சம்பளம் கிடைத்தவுடன் மாதம் ரூ.1000 முதலீடு.. கோடிக் கணக்கில் லாபம்.. எப்படி சாத்தியம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நம்மில் பலருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை எனில், அது நீங்கள் 5,000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி, மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி, அதில் கொஞ்சமேனும் முதலீடு செய்ய வேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என நினைப்போம்.

 

ஆனால் இதனை எத்தனை பேர் செயல்படுத்துகிறோம் என கேட்டால் அதற்கு பதில் இல்லை. ஏனெனில் இன்றும் யோசிக்கிறோமே தவிர, செயல்படுத்துவதில்லை.

எனினும் இன்றைய காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பின்னர் இது அதிகரித்துள்ளது.

ரிக்ஷா ஓட்டுனருக்கு ரூ.3 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ்..உ.பியில் பரபரப்பு..!

எதில் முதலீடு செய்யலாம்

எதில் முதலீடு செய்யலாம்

குட் ரிட்டர்ன் ரீடர் ஒருவர் நான் இப்போது தான் வேலைக்கு சேர்ந்துள்ளேன். எனது சம்பளம் 10,000 ரூபாய் தான், நான் எதில் முதலீடு செய்வது? எனக்கு சொந்தமாக இடம் உள்ளது? ஆனால் தற்போது வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். ஆக எதிர்காலத்தில் வீடு கட்ட வேண்டும். என்னுடைய திருமண செலவும் உள்ளது? ஆக எனக்கு 1 கோடி ரூபாய் இலக்கு? இதனை அடைய நான் எதில் முதலீடு செய்யலாம்? எனக்கு தற்போது 24 வயதாகிறது? எந்த திட்டம் உகந்தது என கேட்டிருந்தார்.

முதலீட்டுக்கு எது உகந்தது?

முதலீட்டுக்கு எது உகந்தது?

இது குறித்து நிபுணர்களிடம் பேசியபோது, நீண்டகால முதலீடு, அதுவும் மாத மாதம் முதலீடு செய்ய திட்டம் இருக்கிறது? அவரின் இலக்கு பெரியளவில் இருப்பதால், அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். அதுவும் பணவீக்கத்தின் அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். ஆக ரிஸ்க் எடுக்காமல் இலக்கினை அடைவது கஷ்டம். உதாரணத்திற்கு வங்கி பிக்சட் டெபாசிட் அல்லது ஆர்டி உள்ளிட்ட திட்டங்களில் 5 - 6% வருமானம் இருக்கும். இதே பங்கு சந்தைகளில் நீண்டகால நோக்கில் நல்ல வருமானம் கிடைக்கும் என்றாலும், அதில் கவனம் செலுத்தாவிட்டால், அதே அளவு ரிஸ்கும் உண்டு. ஆக அதனை அனுதினமும் கவனித்தாக வேண்டும். ஆக தினசரி பணிபுரிந்து வரும் நபர்களுக்கு இது சரிவராது என்பதால், பெஸ்ட் ஆப்ஷன் மியூச்சுவல் ஃபண்ட் தான்.

மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது?
 

மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது?

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டில் நல்ல லாபகரமான முதலீடுகளாக உள்ளன. குறிப்பாக நீங்கள் முதலீடு செய்து அனுதினமும் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்காக ஒரேடியாக பார்க்கமலும் இருக்க கூடாது. ஆனால் அடிக்கடி இதனை பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த வருடம் நல்ல லாபம் கொடுத்த ஒரு ஃபண்ட் அடுத்த வருடமும் அதே அளவு ஏற்றம் காணுமா? என்பது சந்தேகம் தான். நம் முதலீடுகளை ஃபண்ட் மேனேஜர்ஸ் கவனித்து கொண்டு இருந்தாலும், எந்த ஃபண்ட் எப்படியுள்ளது? இதனை மாற்றலாமா? வேண்டாமா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

பிரித்து முதலீடு செய்யலாம்

பிரித்து முதலீடு செய்யலாம்

ஆக அடிக்கடி நேரம் கிடைக்கும்போது உங்களது போர்ட்போலியோவினை சரி பார்க்க வேண்டும். மேலும் உங்களது முதலீடுகளை ஒரே ஃபண்டில் குவிக்காமல் பரவலாக பிரித்து முதலீடு செய்யலாம். குறிப்பாக பல்வேறு துறை சார்ந்த ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஆக அவ்வாறு முதலீடு செய்யும்போது 10 - 40 வருடம் கழித்து பார்க்கும்போது நல்லதொரு கார்ப்பஸினை பெற முடியும்.

எஸ் ஐ பி தான் பெஸ்ட் ஆப்சன்

எஸ் ஐ பி தான் பெஸ்ட் ஆப்சன்

மேலும் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் எனும் போது கட்டாயம் எஸ்ஐபி- முதலீடே சிறந்தது. இதன் மூலம் பெரியதொரு வருவாயினை பார்க்க முடியும். 10,000 ரூபாய் சம்பளத்தில் 10% அல்லது 1,000 ரூபாய் எஸ் ஐ பி செய்வது என்பது கட்டாயமாக்கிக் கொள்ளலாம். எனினும் இந்த எஸ் ஐ பி-யினை இடையில் கட்டாயம் நிறுத்த கூடாது. அப்படி நிறுத்தினால் இலக்கினை அடைவது கஷ்டம்.

இலக்கு எப்படி சாத்தியம்

இலக்கு எப்படி சாத்தியம்

மாதம் 1,000 ரூபாய் முதலீட்டினை 40 வருடங்கள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். சராசரியாக 15% வருமான கிடைத்தால் கூட, 4,80,000 முதலீடு செய்திருப்பீர்கள். 40 வருடங்களுக்கு பிறகு உங்களது கார்பஸ் 3.14 கோடி ரூபாயாக மாறியிருக்கும். இது பார்க்க எளிதாக தோன்றினாலும் 40 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். இடையில் 1 மாதம் தடையானலும், மேற்கண்ட விகிதங்கள் மாறலாம்.

முதலீட்டினை அதிகரிக்கலாம்

முதலீட்டினை அதிகரிக்கலாம்

அதோடு இந்த 40 வருட காலத்திற்கும், அவருக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்க போவதில்லை, ஆண்டுக்கு ஆண்டு சம்பளம் அதிகமாகலாம். ஆக நீங்கள் உங்கள் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டினை அதிகரிக்கலாம். மேலும் பணவீக்கத்தினை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப உங்களது முதலீடுகளை அதிகரிப்பதே உங்களது புத்திசாலித்தனம்.

பிரித்து முதலீடு செய்யலாம்?

பிரித்து முதலீடு செய்யலாம்?

சம்பளம் அதிகரிக்கும்போது அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பலவற்றையும் போட்டு வைக்கலாம். அவசியம் மருத்துவ காப்பீடு என்பது இருக்க வேண்டும். குறிப்பாக குடும்ப காப்பீட்டு திட்டங்களை போடுவது உங்களுக்கும் பெரியளவில் கைகொடுக்கும். ஏனெனில் இது திடீர் மருத்துவ செலவு, மிகப்பெரிய மருத்துவ செலவுகளில் இருந்து பாதுகாக்கும்.

மேலும் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப உங்களது முதலீடுகளை அதிகரித்துக் கொண்டே வருவது அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If you invest Rs.1000 per month after getting salary, you will get profit in crores

Investment latest updates.. If you invest Rs.1000 per month after getting salary, you will get profit in crores
Story first published: Thursday, October 28, 2021, 18:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X