டிஜிலாக்கர் கணக்கினை எப்படி தொடங்குவது? இதன் பயன் என்ன? இதோ விவரங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஜிலாக்கர் என்பது இந்திய மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களைக் கிளவுட்-ல் சேமித்து வைக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் சேமிப்பு சேவையாகும்.

 

பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் தொடக்கப்பட்டது.

இந்த திட்டம் பிசிகல் ஆவணங்களை குறைத்து டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆவணத்தினை டிஜிட்டல் முறையில் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு உங்களின் அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக சேமித்து கொள்ள முடியும்.

என்னென்ன ஆவணங்கள் அப்லோட் செய்யலாம்?

என்னென்ன ஆவணங்கள் அப்லோட் செய்யலாம்?

இந்த டிஜிலாக்கர் மூலம் நீங்கள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாலிசி ஆவணங்கள், ஆதார் கார்டு, வண்டி ஆர்சி புத்தகம், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றையும் அப்லோடு செய்து கொள்ளலாம். ஒரு முறை நீங்கள் பதிவேற்றம் செய்து கொண்டால் போதுமானது. அதனை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

எப்படி டிஜிலாக்கர் கணக்கினை தொடங்குவது?

எப்படி டிஜிலாக்கர் கணக்கினை தொடங்குவது?

Digilocker.gov.in என்ற தளத்தில் sign up செய்து கொள்ளவும். அல்லது பிளே ஸ்டோரில் சென்று இந்த ஆப்பில் sign up செய்து கொள்ளலாம். அதில் உங்களது முழுப்பெயர், முகவரி, ஆதார் எண்ணில் செய்யப்பட்ட மொபைல் எண், பிறந்த தேதி, ஈ மெயில் ஐடி உள்ளிட்ட வற்றை கொடுத்து சப்மிட் கொடுத்தால் செக்யூரிட்டி பாஸ்வேர்டு வரும். இதனை கொண்டு பாஸ்வேர்டினை உருவாக்கிக் கொள்ளவும்.

லாகின் செய்து கொள்ளலாம்
 

லாகின் செய்து கொள்ளலாம்

இதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் நம்பரை கொடுத்து டிஜிலாக்கருடன் இணைக்க வேண்டும். நீங்கள் ஆதார் நம்பரை கொடுத்த பிறகு OTP என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதனை கொடுத்து பதிவு செய்து கொண்ட பிறகு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள்

பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள்

பின் Pull Partner Documents என்ற பகுதிக்கு சென்று பதிவேற்றம் செய்ய இருக்கும் ஆவணங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்த விபரங்களை உள்ளிட வேண்டும். அதில் ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதியை நம்மால் எடிட் செய்ய இயலாது. டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வண்டி ஆர்சி உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் ஒத்துப்போக வேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ் நம்பரை நாம் பதிவிடும்போது, டிஜிலாக்கர் அதனை சாலை போக்குவரத்து துறை ஆவணங்களுடன் அதை ஒப்பிட்டு பார்க்கும். உங்களது விபரங்கள், நேஷனல் ரெஜிஸ்டர் டேட்டாபேஸில் சரியாக இருக்கும்பட்சத்தில் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிட்டல் கையெழுத்து, உங்களது டிஜிட்டல் டிரைவிங் லைசென்சில் பதிவாகும்.

ஆவணங்களுக்கு பாதுகாப்பு

ஆவணங்களுக்கு பாதுகாப்பு

உங்களது லைசென்ஸ் குறித்த விபரங்கள், நேஷனல் ரெஜிஸ்டர் டேட்டாபேஸில் இல்லாதபட்சத்தில், உங்களால், டிஜிலாக்கர் சேவைகளை பயன்படுத்த இயலாது. வண்டியின் ஆவணங்களை பாதுகாத்தல், மழை, வெயிலில் இருந்து காத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து டிஜிலாக்கர் உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.

என்ன பயன்கள்

என்ன பயன்கள்

அடையாள ஆவணம் மற்றும் முகவரி ஆவணமாக அரசு அலுவலகங்களில் கேட்கும் இடத்தில் இந்த டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்துவதன் மூலம், நாம் தேவையில்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். டிஜிட்டல் ஆர்சி மற்றும் டிரைவிங் லைசென்ஸ், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிட்டல் கையெழுத்தினை பெறுவது அவசியமாகும். பின் இதன் பிடிஎப் பிரதிநிதியினை நாம் கேட்கும் இடத்தில் காண்பித்துக்கொள்ளலாம். இல்லையெனில் டிஜிலாக்கர் மொபைல் அப்ளிகேசனில் கியூஆர் கோடு தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியும், நமது ஸ்மார்ட்போனிலேயே, இந்த ஆவணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how to create Digilocker account? Check details

Digilocker updates.. How to create Digilocker account? Check details
Story first published: Thursday, February 11, 2021, 22:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X