இந்தியர்களுக்குக் காலம் காலமாகத் தங்கத்தின் மீது இருக்கும் காதல் கடந்த சில வருடங்களாகக் குறைந்து வருவது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தை விடவும் அதிக லாபம் கிடைக்கும் பல முதலீட்டு வாய்ப்புகள் தற்போது இந்தியச் சந்தையில் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை.
என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. யாருக்கு என்ன பயன்.. இதோ முக்கிய அறிவிப்புகள்..!
இப்படி சமீப காலத்தில் தங்கம் மீது முதலீடு செய்து வந்த பல லட்சம் இந்தியர்களை கிரிப்டோகரன்சி முதலீட்டுச் சந்தை ஈர்த்துள்ளது. இந்திய கிரிப்டோ முதலீட்டுச் சந்தை இளம் முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் மில்லினியல் முதலீட்டாளர்களையும் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

முதலீட்டுப் பழக்கவழக்கம்
இந்தியர்களின் முதலீட்டுப் பழக்கவழக்கம் கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் மாறியுள்ளது. குறிப்பாகப் பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. இது அனைத்தையும் தாண்டி இந்திய முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராகியுள்ளனர் என்பது தான் அதிகம் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

கிரிப்டோ முதலீட்டு மதிப்பு
இந்தியக் குடும்பங்கள் சுமார் 25,000 டன் தங்கத்தை வைத்துள்ள வேளையில், கடந்த ஒரு வருடத்தில் வெறும் 200 மில்லியன் டாலராக இருந்த இந்தியர்களின் கிரிப்டோ முதலீட்டு மதிப்பு 40 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கி, மத்திய அரசு கட்டுப்பாடுகள்
இதேவேளையில் தான் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் கிரிப்டோ வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வந்தது. இதையும் தாண்டி ரிஸ்க் எடுத்து அதிகளவில் இந்தியர்கள் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

10 லட்சம் ரூபாய் முதலீடு
உதாரணமாக 32 வயதான ருச்சி என்பவர் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து கிரிப்டோ முதலீட்டுச் சந்தைக்கு மாறியுள்ளார். 2020 டிசம்பர் மாதம் தனது சேமிப்பையும், பெற்றோர்களிடம் இருந்து பெற்ற 10 லட்சம் ரூபாயை கிட்டதட்ட 13,400 டாலர் தொகை பிட்காயின், டோஜ்காயின், எதிரியம் போன்ற கிரிப்டோ நாணயத்தில் முதலீடு செய்தார்.

தரமான வளர்ச்சி
இந்த முதலீடு ருச்சி-க்கு சாதகமாக அமைந்த நிலையில், டிசம்பர் மாதம் முதலீடு செய்த 13,400 டாலர் முதலீடு பிப்ரவரி 50000 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த லாபம் போதுமென மொத்த முதலீட்டையும் வெளியேற்றிய நிலையில் தற்போது இத்தொகையைத் தனது வெளிநாட்டு உயர் கல்விக்குப் பயன்படுத்த உள்ளார். இதேநேரத்தில் பல முதலீட்டாளர்கள் கிரிப்டோ சந்தையில் பணத்தையும் இழந்துள்ளனர் என்பதை மறக்கக் கூடாது.