நீங்கள் கோடிஸ்வரராக இன்ஃபோசிஸ் கொடுத்த நல்ல வாய்ப்பு.. இது ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அதன் பங்கு விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது.

இதன் காரணமாக பிஎஸ்இ-யில் முதல் ஒரு மணி நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள், இன்ஃபோசிஸ் பங்கு விலை ஏற்றத்தால் 50,000 கோடி ரூபாயினை இதன் முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளது.

அதன் பங்கு விலையானது தற்போது 9.01% ஏற்றம் கண்டு, 906.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இன்போசிஸ் பங்கு விலை
 

இன்போசிஸ் பங்கு விலை

சரி என்ன காரணம்? இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 11.4% அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அதன் வாடிக்கையாளர்களை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த நெருக்கடியான நேரத்தில் அதன் பங்கு விலையானது இன்று 15% அதிகரித்து, 952 ரூபாயாக அதிகரித்திருந்தது.

அதிக ஒப்பந்தம்

அதிக ஒப்பந்தம்

பெங்களுருவினை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிகரலாபம் ஜூன் காலாண்டில் 4,233 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,798 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் இந்த காலத்தில் 1.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 1.65 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

எல்லாவற்றுக்கும் மேலாக இன்ஃபோசிஸ் நிறூவனம் ரூபாய் சரிவினால் அதிக பலன் அடைந்துள்ளது. இதன் காரணமாக அதன் வருவாய் 23,665 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 8.5% அதிகம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்களின் இந்த காலாண்டு முடிவுகள் குறிப்பாக வளர்ச்சி, எங்கள் சேவைகளில் இருக்கும் வணிக முன்னுரிமை பற்றிய ஆழமான புரிதலுக்கும் ஒரு தெளிவான சான்றாகும்.

லாபத்திற்காக காரணம்
 

லாபத்திற்காக காரணம்

நிறுவனத்தின் அதிகளவிலான ஒப்பந்தம் நிறுவனம் லாபம் காண ஒரு கருவியாக இருந்துள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருவாய் நிலையானதாக இருக்கும் அல்லது நிலையான நாணய வளர்ச்சி அடிப்படையில் 2% வளர்ச்சியடையும். இயக்க விளிம்புகள் 2020- 21ம் ஆண்டில் 21 -23% ஆக இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நீங்கள் கோடிஸ்வரரா?

நீங்கள் கோடிஸ்வரரா?

உண்மையில் இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கியிருந்தால் அது உங்களுக்கு ஜாக்பாட் தான். குறிப்பாக நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் 527 ரூபாயாக இருந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. ஆக அப்போது வாங்கியிருந்தால் கூட, நாம் இன்று நல்ல லாபம் பார்த்திருக்க முடியும். இந்த ரணகளமான சூழலிலும் கூட, ஐடி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால், சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும், வர்த்தக ரீதியில் இல்லை என்பதை இதில் இருந்தே உணர முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys gave an opportunity to become a crorepati,

Infosys rock result.. Infosys gave an opportunity to become a crorepati, Infosys share hit all time high in today.
Story first published: Thursday, July 16, 2020, 13:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?