இனி வட்டி குறைய வாய்ப்பில்லை.. வீட்டுக் கடன் வாங்க நினைப்போர் இப்பவே வாங்கிடுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

 

இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் குறைப்பு செய்தது.

ஆனால் இந்த வட்டி விகிதத்தில் இதுவரையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுவரையில் 4% ஆகவே தொடர்ந்து கொண்டுள்ளது.

வீட்டு கடன் ஈஎம்ஐ செலுத்த 5 ஸ்மார்ட்டான வழி.. இனி நோ டென்ஷன், லைப் ஜாலி..!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி கூட்டம் ரிசர்வ் வங்கியில் ஆளுனர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனாவின் காரணமாக நிலவி வரும் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் வட்டி விகிதத்தில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.

இது நல்ல விஷயம்

இது நல்ல விஷயம்

பொருளாதாரம் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், இன்னும் சில துறைகள் வளர்ச்சி பாதைக்கு திரும்பவில்லை. ஆக வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் மத்திய வங்கி தரப்பில் கூறப்பட்டது. இது ஒரு வகையில் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கும், இனி புதியதாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களுக்கும் நல்ல விஷயம் என்றே கூறலாம்.

ஆறுதல் தரக்கூடிய நல்ல விஷயம்
 

ஆறுதல் தரக்கூடிய நல்ல விஷயம்

ஏனெனில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதால், வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வகையில் வட்டி விகிதம் குறையாது என்பது கஷ்டமாக இருந்தாலும், வட்டி விகிதம் அதிகரிக்காமல் இருப்பதே ஆறுதல் கொடுக்கும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

ஏனெனில் ஹோம் லோன்கள் ரெப்போ விகிதத்துடன் இணைந்திருப்பதால் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. எப்படியிருப்பினும் வட்டி அதிகரிக்காது என்பதே ஆறுதல் கொடுக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை 7% கீழாகவே உள்ளது.

இனி குறையாதா?

இனி குறையாதா?

8-வது முறையாக ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையினால் வட்டி விகிதம் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பல தரப்பிலும் வட்டி விகிதம் என்பது மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது மேற்கோண்டு வட்டி விகிதம் குறையாது. இது ஸ்டெடியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சரியான தருணம்

இது சரியான தருணம்

எப்படியிருப்பினும் ஏற்கனவே வட்டி விகிதங்கள் மிக குறைவாக உள்ள நிலையில், இது மேலும் குறைந்தாலும், குறையாவிட்டாலும் இது சரியான தருணமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே வட்டி விகிதம் மிக குறைவாகவே உள்ளது. அதோடு பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வட்டி விகிதம் மேற்கொண்டு கடினமாகவே செய்யும்.

எந்த கஷ்டமும் இல்லை

எந்த கஷ்டமும் இல்லை

ரிசர்வ் வங்கியின் இந்த நிலைப்பாடு என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். ஆக பெரும்பாலான வங்கிகள் நிதி நிறுவனங்கள் தங்களது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை அப்படியே வைத்துக் கொள்ளலாம். இதில் எந்த மாற்றமும் இருக்காது என்பது எதிர்பார்த்த ஒன்று தான். ஆக இதில் எந்த வித கஷ்டமும் இல்லை என இந்தியாபுல்ஸ் கவுஸிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் மிட்டல் கூறியுள்ளார்.

வளர்ச்சியினை ஊக்குவிக்கும்

வளர்ச்சியினை ஊக்குவிக்கும்

தற்போது வீட்டுக் கடனுக்கான தேவை என்பது அதிகரித்து வருகின்றது. இது ஹெச்.டி.எஃப்.சியின் ஜூன் காலாண்டில் 181% வளர்ச்சி கண்டுள்ளது. குறைந்த வட்டி கடன் என்பது தற்போது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் பயனளிக்கிறது.

சலுகைகள் அறிவிப்பு

சலுகைகள் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தி எந்த மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏற்கனவே சில சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ மூன்சூன் தமாக்கா என்ற சலுகையில், வீட்டுக் கடனிற்கு 100% செயலாக்க கட்டணத்தினை தள்ளுபடி செய்துள்ளது. இது வீட்டுக் கடன் வாங்குபவர்களை மேற்கோண்டு ஊக்குவிக்கும்.

நல்ல விஷயம் தான்

நல்ல விஷயம் தான்

கடந்த 24 மாதங்களுக்கு முன்பு சுமார் 8.4% ஆக இருந்த வட்டி விகிதம், தற்போது கிட்டதட்ட 15 வங்கிகள் 7% குறைவாக வட்டி விகிதத்தினை வழங்கி வருகின்றன. ஆக வட்டி விகிதம் குறையவில்லை என்பதை விட, அதிகரிக்காமல் உள்ளதே நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home loan interest rates are may not down in future; check details here

Banks & NBFCs may not change home loan interest rates further
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X