பொதுவாக பலரும் இன்றைய கால கட்டத்தில் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இது. கொரோனா காலகட்டத்தில் கையில் காசு இல்லாத நேரத்தில் கிரெடிட் கார்டினை பலரும் பயன்படுத்தியிருப்போம்.
ஆனால் பெரியளவிலான தொகையினை ஒரே நேரத்தில் கட்ட முடியாமல் தவித்திருக்கலாம். பலரும் இந்த கடனை மாத தவணையாக மாற்ற முடியாதா? அப்படி மாற்றினால் எளிதாக இருந்திருக்குமே. அப்படி மாற்றினால் அதிகப்படியான வட்டி விகிதத்தினையும் தவிர்க்க முடியுமே என்று எண்ணியிருப்பர்.
ஆனால் பலருக்கும் இதனை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமலேயே உள்ளது. சரி வாருங்கள் எப்படி கிரெடிட் கார்டு கடனை EMI ஆக மாற்றுவது என்று பார்க்கலாம்.
அமேசானுக்கு பெரும் பின்னடைவு.. ரிலையன்ஸ் -பியூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு CCI ஆதரவு..!

ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு
ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை ஆன்லைனிலேயே, இஎம்ஐ- ஆக மாற்றலாம். அப்படி மாற்றுவதன் மூலம் நீங்கள் நிலுவையில் உள்ள கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஆப்சன் ஹெச்டிஎஃப்சியின் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் இந்த கிரெடிட் கார்டு ஸ்மார்ட்இஎம்ஐ ஆப்சனை தேர்தெடுத்தவுடன், உங்கள் கிரெடிட் கார்டு கடன் வரம்பு பிளாக் செய்யப்படும்.

இந்த கடனை இஎம்ஐ ஆக மாற்ற முடியாது?
ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய தங்கம் அல்லது நகைகள் மீதான கடனை, இஎம்ஐ ஆக மாற்ற முடியாது. அதேபோல 60 நாட்களுக்கும் மேல் ஆன கடன் பரிவர்த்தனைகளை இஎம்ஐ ஆக மாற்ற முடியாது. ஆக இதனையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப முன்னதாக முடிவு எடுக்க வேண்டும்.

உங்களது கார்டில் இஎம்ஐ வசதி உண்டா?
கிரெடிட் கார்டு கடனை இஎம்ஐ ஆக மாற்றுவதற்கு முன்பு, உங்களது கிரெடிட் கார்டுக்கு அந்த வசதி உள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி உங்களது கடனை இஎம்ஐ ஆக மாற்ற முடியும் என்றால், அதனை எப்படி மாற்றுவது? வாருங்கள் பார்க்கலாம்.

நெட் பேங்கிங்கில் எப்படி இஎம்ஐ ஆக மாற்றுவது?
உங்களது கிரெடிட் கார்டு கடனை- இஎம்ஐ ஆக நெட் பேங்கிங்-ல் அல்லது போன் பேங்கிங்-ல் மாற்றிக் கொள்ளலாம்.
இதற்காக உங்களது நெட் பேங்கிங் வசதியினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் கார்டு என்ற ஆப்சனை கிளிக் செய்து, அதில் transaction என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு ஸ்மார்ட் இஎம்ஐ (smart EMI) என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
அதனை கிளிக் செய்யும்போது நீங்கள் செலுத்த வேண்டிய தொகையானது உங்களது இணைய வங்கி பக்கத்தில் தெரியவரும். அதில் நீங்கள் உங்களது ஸ்பெசிபிக் கார்டு (specific card) என்ற ஆப்சனை தேர்தெடுக்கவும்.
அதன் பிறகு உங்களது நிலுவை தொகை எவ்வளவு? smartEMI எவ்வளவு என்ற ஆப்சனும் அங்கு இருக்கும். அதில் நீங்கள் smartEMI- க்கு தகுதியானவர் தானா? என்ற ஆப்சனும் இருக்கும். ஆக அதில் நீங்கள் தகுதியானவர் தான் என்றால், convert என்ற ஆப்சனை கிளிக் செய்து, EMI ஆக மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கு முன்பாக உங்களது கடன் விவரம், எவ்வளவு தொகை என்ற எல்லா விவரங்களும் காணப்படும். அதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அப்படி மாற்றும் பட்சத்தில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும்.

போன் பேங்கிங்கில் எப்படி EMI ஆக மாற்றுவது?
போன் பேங்கிங்கில் உங்களது கிரெடிட் கார்டு கடனை EMI ஆக மாற்ற, கஷ்டமர் கேரை தொடர்பு கொள்ளலாம். உங்களது தகவல்களை உறுதிபடுத்திக் கொண்ட பின்னர், விவரங்களைக் கூறலாம். பிறகு உங்களது கிரெடிட் கார்டு நிலுவையை மாத இஎம்ஐ ஆக மாற்றம் செய்ய, நீங்கள் தகுதியானவர் என்றால் உடனடியாக மாத தவணையாக மாற்றப்படும்.