அவசரத்துக்கு குறைந்த வட்டிக்கு கடன் வேண்டுமா? இதோ தங்க கடன் இருக்கே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணத் தேவை இருக்கா? மருத்துவ செலவுகள் அல்லது திருமணம் போன்ற செலவுகளுக்கு பணம் உடனடியாக தேவைப்படுகிறதா? கடன் வாங்க முடிவு செய்துவிட்டீர்களா?

அப்படி என்றால் என்ன செய்வீர்கள், வங்கியின் தனி நபர் கடனுக்கு விண்ணப்பிப்பீர்கள். தனி நபர் கடன்களுக்கு இப்போது கூட 10.5 % முதல் 14 % வரை வட்டி வசூலிக்கிறார்கள். ரொம்ப ஜாஸ்தி தான் இல்ல?

இதை விட குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் நல்லது என நினைக்கிறீர்களா? இதோ இருக்கவே இருக்கு தங்க கடன்கள் (Gold Loan). தங்க நகைக் கடனில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், கட்டணங்கள் & வட்டி விகிதங்களை விரிவாகப் பார்ப்போம்.

தங்க நகைக் கடன் அளவு
 

தங்க நகைக் கடன் அளவு

பொதுவாக தங்கத்தை சொத்தாக வைத்து வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன் கேட்டால் தங்கத்தின் மொத்த மதிப்பில் சுமாராக 75 % வரை தான் கடன் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சமீபத்தில் தான் ஆர்பிஐ, தங்கத்தின் மதிப்பில் 90 சதவிகிதம் வரை கடன் கொடுக்கலாம் எனச் சொன்னது. இது 31 மார்ச் 2021 வரை பொருந்தும் எனவும் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ. எனவே தற்போது உங்கள் கையில் இருக்கும் தங்கத்துக்கே அதிக கடன் வாங்கலாம். என்ன வட்டி வசூலிக்கிறார்கள்?

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கி 7.0 - 7.5 %

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.15 - 9.20 %

கனரா வங்கி 7.65 %

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.0 %

பஞ்சாப் & சிந்த் பேங்க் 8.1 - 9.35 %

யுகோ பேங்க் 8.5 %

ஃபெடரல் பேங்க் 8.5 முதல் வட்டியைக் கணக்கிடுகிறார்கள். பல்வேறு வங்கிகளும் நிதி நிறுவனங்கள் தங்க கடன் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் வசூலிக்கும் வட்டி விகிதம் மேலே சொல்லி இருக்கும் வங்கிகளை விட கூடுதலாக இருக்கின்றன.

என்ன விவரங்கள் தேவை

என்ன விவரங்கள் தேவை

சரி தங்க கடன் வாங்க ரெடி. என்ன விவரங்கள் எல்லாம் தேவை என்று கேட்கிறீர்களா? ID proof-ஆக பான் அட்டை அல்லது ஆதார் அட்டை போன்றவைகளைக் கொடுக்க வேண்டி இருக்கும். அதே போல முகவரி ஆதாரத்துக்கு ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்றவைகளைக் கொடுக்க வேண்டி இருக்கும். இவைகள் எல்லாமே அடிப்படையானவைகள் மட்டுமே. ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு தேவையான மற்ற டாக்குமெண்ட்களை அவர்களே கேட்டுப் பெறுவார்கள்.

திருப்பிச் செலுத்தும் காலம்
 

திருப்பிச் செலுத்தும் காலம்

ஒவ்வொரு வங்கியும், நிதி நிறுவனமும், தங்களின் தங்க கடன்களை வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்த கொடுக்கும் கால அவகாசம் மாறுபடுகிறது. ஹெச் டி எஃப் சி வங்கி 3 - 24 மாதங்கள் வரை கால அவகாசம் கொடுக்கிறார்கள். எஸ்பிஐ வங்கி 36 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்கிறார்கள். முத்தூட் ஃபைனான்ஸ் தன் தங்க திட்டத்துக்கு தகுந்தாற் போல கால அவகாசம் கொடுக்கிறார்கள்.

நகைக் கடன் வரம்பு & கட்டணங்கள்

நகைக் கடன் வரம்பு & கட்டணங்கள்

ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு தகுந்தாற் போல வரம்பை நிர்ணயித்து இருக்கிறார்கள். உதாரணமாக எஸ்பிஐ 20,000 - 20 லட்சம் ரூபாய் வரை தங்க கடன் கொடுக்கிறார்கள். ஐசிஐசிஐ 10,000 - 1 கோடி ரூபாய் வரை நகைக் கடன் கொடுக்கிறார்கள். அதே போல தங்க கடன் வாங்கும் போது ப்ராசசிங் கட்டணம், தங்க மதிப்பீட்டுக் கட்டணம், போன்றவைகளையும் நாம் செலுத்த வேண்டி இருக்கலாம். இது போக Documentation fees, Foreclosure charges போன்றவைகளையும் வங்கிகள் வசூலிக்கிறார்கள்.

ப்ராசசிங் கட்டணம் (Processing Fee)

ப்ராசசிங் கட்டணம் (Processing Fee)

பொதுவாக எந்த ஒரு கடன் வாங்கினாலும், அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ப்ராசசிங் கட்டணமாக, நமக்கு கடன் கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் வசூலிப்பார்கள். தங்க கடனைப் பொருத்த வரை, சில வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் ப்ராசசிங் கட்டணத்தை வசூலிக்காமலும் இருக்கிறார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கிறார்கள்.

தங்க மதிப்பீடு கட்டணம் (Gold Valuation Fees)

தங்க மதிப்பீடு கட்டணம் (Gold Valuation Fees)

நாம் தங்க கடன் வாங்கும் போது, அந்த தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, என்ன கேரட், எவ்வளவு கிராம் போன்றவைகளுக்குத் தகுந்தாற் போலத் தான் கடன் வழங்குவார்கள். நாம் கொடுக்கும் தங்கத்தை மதிப்பீடு செய்ய ஒரு கட்டணம் வசூலிக்கலாம். உதாரணத்துக்கு ஹெச் டி எஃப் சி வங்கி 1.5 லட்ச ரூபாய் வரைக்குமான தங்க கடனுக்கு 250 ரூபாயும், அதற்கு மேலான கடன்களுக்கு 500 ரூபாயும் தங்க மதிப்பீடு கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold loan interest rates other fees and repayment period details

Now gold loans are charging less interest than personal loans. We have given the low gold loan interest rate, other fees and repayment period details.
Story first published: Saturday, August 8, 2020, 14:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X