உங்க கார் இன்சூரன்ஸை எடுக்கும் முன்பு இதையெல்லாம் கவனிங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போதைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் பாலிசி என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதிலும் கார் இன்சூரன்ஸ் என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

 

பொதுவாக இந்த கார் இன்சூரன்ஸ் எதிர்பாராதமாக ஏற்படும் விபத்து, திருட்டு, இயற்கை பேரழிவால் ஏற்படக்கூடிய சேதம் இப்படி பலவற்றிற்கும் கார் இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் செய்ய முடியும். ஆனால் இந்த கார் இன்சூரன்ஸ் பாலிசிகள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

உங்க கார் இன்சூரன்ஸை எடுக்கும் முன்பு இதையெல்லாம் கவனிங்க..!

இந்த கார் இன்சூரன்ஸ் ஆனது இரண்டு வகைப்படும். ஒன்று விரிவான காப்பீடு மற்றொன்று மூன்றாம் தரப்பினர் காப்பீடு.
விரிவான காப்பீடு

இந்த விரிவான காப்பீடு உங்களது கார் சேதமடைந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டலோ அதற்கு விரிவான காப்பீட்டினை வழங்குகிறது. இது மூன்றாம் தரப்பு பொறுப்பு பாதுகாப்பு அடிப்படை பாதுகாப்பை மட்டும் பெறுவதில்லை. மேலும் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகன முழுமைக்கும் பாதுகாப்பினை அளிக்கிறது.

மூன்றாம் தரப்பு காப்பீடு
உங்களின் தவறு காரணமாக விபத்து ஏற்பட்டால், மூன்றாம் தரப்புக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். மூன்றாம் தரப்பினர் காப்பீடு அத்தகைய சூழலில் உங்களுக்கு காப்பீடினை வழங்கும். இது மற்றவர்களுடைய சொத்துக்கு உங்களால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணத்தினை வழங்கும்.

ஆக ஒரு நல்ல கார் இன்சூரன்ஸ் என்பது, உங்களது கார் விபத்துக்குள்ளானலோ அல்லது மூன்றாம் நபருக்கு பாதிப்பானலோ, பேரழிவோ எதுவானலும் சரி அதனை கவர் செய்யும் விதமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சொகுசு காரை வைத்திருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் இதுபோன்ற விரிவான காப்பீட்டினை பெற வேண்டும்.

அதோடு நீங்கள் ஒரு முறை ஒரு கார் பாலிசியை தேர்வு செய்தால், அதனை மற்ற நிறுவனங்களின் பாலிசியோடு சேர்த்து ஒப்பிட்டு பார்க்கலாம். அதன் கிளைம் எப்படி? எவ்வளவு பிரிமீயம் செலுத்த வேண்டும் என்பதனை தெரிந்துக் கொள்ள வேண்டும். இதனுடன் துணை பாலிசிகள் மூல்ம் நீங்கள் பெறக்கூடிய கூடுதல் பாதுகாப்பு என்ன? க்ளைம் செய்ய எந்த மாதிரியான செயல்பாடுகள், ஏனெனில் நீங்கள் பாலிசி எடுப்பதே உங்கள் காருக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால் அதற்கு உடனடியாக க்ளைம் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் அது உடனடியாக கிடைக்குமா என்பதனையும் நீங்கள் பாலிசி எடுக்கும்போதே தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அதே போல் நீங்கள் உங்கள் கார் பாலிசியை எடுக்கும் போது ஒரு போதும் தவறான வியவரங்களை கொடுத்திட கூடாது,. அது பின்னர் உங்கள் பாலிசியை க்ளைம் செய்ய முடியாமல் கூட போகலாம். ஆக ஒரு பாலிசியினை தேர்தெடுக்கும் போது உங்களின் தேவை அறிந்து அதற்கேற்ப பாலிசியினை எடுக்க வேண்டும். அது கார் இன்சூரன்ஸ் ஆக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here how to choose your right car insurance policy, please check here all details

Before you start your car insurance, all things to you need know about that.
Story first published: Tuesday, June 23, 2020, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X