என்பது தான். எனினும் சிலர் தங்களது வயதான காலத்திலும் வீட்டில் முடங்கிக் கிடக்காமல், பகுதி நேரமான வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள், அதன் மூலம் வருமானம் ஈட்ட விரும்புகிறார்கள். குறிப்பாக தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.

இல்லையெனில் தங்களுக்கு ஏற்றாற்போல் சிறு தொழில் செய்யலாம். உதாரணத்திற்கு சிறு கடை வைக்கலாம். ஆக இப்படியாக உங்களது ஓய்வுக்காலத்திற்கு ஏற்றாற்போல வருமானம் ஈட்ட இதுபோன்ற திட்டங்களை திட்டமிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five ideas to generate income for your retirement years

Here we listed five ideas to generate income for your retirement years.. please check here full details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X