குழந்தைகளின் கல்விக்காக முதலீடு.. எதில்.. எவ்வளவு முதலீடு.. எது பாதுகாப்பானது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் மிகப்பெரிய செலவமே கல்வி தான். ஏனெனில் இந்த உலகில் சிறந்த கல்வி என்பது இருந்தால், எதையும் உங்கள் குழந்தை சாதிக்கலாம். நம் முன்னோர்கள் கூறியதும் இது தான். உலகின் அழியா செல்வம் என்பது மிகச் சிறந்த கல்வி தான்.

 

ஆக இதை புரிந்து கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கல்வி கட்டணங்கள் என்பது மிக அதிகம். எனினும் பெற்றோர்கள் அதனை கருத்தில் கொள்ளாமல், கடனை வாங்கியாவது படிக்க வைக்கின்றனர்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அன்பான குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எதில் முதலீடு செய்யலாம் என்பது தான்.

எதில் முதலீடு செய்யலாம்?

எதில் முதலீடு செய்யலாம்?

இது குறித்து எனது தோழி ஒருவர் கேட்டாதாவது? நான் எனது குழந்தையின் உயர்கல்விக்காக 19 ஆண்டுகளுக்குள் சேமிக்க விரும்புகிறேன். எனக்கு 16 லட்சம் அல்லது அதற்கு மேலாக தேவை. ஆக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எது பாதுகாப்பானது? ஏனெனில் இது குழந்தைகளின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டது.

எவ்வளவு தேவை?

எவ்வளவு தேவை?

இது உயர் கல்வியில் 10 சதவீத பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு, 19 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் குழந்தையின் உயர் கல்விக்காக நீங்கள் சுமார் 97 லட்சம் ரூபாய் சேமிக்க வேண்டும். பணவீக்கம் காரணமாக இன்று 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்விக் கட்டணம், 19 ஆண்டுகள் கழித்து 97 லட்சம் ரூபாயாக அதிகரிக்க கூடும்.

எதில் முதலீடு எவ்வளவு முதலீடு?
 

எதில் முதலீடு எவ்வளவு முதலீடு?

ஆக நீண்டகால நோக்கில் ஈக்விட்டிகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என்பதால், உங்கள் குழந்தைகளின் உயர்கல்வி கார்பஸை கருத்தில் கொண்டு, ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சராசரியாக மாதம் 12% வருமானம் ஈட்டினால், ஈக்விட்டி பண்டுகளில் மாதந்தோறும் 12,000 ரூபாய் முதலீடு செய்யலாம். இதன் மூலம் 19 ஆண்டுகளில் 97 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கார்பஸை பெறலாம்.

ஃபண்டுகள் பரிந்துரை?

ஃபண்டுகள் பரிந்துரை?

Axis Bluechip Fund or Axis Focussed 25 Fund

Mirae Asset Large Cap Fund

Parag Parikh Flexi Cap Fund

Tata Index Sensex Fund or HDFC Index Sensex Fund

மேற்கண்ட பரிந்துரைகள் பிசினஸ் நிபுணர்கள் பரிந்துரைப்பது என்றாலும், உங்கள் வருமானம், குழந்தையின் வயதுக்கு ஏற்பட்ட, சரியான நிதி ஆலோசகரிடம் விவாதித்து முதலீடு செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much monthly SIP needed for kid’s higher education? Check details

Mutual fund investment updates.. How much monthly SIP needed for kid’s higher education? Check details
Story first published: Tuesday, April 13, 2021, 13:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X