வீடு கட்ட, கார் வாங்க இதுதான் சரியான நேரம்.. பாங்க் ஆப் பரோடாவின் சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரவிருக்கும் விழாக்கால பருவம் தற்போதே களைகட்டத் தொடங்கி விட்டது எனலாம். சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக களையிழந்து போன விழாக்கால பருவம், இந்தாண்டு நன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

 

இரண்டாம் அலை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், மூன்றாம் அலை குறித்தான அச்சம் நிலவி வந்தாலும், மக்கள் மத்தியில் ஒரு விதமான நம்பிக்கையுணர்வு நிலவி வருகின்றது.

இதற்கிடையில் இந்த விழாக்கால பருவத்தில் தேவையினை ஊக்குவிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து மாற்றம் செய்யமலேயே இருந்து வருகின்றது. வட்டி விகிதத்தில் மாற்றமில்லாவிட்டாலும் பல்வேறு வங்கிகள், வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.

வாராக் கடன் வங்கி: நிர்மலா சீதாராமன் திட்டத்திற்கு ரூ.30,600 கோடி அரசு உத்தரவாதம்..!

வட்டி குறைப்பு செய்த வங்கிகள்

வட்டி குறைப்பு செய்த வங்கிகள்

ஏற்கனவே வரலாறு காணாத அளவு வட்டி குறைந்துள்ள நிலையில், வங்கிகளின் இந்த வட்டி குறைப்பானது மேலும் வாடிக்கையாளர்கள் கவனத்தினை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கோடக் மகேந்திரா வங்கி, எஸ்பிஐ வங்கிகள் வீட்டுக் கடனுக்கான சலுகையினை, வட்டி குறைப்பினை அறிவித்தன. இந்த நிலையில் பாங்க் ஆஃப் பரோடாவும் தற்போது அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

பாங்க் ஆஃப் பரோடாவின் சூப்பர் அறிவிப்பு

பாங்க் ஆஃப் பரோடாவின் சூப்பர் அறிவிப்பு

இந்தியாவின் முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா, அதன் வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் விழாக்கால பருவத்தினை கொண்டாட, சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வட்டி குறைப்பினை செய்துள்ளது. பாங்க் ஆஃப் பரோடாவின் இந்த சலுகையானது வீட்டுக் கடன், கார் கடன் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும்.

வீட்டுக் கடன் & கார் கடன்
 

வீட்டுக் கடன் & கார் கடன்

பாங்க் ஆஃப் பரோடா முந்தைய வட்டி விகிதத்தில் 0.25% தள்ளுபடி செய்துள்ளது. அதோடு வீட்டுக் கடனுக்கான செயல்பாட்டு கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. இவ்வங்கியின் வட்டி குறைப்புக்கு மத்தியில் தற்போது வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.75%ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதே கார் கடன் ஆனது 7%ல் இருந்து ஆரம்பிக்கிறது.

இது வீடு வாங்க கட்ட சரியான நேரம்

இது வீடு வாங்க கட்ட சரியான நேரம்

தற்போது பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைத்து வரும் நிலையில் பாங்க் ஆஃப் பரோடாவும் வட்டி விகிதம் மற்றும் செயல்பாட்டு கட்டணத்தினை குறைத்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது தேவையை ஊக்கப்படுத்தும். கொரோனா காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள ரியல் எஸ்டேட் துறையில் வீடு விலையும் சற்று குறைந்துள்ளது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. ஆக இது புதிய வீடு வாங்க கட்ட சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

எப்படி உடனடியாக பெறுவது?

எப்படி உடனடியாக பெறுவது?

இந்த வட்டி சலுகைகளை பெற வாடிக்கையாளர்கள் பாங்க் ஆப் பரோடாவின் நெட் பேங்கிங், டோர் ஸ்டெப் சேவை, மொபைல் பேங்கிங், வங்கியின் இணையம் மூலமாகவும் விண்ணப்பித்து, இந்த சலுகையை உடனடியாக பெறலாம். இது சில்லறை வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த விழாக்கால பருவத்தில் ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை இருக்கலாம்.

இது கார் வாங்க சரியான நேரம்

இது கார் வாங்க சரியான நேரம்

மேலும் இது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் காரணமாக அமையலாம். ஆக வரவிருக்கும் இந்த விழாக்கால பருவத்தில் கார் வாங்கவும் உங்களுக்கு சரியான உகந்த நேரம் எனலாம். ஏற்கனவே தொடர்ந்து மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் தொடர்ந்து கார்களின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news! Bank of baroda cut home loan and car loan rates, it’s a right time to buy car and home

Bank latest updates.. Bank of baroda cut home loan and car loan rates, it’s a right time to buy car and home
Story first published: Friday, September 17, 2021, 13:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X