ஓய்வுகாலத்திற்கு ரூ.2 கோடி.. அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் செய்வபர்கள் என பலருக்கும் தங்களின் ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஆதங்கத்தினை போக்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம்.

 

இந்த திட்டம் ஓய்வுகாலத்தில் ஓய்வூதியம் என பல அம்சங்களையும் சேர்த்து வழங்கும் திட்டமாக உள்ளது. அதிலும் அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் என்பதால், மிக பாதுகாப்பான, அதிக ரிஸ்க் இல்லாத சிறந்த திட்டமாகும்.

மக்களுக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா.. வங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!

அதோடு வருவாயும் கணிசமான அளவு கொண்டு சீரான வருமானம் கொடுக்கும ஒரு திட்டமாகவும் உள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது, ஓய்வூகாலத்திற்கு 2 கோடி ரூபாய் கார்ப்பஸ் வேண்டும்? அப்படி எனில் நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எங்கு இந்த கணக்கினை தொடங்க வேண்டும்? மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

மில்லியனர் ஆக சிறந்த வழி

மில்லியனர் ஆக சிறந்த வழி

நீங்கள் ஒரு மில்லியனராக வேண்டுமெனில் பல திட்டங்கள் சந்தையில் உண்டு. உதாரணத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சந்தை உள்ளிட்ட பல ஆப்சன்களும் உண்டு. ஆனால் பங்கு சந்தை போன்றவற்றில் கவனம் செலுத்திய போதிய அவகாசம் இல்லை எனில், சந்தையுடன் தொடர்பில் உள்ள தேசிய ஓய்வூதிய திட்டம் சிறந்த ஆப்சனாகும். '

இரண்டு முறையில் முதலீடு செய்யலாம்

இரண்டு முறையில் முதலீடு செய்யலாம்

சந்தையுடன் தொடர்பில் உள்ள இந்த திட்டத்தில் இரண்டு முறையில் உங்களது பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று பங்கு சந்தை (ஈக்விட்டி), மற்றும் கடன் சந்தை, அதாவது அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் இதற்காக கணக்கினை தொடங்கும்போது 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்து கொள்ள முடியும்.

வருவாய் அதிகம்
 

வருவாய் அதிகம்

இது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை விட அதிக வருமானம் பெற முடியும். ஆக நீங்கள் எதிர்காலத்தில் ஒரு கோடீஸ்வரர் ஆக இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். அதிலும் அரசின் திட்டமாக இருப்பதால், மிக பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

இந்த திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், இந்த திட்டம் சிறந்த தேர்வு எனலாம். உதாரணத்திற்கு இந்த திட்டத்தில் 25 வயதான ஒருவர் முதலீடு செய்ய நினைகிறார் என வைத்துக் கொள்வோம். மாதம் 5,400 ரூபாய், அதாவது ஒரு நாளைக்கு 180 ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொண்டால், அவரது ஓய்வுகாலத்திற்காக 35 வருடங்கள் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டிற்கு சுமார் 10% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் ஓய்வுபெறும்போது அவரது கையில் 2.02 கோடி ரூபாய் இருக்கும்.

முழு விபரம் என்ன?

முழு விபரம் என்ன?

25 வயதில் முதலீடு செய்ய பயனாளர் ஆரம்பிக்கிறார்.

மாதம் 5,400 ரூபாய் முதலீடு

மொத்தம் 35 வருடம் முதலீடு

வருமான மதிப்பீடு - 10%

மொத்த முதலீட்டு தொகை - ரூ.22.68 லட்சம்

மொத்த வட்டி விகிதம் - ரூ.1.79 கோடி

மொத்த ஓய்வூதியம் - ரூ.2.02 கோடி

வரி சேமிப்பு - ரூ.6.80 லட்சம்

வித்ட்ராவல் விதிமுறைகள்

வித்ட்ராவல் விதிமுறைகள்

என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றியில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்குட்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, முழு கார்பஸினையும் பெற முடியும். அதுவும் இந்த ஓய்வுதியம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் முழுமையாக பெற முடியும்.

மாத ஓய்வூதியம் எவ்வளவு?

மாத ஓய்வூதியம் எவ்வளவு?

மற்றவர்கள் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும். 60% தொகையை எடுக்கும்போது 1.21 கோடி ரூபாய் தொகையை பெறலாம். வட்டி விகிதம் 6% என வைத்துக் கொண்டால், ஒவ்வொரு மாதமும் சுமார் 40,000 ஓய்வூதியமாக பெறலாம்.

ஓய்வூதிய கணக்கு விபரம்

ஓய்வூதிய கணக்கு விபரம்

வருடாந்திர திட்டத்தில் - 40%

வட்டி மதிப்பீடு - 6%

பெறப்பட்ட மொத்த தொகை - ரூ.1.21 கோடி

மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.40,477

இந்த திட்டத்தில் எவ்வளவு முன்னதாக முதலீடு செய்கிறோமோ அந்தளவுக்கு பெரிய கார்பஸினை பெற முடியும். ஓய்வூதியமும் அதிகளவில் பெற முடியும்.

30 வயதில் முதலீடு

30 வயதில் முதலீடு

இதே மற்றொரு நபர் மாதம் 5,400 ரூபாய் முதலீட்டினை, தனது 30 வயதில் செய்ய ஆரம்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்.

வயது - 30 வருடம்

முதலீடு மாதம் - ரூ.5,400

முதலீட்டு காலம் - 30 வருடம்

வருமானம் மதிப்பீடு - 10%

மொத்த முதலீடு - ரூ.19.44 லட்சம்

பெறப்படும் வட்டி விகிதம் - ரூ.1.01 கோடி

பென்ஷன் - ரூ.1.20 கோடி

30 வயது - ஓய்வூதிய கணக்கு

30 வயது - ஓய்வூதிய கணக்கு

வருடாந்திர திட்டத்தில் - 40%

வட்டி மதிப்பீடு - 6%

பெறப்பட்ட மொத்த தொகை - ரூ.72.56 லட்சம்

மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.20,188

வயது அதிகரிக்க அதிகரிக்க உங்களது ஓய்வூதியம் என்பது குறையும் என்பதால், அதற்கேற்ப உங்களது முதலீட்டினை அதிகரிக்கலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஓய்வூதிய திட்டமிடல்

ஓய்வூதிய திட்டமிடல்

என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு கார்பஸினையும் பெற முடியும். எனினும் சாதரணமாக ஒருவர் ஒரே நேரத்தில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.

TIER-1 - திட்டம்

TIER-1 - திட்டம்

இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது.

எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும்.

இந்த கணக்கில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

TIER-2 - திட்டம்

TIER-2 - திட்டம்

இரண்டாவது திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான, கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம்.

சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

ஆக பயனாளர்கள் இதனையும் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to get Rs.2 crore after retirement through National pension scheme? how much i should invest? Check details here

If you want to become a crorepati, now you can opt for national pension scheme. You can get higher returns than other govt schemes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X