2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெச்டிஎஃப்சி லிமிடெட் ஸ்பாட் ஆஃபர் என்ற திட்டத்தினை வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்துள்ளது.

 

இது இரண்டு நிமிடங்களில் வீட்டுக் கடனுக்கான (in-principle home loan ) அனுமதியினை வழங்குகிறது.

ஆக இனி எதிர்காலத்தில் ஹெச்டிஎஃப்சி லிமிடெட்-ல் வீட்டில் கடன் வாங்க திட்டமிடுபவர்கள் இந்த ஸ்பாட் ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாரத் பெட்ரோலியம் தனியார்மயமாக்கல் திட்டத்தை கைவிட்ட மோடி அரசு.. ஏன் தெரியுமா..?!

சில நிமிடங்களில் ஒப்புதல்

சில நிமிடங்களில் ஒப்புதல்

ஹெச்டிஎஃப்சி நிதி நிறுவனம் cogno AI இணைந்து இந்த திட்டத்தினை உருவாக்கியுள்ளன. ஆக இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்களில் வீட்டு கடனுக்கு ஒப்புதல் பெற முடியும்.

இன்று அடமானக் கடன் வழங்குனரால் பெறப்பட்ட புதிய கடன் விண்ணப்பங்களில் 91%-க்கும் அதிகமானவை டிஜிட்டல் மூலமாக பெறப்படுகின்றது. இது கொரோனாவுக்கு முன்னதாக 20% கீழாகவே இருந்தது.

கொரோனாவின் வருகைக்கு பின்பு

கொரோனாவின் வருகைக்கு பின்பு

கொரோனாவின் வருகைக்கு பின்பு ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் வளர்ச்சியானது உட்புகுந்துள்ளது. குறிப்பாக வங்கித் துறையில் பல்வேறு அதிரடியான டிஜிட்டல் மாற்றங்கள் வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பும் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கலாம்.

என்ன செய்வது?
 

என்ன செய்வது?

இதற்காக வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது 98670 - 00000 என்ற வாட்ஸ் அப் எண்ணில், உரையாடலை தொடங்கலாம். இதற்காக சில அடிப்படை தகவல்களை கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் வழங்கும் தகவல் அடிப்படையில் உங்களுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிபந்தனை வீட்டுக் கடனுக்காக கடிதம் உடனடியாக அனுப்படுகிறது.

24 மணி நேர சேவை

24 மணி நேர சேவை

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் சேவையினை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக நாள் கணக்கில், மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஹெச்டிஎஃப்சியின் இந்த வசதியானது சம்பளதாரர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன சேவைகள்

என்னென்ன சேவைகள்

இது குறித்து ஹெச்டிஎஃப்சி தரப்பில் இதுபோன்ற புதிய தளத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களின் கனவு வீட்டினை பெற உதவும். இது கடன்களுக்கு மட்டும் அல்ல, சில்லறை டெபாட்சிட்டுகளுக்கான சேவையினையும் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக அனைத்து வாடிக்கையாளர் கோரிக்கைகளுக்காக HDFC Customer Connect என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC ltd launches Spot offer on whats app to provide home loan services

HDFC Ltd has launched a spot offer on WhatsApp to provide an in principle home loan approval
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X