அவசர தேவைக்கு கடன்.. வேலையில்லாதவர்கள் எப்படி பெறலாம்.. இதோ சில வழிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவசர தேவைக்கு கடன் வேண்டும் எனில் நாம் அடுத்து செய்வது என்ன? ஏதேனும் வங்கி இணையத்திலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் இணையதளங்களிலோ அப்ளை செய்வோம். அப்படி இல்லை என்றாலும் ஆப் மூலமாக விண்ணப்பிப்போம்.

 

உங்களது முகவரி சான்று, அடையாள சான்று, வாருமான ஆதரமாக வங்கி ஸ்டேட்மெண்ட், பே ஸ்லீப் என கேட்பார்கள். நாமும் அப்லோட் செய்து வாங்குவோம்.

ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது நான் எந்த வேலையிலும் இல்லை. என்னிடம் பே ஸ்லீப் இல்லை. வேலையில்லை. பிறகு நான் எப்படி அவசர தேவைக்கு கடன் வாங்குவது? என்னென்ன வழிகளில் எல்லாம் வாங்கலாம் என பார்க்க விருக்கிறோம்.

வேலையிழந்து தவிப்பு

வேலையிழந்து தவிப்பு

அதிலும் தற்போது கொரோனாவின் காரணமாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மோசமான நிதி நெருக்கடியையும் சந்தித்து வருகின்றனர். சிலர் இந்த அவசர தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். ஏனெனில் வேலையில்லை. பே ஸ்லீப் இல்லை எப்படி கடனுக்கு அப்ளை செய்வது? அடுத்து என்ன செய்வது என தவிப்பவர்கள் ஏராளம். பொதுவாக நீங்கள் கடன் வாங்கும்போது முக்கிய ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படுவது, உங்களுடைய வருமானம் எவ்வளவு என்பதை தான்.

என்ன கடன் பெறலாம்?

என்ன கடன் பெறலாம்?

ஆக அப்படி இருக்கும்பட்சத்தில் நீங்கள் கடன் பெறுவதும் மிக கஷ்டமான விஷயமே. குறிப்பாக பர்சனல் லோன் என்பது கிடைக்காது. ஆனால் இந்த நெருக்கடியான நேரத்திலும் நீங்கள் கடன் பெற சில வழிகள் உண்டு. சற்று யோசித்து பார்த்தால் உங்களுக்கு அது உதவும். குறிப்பாக வேலையில்லா சமயத்திலும் பலருக்கு உதவுவது, நகைக் கடன் என்றாலும், அதுவும் இல்லாத பட்சத்தில் சில வழிகள் உள்ளன.

பிணையக் கடன்
 

பிணையக் கடன்

உங்களுக்கு வேலையில்லாத சமயத்தில் பிணையமாக எதையேனும் வைத்து கடன் பெறலாம். குறிப்பாக நகைக்கடன், இடத்தின் மேல் கடன் வாங்கலாம். அல்லது வேறு ஏதேனும் சொத்துக்கள் இருந்தாலும் அதனை பிணையமாக வைத்தும் கடன் வாங்கலாம். இதற்கு வட்டி விகிதமும் குறைவு. இதற்கு நீங்கள் வருமான ஆதாரம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

துணையின் வருமானத்தினை வைத்துக் கடன்

துணையின் வருமானத்தினை வைத்துக் கடன்

நீங்கள் திருமணம் ஆனவர் என்றால், உங்களது துணைவியின் வருமானத்தை வைத்துக் கடன் பெறலாம். உங்கள் கடன் விண்ணப்பத்தில் அவரின் வருமானத்தினை சேர்க்கலாம். எனினும் இது கடன் வழங்குபவரை பொறுத்தது. பெரும்பாலான வங்கிகள் இதனை அனுமதிக்கின்றன. மனைவியின் வருமானத்தை வைத்து நீங்கள் கடன் பெறும்போது நீங்கள் துணை விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்

இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம்

இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாதம்

கடன் பெற நீங்களும் உங்களின் ரத்த சொந்தமான உறவு ஒருவரும் கடன் விண்ணப்ப படிவத்திலும், கடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போட வேண்டும். அவ்வாறு கையெழுத்து போடும் நபர், கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவராகவும், இணைக்கடன் விண்ணப்பதாரர் (co - applicant) ஆகவும் கருதப்படுவார்.

முதலீடுகள்

முதலீடுகள்

கடன் அளிக்கும் வங்கிகள் அல்லது நிறுவனங்கள் டிவிடெண்ட், வாடகை வருமானம் மூலம் கடனை திரும்ப செலுத்துவதற்கான அடையாளமாக காட்டலாம். ஆக இதன் மூலம் தொடர்ச்சியாக வருமானம் கிடைக்கும்பட்சத்தில் அதனை காரணம் காட்டி கடன் பெற்றுக் கொள்ளலாம்.

Microlending Platforms மூலம் பெறலாம்?

Microlending Platforms மூலம் பெறலாம்?

தற்போது சிறிய அளவில் கடன் பெற பல டிஜிட்டல் தளங்கள் உள்ளன. அவைகள் வேகமாகவும் குறைந்த அளவில் கடனை எளிதாக கொடுக்கின்றன. ஆக அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இது அவசர காலங்களில் உங்களுக்கு உதவும். பெரும்பாலான வங்கிகள் சரியான வேலையில்லாத பொழுது உங்களுக்கு கடன் கொடுக்க யோசிக்கின்றன. அந்த மாதிரியான சமயங்களில் இந்த கடன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loan msme கடன்
English summary

How do you get a loan if you are unemployed?

Loan updates.. How do you get a loan if you are unemployed?
Story first published: Wednesday, April 21, 2021, 20:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X