தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் மூலம் பணப்பரிவர்த்தனை என்பது மிக அதிகம். ஏனெனில் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை அவ்வப்போது ஏடிஎம் மூலமாக சிறிது சிறிதாக எடுத்துக் கொள்கின்றனர்.

 

அதிலும் இன்றைய காலகட்டத்தில் பில் பேமெண்ட்டுகள், ஷாப்பிங், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், நகைக்கடை எங்கு சென்றாலும் கார்டினையே பயன்படுத்துகின்றனர். அந்தளவுக்கு ஏடிஎம் என்பது மக்கள் மத்தியில் பரவி விட்டது.

21 ஆண்டுகளில் இல்லாத அளவு எரிபொருள் தேவை சரிவு.. எகிறிய பெட்ரோல், டீசல் விலை.. காரணம் என்ன..!

இப்படி எதற்கெடுத்தாலும் கார்டினை பயன்படுத்தும் மக்கள், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தங்களது ஏடிஎம் தொலைந்து விட்டால் தவறாக பயன்படுத்தப்பட்டு விடுமோ என்று மிக பயப்படுவர். இன்னும் சிலர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல், அந்த பதற்றத்திலேயே இருப்பர்.

கார்டு தொலைந்த பதற்றம்

கார்டு தொலைந்த பதற்றம்

ஆனால் சில சமயங்களில் இதுவே உங்களுக்கு பிரச்சனையாக மாறக்கூடும். ஏனெனில் தொலைந்து போன கார்டுகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளது. அந்த சமயத்தில் வேறு கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமே? அப்படி விண்ணப்பித்து மீண்டும் நம் கைக்கு வர ஒரு வார காலம் ஆகுமே என்ற பதற்றமும் கூடவே தொற்றிக் கொள்ளும். ஆனாலும் அந்த சமயத்தில் தொலைந்து போன ஏடிஎம் கார்டை பிளாக் செய்ய தோன்றாது.

எப்படி பிளாக் செய்யலாம்?

எப்படி பிளாக் செய்யலாம்?

ஆக முதலில் உங்களது கார்டு தொலைந்து விட்டால் பதற்றமடையாமல், முதலில் அதனை பிளாக் செய்யுங்கள். இதனால் உங்களது கார்டு தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க முடியும். அதிலும் இன்றைய காலகட்டத்தில், ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது எஸ் எம் எஸ் மூலமாகவோ கார்டினை பிளாக் செய்யும் ஆப்சன் உண்டு. அதோடு உங்களது இணைய வங்கியிலும் பிளாக் செய்யலாம். அல்லது கஸ்டமர் கேருக்கு போன் செய்தும் பிளாக் செய்யலாம். ஆக மொத்தத்தில் எளிதில் உடனடியாக பிளாக் செய்ய முடியும்.

கஸ்டமர் கேருக்கு கால் செய்யலாம்?
 

கஸ்டமர் கேருக்கு கால் செய்யலாம்?

கனரா வங்கியின் 1800 425 0018 என்ற கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்தும் பிளாக் செய்யலாம்.

இந்த நம்பருக்கு கால்செய்து, முதலில் ஐவிஆர் மொழியை தேர்வு செய்து கொண்டு, அதன் பிறகு ஏடிஎம் கார்டு பிளாக் என்ற ஆப்சனுக்கு பதிலளிக்கவும்.

அதன் பிறகு உங்களது கால், வங்கி அதிகாரிக்கு இணைக்கப்படும். உங்களது தொலைந்து விட்டது அல்லது வேறு என்ன காரணம் என கூறி, கார்டினை பிளாக் செய்யலாம்.

வங்கி அதிகாரிக்கு உங்களது கார்டு விவரங்களை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். அது தவிர இன்னும் சில கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். அதாவது உங்களது வங்கிக் கணக்கு எண், உங்களது முழுப்பெயர், உங்களது பிறந்த தேதி, மொபைல் நம்பர் என சில விவரங்கள் கேட்கப்படலாம்.

ஆக மேற்கண்ட கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலை கூறிவிட்டால், உங்களது கார்டு பிளாக் செய்யப்படும்.

வங்கி கிளைக்கு செல்லலாம்?

வங்கி கிளைக்கு செல்லலாம்?

உங்களது வங்கி கணக்கு உள்ள வங்கி கிளைக்கு நேரடியாக சென்று, சம்பந்தப்பட்ட ஊழியரிடன் கூற வேண்டும். அதோடு உங்களது 16 இலக்க ஏடிஎம் நம்பரையும் கூற வேண்டும்.

வங்கிக் கிளையில் உங்கள் கணக்குடன் வெரிபை செய்து, உங்களது விபரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் கார்டு பிளாக் செய்யப்படும்.

இணைய வங்கியிலும் பிளாக் செய்யலாம்

இணைய வங்கியிலும் பிளாக் செய்யலாம்

உங்களது கனரா வங்கியின் இணைய வங்கியினை லாகின் ஐடி & பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

பிறகு, மெனு பாரில் உள்ள request என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் டெபிட் கார்டு ஹாட் லிஸ்டிங் விருப்பதை கொடுக்கவும்.

அதன்பிறகு நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டினை தேர்தெடுக்கவும். சரியான அட்டையை தேர்தெடுத்த பின்னர் அதனை confirm என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு உங்களது பரிவர்த்தனையை பாஸ்வேர்டினை கொடுத்து சப்மிட் கொடுக்கவும். இதன் பிறகு உங்களது கார்டு பிளாக் செய்யப்படும்.

எஸ் எம் எஸ் மூலம் பிளாக் செய்யலாம்?

எஸ் எம் எஸ் மூலம் பிளாக் செய்யலாம்?

இது மேற்கண்ட எல்லாவற்றையும் விட மிக எளிதான விரைவான வழி இது தான். ஏனெனில் இந்த ஆப்சனில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருந்தால் எளிதில் பிளாக் செய்துவிடலாம்.

இதில் CAN என டைப் செய்து, ஒரு Space விட்டு, HOTLISTDC ஒரு Space விட்டு 16 இலக்க ஏடிஎம் கார்டு நம்பரை கொடுக்க வேண்டும். அதாவது CAN HOTLISTDC XXXXXXXXXXXXXXXX என டைப் செய்து அனுப்ப வேண்டும். (X என்ற இடத்தில் உங்களது டெபிட் கார்டு நம்பரை கொடுக்க வேண்டும்.)

இந்த எஸ்எம்எஸினை 5607060 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இந்த எஸ்எம்எஸினை கட்டாயம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கொடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to block canara bank ATM card? Check details

ATM card updates.. How to block canara bank ATM card? Check details
Story first published: Sunday, April 11, 2021, 20:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X