பிக்ஸட் டெபாசிட்டினை மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், வருமானம் குறைவு என்றாலும், இன்றைய காலகட்டத்திலும் பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வருமான வரி சலுகை கிடையாது. ஆனால் குறைந்த நேரத்திலேயே கூட எடுத்துக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு உங்களது டெபாசிட் தொகையை 7 முதல் 10 வருட கால அவகாசத்திற்கு, உங்களுக்கு ஏற்றவாறு ஒன்றை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்யலாம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, ஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பது தான். இன்று நாம் பார்க்கவிருக்கும் வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமாகும். இந்த வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
எஸ்பிஐ வங்கி சேவைகள் முடக்கம்.. ATMகள் வழக்கம் போல் செயல்பாடு..!
- இதில் 7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
- 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%
- 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.00%
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.00%
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.00%
- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - 3.50%
- 121 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையில் - 3.50%
- 185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.40%
- 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - 4.40%
- 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையில் - 4.40%
- 290 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.40%
- 1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 4.90%
- 390 நாட்கள் முதல் 18 மாதத்திற்குள் - 4.90%
- 18 மாதம் முதல் 2 வருடத்திற்குள் - 5.00%
- 2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.15%
- 3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.35%
- 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.50%
- 5 வருடம் (80C FD) - அதிகபட்சம் ரூ.1.50 லட்சம்) - 5.35%
இந்த வட்டி விகிதமானது ஐசிஐசிஐ வங்கியின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது கடைசியாக அக்டோபர் 21 அன்று மாற்றப்பட்டது.