முதலீடு செய்யாமல் வருமான வரியை குறைக்க எளிய வழி.. மாதசம்பளக்காரர்களுக்கு அதிக நன்மை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020-21ஆம் நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான வருமான வரியைக் கணக்கிடும் முக்கியமான பணியைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 

வருமான வரித்துறை நாம் செய்யும் பல முதலீடுகளும், செலவுகளுக்கும் வரிச் சலுகை அளிக்கிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவிலான தொகையை ஒவ்வொரு வருடமும் சேமிக்க முடியும்.

இந்த நிதியாண்டு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடைசி நிமிடத்தில் வருமான வரியைச் சேமிக்க முதலீடு மட்டும் வழி இல்லை, நீங்கள் செய்யும் பல செலவுகளுக்கும் வருமான வரி விலக்கு பெற முடியும். 2020ல் பல்வேறு காரணங்களால் வருமானத்தைப் பெரிய அளவில் இழந்த பலருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த வகையில் எந்தெந்த செலவுகளுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

டியூஷன் பீஸ்

டியூஷன் பீஸ்

இன்றளவில் கல்விக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உங்கள் குழந்தைகளுக்கான கல்வி செலவுகளை வருமான வரிப் பிரிவு 80சி கீழ் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை பெற முடியும்.

டியூஷன் பீஸ் உதாரணம்

டியூஷன் பீஸ் உதாரணம்

உதாரணமாக இரண்டு குழந்தைகளுக்கு வருடம் 60000 ரூபாய் அளவிலான தொகையை டியூஷன் பீஸ் ஆகச் செலுத்தி இருந்தால் நீங்கள் 80 சி பிரிவின் கீழ் 1.2 லட்சம் ரூபாய்க்கு வருமான வரிச் சலுகை பெறலாம்.

வருமான வரி விலக்கு
 

வருமான வரி விலக்கு

மேலும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்திய தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறலாம். அதிகப்படியாக 2 குழந்தைகளுக்கான செலவுகளில் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டுக் கடன் சலுகை

வீட்டுக் கடன் சலுகை

நீங்கள் ஆசை ஆசையாக வாங்கிக் கனவு வீட்டை வங்கியில் வீட்டுக் கடன் உதவியுடன் வாங்கியிருந்தாலும், நீங்கள் வீட்டுக்கடனுக்குச் செலுத்தும் அசல் அதாவது Principal தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும். அதன் மூலம் வருடம் அதிகப்படியாக 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி

வீட்டுக் கடனுக்கான வட்டி

இதேபோல் பிரிவு 24 கீழ் வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டி தொகைக்கும் வருமான வரி விலக்கு பெற முடியும். பொதுவாக வீட்டுக்கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தும் போது Principal தொகையும், வட்டி தொகையும் சேர்த்துத் தான் செலுத்துகிறோம். ஆதலால் பிரிவு 24 கீழ் வருடம் 2 லட்சம் ரூபாய் அளவிலான தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

வீட்டுக் கடனுக்கான பிற சலுகைகள்

வீட்டுக் கடனுக்கான பிற சலுகைகள்

வீட்டுக் கடன் பிரிவில் வட்டி மற்றும் அசல் தொகையைத் தாண்டி பத்திர செலவுகள் மற்றும் பதிவு கட்டணம் வாயிலாகச் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும். இதேபோல் நீங்கள் வாங்கிய வீடு அரசின் மலிவு விலை வீட்டுத் திட்டத்தின் கீழ் இருந்தால் கூடுதலாக 80EEA பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் மற்றும் செக்அப் செலவுகள்

ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் மற்றும் செக்அப் செலவுகள்

மருத்துவச் செலவு மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்குச் செய்யும் செலவுகளுக்கு 80டி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும். இதன் மூலம் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே இருக்கும் சிறு குடும்பத்திற்கு வருடம் 5,000 ரூபாய் மருத்துவப் பரிசோதனைகளுக்கும், 25,000 ரூபாய் தொகை மருத்துவக் காப்பீடுகளுக்குச் செலுத்திய தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

இதேபோல் 60வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் இருக்கும் குடும்பத்திற்குக் கூடுதலாக 25,000 ரூபாய் வருமான வரிச் சலுகை பெற முடியும். இதன் மூலம் 80டி பிரிவின் கீழ் வருடம் 50000 ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.

ஈபிஎப், எல்ஐசி ப்ரீமியம்

ஈபிஎப், எல்ஐசி ப்ரீமியம்

மேலும் ஒவ்வொரு மாதம் நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து பிடிக்கப்படும் பிஎப் தொகைக்கு வருமான வரிச் சலுகை உண்டு. இதேபோல் லைப் இன்சூரன்ஸ் தொகைக்குச் செலுத்திய ப்ரீமியம் தொகைக்கும் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும். 80சி பிரிவின் கீழ் அதிகப்படியாக 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே வருமான வரி விலக்கு பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கல்விக் கடன் சலுகை

கல்விக் கடன் சலுகை

உங்களுக்கு, உங்கள் மனைவிக்கு, குழந்தைகளுக்கு எடுக்கப்பட்ட கல்விக் கடனுக்குச் செலுத்தப்பட்ட வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும். இந்தச் சலுகையை 80E பிரிவின் கீழ் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to save tax without investments: Easy tips for common people

How to save tax without investments: Easy tips for common people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X