படுத்தி எடுத்து வரும் மழை வெள்ளம்.. எப்படி சரியான வாகன இன்சூரன்ஸை தேர்வு செய்வது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் என்றாலே 10 அடி தள்ளிபோகும் காலம் போய், தற்போது மக்களின் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் இந்த கொரோனா என்றாலும், இன்றளவிலும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுபிப்பு என்பது குறைவாகவே உள்ளது எனலாம்.

 

அப்படியே மீறி இன்சூரன்ஸ்களை தொடர்ந்தாலும், அதனை நாம் எப்படி தேர்தெடுப்போம், முதலில் எந்த திட்டத்திற்கு பிரீமியம் குறைவு என்று தான்.

RBI Retail Direct Scheme: அரசு பத்திரத்தில் முதலீடு செய்வது எப்படி.. முழு விபரம்..!!

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது இன்சூரன்ஸ்களை வாங்க வைக்க விரிக்கும் ஒரு மாய வலை தான் இந்த குறைந்த பிரீமியத்தில் இன்சூரன்ஸ். இது வாகனம் மட்டும் அல்ல, எந்த இன்சூரன்ஸ் திட்டமாக இருந்தாலும் பொருந்தும்.

பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ள வாகனங்கள்

பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ள வாகனங்கள்

அதெல்லாம் சரி? எப்படி ஒரு சரியான இன்சூரன்சினை தேர்வு செய்வது? அதிலும் தற்போது சென்னையில் உள்ள பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோரின் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் இதனை க்ளைம் செய்ய முடியுமா? இதன் பிறகு ஒரு இன்சூரன்ஸினை எடுக்க எந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும், வாருங்கள் பார்க்கலாம்.

IDV எவ்வளவு?

IDV எவ்வளவு?

முதலில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் IDV(insured Declared Value). உதாரணத்திற்கு உங்கள் வாகனத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் எனில், அதே 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கும்போது, உங்களுடைய 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காருக்கு, 8 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் விகிதம் (IDV) செய்யப்பட்டிருக்கும்.

குறைவாக க்ளைம் கிடைக்கும்
 

குறைவாக க்ளைம் கிடைக்கும்

எதிர்காலத்தில் ஒருவேளை உங்கள் கார் காணாமல் போனால், உங்களுக்கு 8 லட்சம் ரூபாய் தான் க்ளைம் செய்ய முடியும். ஆக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு, உங்களுக்கு 8 லட்சம் ரூபாய் தான் உங்களுக்கு கிடைக்கும். ஆக இன்சூரன்ஸ் செய்யும் முன்பு IDV மதிப்பு எவ்வளவு என தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.

பிரீமியம் எவ்வளவு?

பிரீமியம் எவ்வளவு?

ஒரே ரக காருக்கு ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பிரீமியத்தினை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் அந்த பிரீமியம் மூலம் முழு காப்பீடும் செய்யப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பொதுவான ஒரு இன்சூரன்ஸினை எடுக்கும்போது, உங்களது காருக்கான செலவில் பகுதியினை தான் க்ளைம் செய்ய முடியும்.

இதுவே (zero dep) zero depreciation policy எடுக்கும்போது அந்த காருக்கு எவ்வளவு செலவாகின்றதோ? அந்த செலவினை முழுக்க கொடுப்பார்கள்.

கேஷ்லெஸ் சர்வீஸ் சிஸ்டம்

கேஷ்லெஸ் சர்வீஸ் சிஸ்டம்

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் கேஷ்லெஸ் சர்வீஸ் சிஸ்டம் என்பது இருந்து வருகின்றது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சர்வீஸ் செண்டர்களுடன் லிங்கில் இருப்பார்கள். ஆக இந்த பாலிசிகளை எடுக்கும்போது உங்களது காருக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் செலவுகள் ஏற்படும்போது, அதனை நீங்கள் கையில் இருந்து செலுத்தியாக வேண்டும் என்பதில்லை. மேலும் ஏதேனும் பிரச்சனை எனும்போது நேரிடையாக இன்சூரன்ஸ் நிறுவனமே அந்த சர்வீஸ் சென்டர்களுக்கு செலுத்தி விடுவார்கள். நீங்கள் காரினை விட்டு சரிசெய்து கொண்டு வரலாம். உங்கள் கையில் இருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

க்ளைம் சரியாக கொடுக்கிறார்களா?

க்ளைம் சரியாக கொடுக்கிறார்களா?

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சரியான முறையில் க்ளைம் செய்கிறார்களா? சில நிறுவனங்கள் சிறு சிறு காரணங்களுக்காக கூட க்ளைம் கொடுப்பதை தவிர்க்கின்றன. ஆக இதனை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுவது நல்லது.

உதரானத்திற்கு சில நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை நீங்கள் மீண்டும் ஸ்டார்ட் செய்து விட்டால், அதனை க்ளைம் செய்ய முடியாது என்பார்கள். ஆக இது போன்ற பல விஷயங்கள் உள்ளன.

ஆட் ஆன் பிளான்கள்

ஆட் ஆன் பிளான்கள்

சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல ஆட் ஆன் பிளான்களை வைத்திருப்பார்கள். குறிப்பாக இன்ஜின்களுக்கு என்று தனியாக இருக்கும்,

NCB - no claim Bonus - நீங்கள் ஒரு ஆண்டில் இன்சூரன்ஸினை எதற்காகவும் க்ளைம் செய்யாவிடில், அடுத்தாண்டில் உங்களது பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும். ஆக இதனையும் கவனத்தில் கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to choose the right motor insurance plan: check details

How to choose the right motor insurance plan: check details/ படுத்தி எடுத்து வரும் மழை வெள்ளம்.. எப்படி சரியான வாகன இன்சூரன்ஸை தேர்வு செய்வது.
Story first published: Friday, November 12, 2021, 16:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X