ஐசிஐசிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு, டெபிட் கார்ட் அல்லது ஏடிஎம் கார்ட் இல்லாமல், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை வழங்குகிறது.
டெபிட் கார்டைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்களில் இருந்து பணத்தை பாதுகாப்பாகவும், எளிதாகவும் எடுக்க ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் அப்ளிகேஷனான 'ஐமொபைல்' மூலம் சாத்தியமாகிறது.
இந்த சேவை மூலம், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கியின் 15,000 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியுமாம்.

என்ன பயன்கள்
1. டெபிட் கார்டு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதே போல ஏடிஎம் பின்னைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
2. 15,000 ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்களில் டெபிட் கார்ட் இல்லாமல், பணத்தை வெளியே எடுக்கலாம்.
3. நாள் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வரை பணத்தை வெளியே எடுக்கலாம்
4. iMobile அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாதுகாப்பாக பணத்தை வெளியே எடுக்கலாம்.

எப்படி iMobile -ஐப் பயன்படுத்தி கார்ட் இல்லாமல் பணம் எடுப்பது
1. iMobile'-ல் லாகின் செய்யவும்.
2. அதன் பின், ‘சேவைகள்' ஆப்ஷனை தேர்வு செய்து, அதில் ‘‘Cash Withdrawal at ICICI Bank ATM' என்பதைத் தேர்வு செய்யவும்.
3. தேவையான தொகையை நிரப்பி, கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்து, 4 இலக்க தற்காலிக பின்னை உருவாக்கி சமர்ப்பிக்கவும்.

கார்ட் இல்லாமல் பணம் எடுப்பது எப்படி
4. அதன் பின் உங்கள் மொபைளுக்கு ஒரு OTP வரும்.
5. அருகில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-க்குச் சென்று, அதில் Cardless Cash Withdrawal-ஐ தேர்வு செய்து உங்கள் மொபைல் எண், ஓடிபி போன்றவைகளைக் குறிப்பிடுங்கள்.
6. அதன் பின் உங்கள், தற்காலிக பின்னை குறிப்பிட்டு, தேவையான பணத்தை குறிப்பிடுங்கள். ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம், நீங்கள் குறிப்பிட்ட பணத்தைக் கொடுக்கும்.

அடுத்த நாள் இரவு வரை
இப்படி ஐசிஐசிஐ வங்கியின் ஐமொபைல் வழியாக, ஐசிஐசிஐ வங்கி ஏடிம் இயந்திரத்தில், டெபிட் கார்ட் இல்லாமல், பணத்தை வெளியே எடுக்க செய்யும் ரெக்வஸ்ட் மற்றும் ஓடிபி, அடுத்த நாள் இரவு வரை காலாவதி ஆகாமல் இருக்குமாம். அதற்குள் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-ல் இருந்து பணத்தை வெளியே எடுத்துவிட வேண்டுமாம்.