இனி ATM தேவையில்லை.. ஸ்மார்ட்போன் போதும்.. எங்கு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி ஏடிஎம்-களில் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ளலாம்.

 

அப்படி ஒரு அம்சமான வசதியினைத் தான் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. இது பழைய திட்டம் தான் என்றாலும் பலருக்கும் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரிவதில்லை.

அதெல்லாம் சரி ஏடிஎம்மில் எப்படி கார்டு இல்லாமல் பணம் எடுப்பது. விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இண்டிகோவின் அதிரடி திட்டம்.. ஜனவரி இறுதிக்குள் டிக்கெட் ரத்து செய்தவர்களுக்கு ரீபண்ட்..!

ஐசிஐசிஐயின் ஐமொபைல் பே

ஐசிஐசிஐயின் ஐமொபைல் பே

வங்கிகள் நாளுக்கு நாள் தங்களது டிஜிட்டல் வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், எப்படியெல்லாம் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்தலாம் என யோசித்து ஒவ்வொரு வசதியினையும் கொண்டு வருகின்றன. முடிந்தமட்டில் வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய தேவை தவிர வங்கிகளை நாடத் தேவையில்லை என்பதற்கு ஏற்ப ஐசிஐசிஐ வங்கி, ஐமொபைல் பே (iMobile Pay) என்ற வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 என்னென்ன பயன்கள்

என்னென்ன பயன்கள்

ஆக இதன் மூலம் இனி நீங்கள் ஏடிஎம் செல்லும் போது அவசியம் டெபிட்கார்டுகளை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக் கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் வங்கிகளுக்கு செலவும் மிச்சம். வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளுக்கு படையெடுக்கும் நிலையும் மாறும் என்று எதிர்பார்க்கின்றன. அதோடு இதன் மூலம் ஏடிஎம் குளோனிங், ஏடிஎம் திருட்டு இப்படி பல மோசடிகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் வங்கியாளர்கள்.

எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம்
 

எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ளலாம்

வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் ஐசிஐசிஐ வங்கியின் ஐமொபைல் பே ஆப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலமாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையத்தில் சென்று, ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். தினசரி இந்த ஆப்பினை பயன்படுத்தி 20 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

யுபிஐ ஐடியாகவும் பயன்படுத்தலாம்

யுபிஐ ஐடியாகவும் பயன்படுத்தலாம்

ஐமொபைல் பே ஆப்பில் யுபிஐ ஐடியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பேமெண்ட்கள், ரீசார்ஜ்கள், பணம் அனுப்புதல், சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட பல சேவைகளை செய்து கொள்ள முடியும். இது தவிர டிக்கெட்டுகள், டிராவலிங் நேரங்களில் டிக்கெட் எடுத்தல் என பல நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது மொபைல் எண்ணில் உள்ள காண்டக்ட் நம்பர்களுக்கும் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

வாய்ஸ் மூலம் பணம் அனுப்பலாம்

வாய்ஸ் மூலம் பணம் அனுப்பலாம்

இது தவிர இந்த ஆப் மூலம் • குரல் சார்ந்த பணம் வழங்கல்கள்( Voice based payments) குரல் அடிப்படையிலான கட்டளைகளால், வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு நிதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். குரல் உதவியாளர் சேவை (voice assistant service) பயன்படுத்தப்படுகிறது.

எந்த வங்கியில் அக்கவுண்ட் இருந்தாலும் பயன்படுத்தலாம்?

எந்த வங்கியில் அக்கவுண்ட் இருந்தாலும் பயன்படுத்தலாம்?

ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல, இந்த ஐமொபைல் பே-யினை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் யுபிஐ ஐடியுடன் வங்கிக் கணக்கினை இணைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆக இதன் மூலம் எளிதாக உங்களது பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

உடனடி பணப்பரிமாற்றம்

உடனடி பணப்பரிமாற்றம்

இந்த ஐமொபைல் பே கூகுள் பே, போன் பே போலத்தான். ஆக கட்டணம் இன்றி நீங்கள் உடனடியாக பரிமாற்றத்தினை செய்து கொள்ளலாம். குறிப்பாக பெட்ரோல் பங்குகள், காய்கறி, மளிகை, உணவகங்கள், ஹாஸ்பிட்டல்ஸ், தியேட்டர்கள் என பல இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல வங்கிக் கணக்குகளை இணைத்துக் கொள்ளலாம்

பல வங்கிக் கணக்குகளை இணைத்துக் கொள்ளலாம்

வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இந்த யுபிஐ ஐடியில் இணைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. எனினும் முதன்மை கணக்கினை அடிப்படையாக வைத்து யுபிஐ ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். அதோடு இந்த சேவை மூலம் கிரெடிட் கார்டு செயல்பாட்டுக் கட்டணம் இன்றி வாங்கிக் கொள்ளலாம். கடன் வாங்கிக் கொள்ளலாம். கார் கடன், பர்சனல் கடன் என பலவற்றை உடனடியாக வாங்கிக் கொள்ள முடியும். இதனை தவிர பல அம்சங்கள் இந்த ஐமொபைல் பேயில் உள்ளது. ஆக மற்ற விவரங்களை https://www.icicibank.com/mobile-banking/imobile.page என்ற வங்கியின் இணைய பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI iMobile pay.. Want to withdraw cash without a debit card? Here is how to do it

ICICI iMobile pay.. Want to withdraw cash without a debit card? Here is how to do it
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X