மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் வேண்டும்.. எதில் முதலீடு செய்யலாம்.. எவ்வளவு முதலீடு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பலருக்கும் இருக்கும் கவலையே இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஓய்வூகாலத்தில் ஆவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு மாதம் மாதம் கிடைக்கும் பென்ஷன் போல் இருந்தால் நன்றாக இருக்குமே, என்பது எண்ணமாக இருக்கும்.

 

அப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டம் தான் அரசின் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம்.

ஏனெனில் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அந்த கவலையைத் தூக்கி எறிய முடியும்.

யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்?

யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்?

அரசின் இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் மூலம், வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், சிறுதொழில் செய்பவர்கள், என அனைவருக்கும் பென்ஷன் கிடைக்க இந்த திட்டம் வழிவகை செய்யும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் தொடங்கலாம்?

வெளிநாடு வாழ் இந்தியர்களும் தொடங்கலாம்?

இந்த திட்டத்தில் எவ்வளவு முன்கூட்டியே முதலீட்டைத் தொடங்குகிறார்களோ அவ்வளவு அதிகமான லாபத்தைப் பார்க்க முடியும். என்பிஎஸ் என அழைக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டம் ஒரு விருப்ப ஒய்வூதிய திட்டமாகும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது.

வயது தகுதி என்ன?
 

வயது தகுதி என்ன?

18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், வாடிக்கையாளர் கேஒய்சி விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் அரசின் இந்த தேசிய சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளலாம். முதலீட்டாளர்களின் 60 வயதான பிறகு முதிர்வு தொகையை பென்ஷனாக பெறலாம்.

எப்படி தொடங்குவது?

எப்படி தொடங்குவது?

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இது குறித்தான விவரங்களை அறிய முதலீட்டாளர்கள் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் அரசின் இன்னொரு திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

பிரான் எண் வழங்கப்படும்

பிரான் எண் வழங்கப்படும்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் 12 இலக்க எண் வழங்கப்படும். அது பிரான் எண் (PRAN) என்று அழைக்கப்படும். அல்லது ஓய்வூதிய கணக்கு எண் என்று அழைக்கப்படும். இந்த ஓய்வூதிய கணக்கு எண், ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

டயர் 1 கணக்கு விவரம்

டயர் 1 கணக்கு விவரம்

அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இந்த கணக்கில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.

டயர் 2 கணக்கு விவரம்

டயர் 2 கணக்கு விவரம்

டயர் 2 ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

எப்படி பணம் பெருகும்?

எப்படி பணம் பெருகும்?

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தைப் பங்குச்சந்தை, ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்ய முடியும். ஒரு வேலை இந்த முதலீட்டை உங்களால் நிர்வகிக்க முடியாது என்றால் பின்வரும் ஃபண்டு நிர்வாகிகளைத் தேர்வு செய்துக்கொள்ளாம். ICICI Prudential Pension Fund, LIC Pension Fund, Kotak Mahindra Pension Fund, Reliance Capital pension Fund, SBI pension Fund, UTI Retirement solutions Pension fund, HDFC pension management company, DSP Blackrock Pension Fund, உள்ளிட்ட ஃபண்டு நிர்வாகிகள் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு உங்கள் பணத்தைப் பிரித்து முதலீடு செய்வார்கள்.

மாதம் ரூ.15,832 பென்ஷன்

மாதம் ரூ.15,832 பென்ஷன்

தற்போது 30 வயதாகும் ஒருவர் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து அவருக்கு 60 வயதாகும் போது, மாதம் எவ்வளவு தொகை முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? வாருங்கள் பார்க்கலாம். என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 2,000 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 15,832 ரூபாய் பென்ஷனாக பெறலாம். (HDFC Pension.com என்ற தளத்தின் மூலம் கணக்கிடப்பட்டது.

மாதம் ரூ.3000 செலுத்தினால்

மாதம் ரூ.3000 செலுத்தினால்

30 வயதில் ஒருவல் மாதம் 3,000 ரூபாய் செலுத்த தொடங்கினால், 60 வயதிற்கு பிறகு, 23,748 ரூபாய் பென்ஷனாக பெறுவார்.

இதே மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 39,581 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.

இதே மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 79,162 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.

மாதம் ரூ1 லட்சம் வேண்டும்

மாதம் ரூ1 லட்சம் வேண்டும்

என்பிஎஸ் திட்டத்தில் மாதம் 14,000 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் 1,10,828 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.

என்பிஎஸ் மாதம் 15,159 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷனாக பெறலாம். 30வயதில் ஒருவர் மாதம் 19000 ரூபாய் முதலீடு செய்ய தயாரானால், அவரின் 60 வயதுக்கு பிறகு மாதம் 1,50,409 ரூபாய் மாத பென்ஷனாக பெறுவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How should i invest get Rs.1 lakh pension every month? Where should i invest?

Investment updates.. How should i invest get Rs.1 lakh pension every month? Where should i invest?
Story first published: Sunday, May 23, 2021, 10:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X