தினசரி ரூ.50 முதலீடு போதும்.. நீங்கள் லட்சாதிபதியாக.. எந்த திட்டம்.. எவ்வளவு ஆண்டு முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முந்தைய காலக்கட்டத்தில் அரசு ஊழியர்கள் தவிர, மற்றவர்கள் தங்களது ஓய்வுகாலத்திற்கு தனியான வங்கி பிக்ஸட் டெபாசிட்களிலேயே அல்லது வேறு ஏதேனும் முதலீடுகள் செய்து வந்தனர்.

 

ஆனால் இன்று அப்படியில்லை. அரசு ஊழியர்கள் மாத மாதம் பெறும் ஓய்வூதியம்போலவே சில முதலீட்டு திட்டங்கள் மூலம் வருமானம் பெற முடியும்.

ஓரு வழியாக அறிமுகம் ஆனது ஓலா ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா..!

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தேசிய ஓய்ய்வுதிய திட்டத்தினை தான்.

தனியார் துறையினருக்கு நல்ல திட்டம்

தனியார் துறையினருக்கு நல்ல திட்டம்

இன்றைய காலகட்டத்தில் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய கவலையே, தங்களது ஓய்வுகாலத்தில் பென்ஷன் இல்லையே என்பது தான். அந்த கவலையை போக்கும் விதமாக மத்திய அரசு அஞ்சலகம் மூலம் வழங்கி வரும் திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த ஓய்வூதிய திட்டத்தினை தனியார் ஊழியர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் அஞ்சலகம் மூலம் அரசு வழங்கி வருகின்றது.

மக்களின் நலன்

மக்களின் நலன்

கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக இந்த தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

என்ன ஆவணங்கள் தேவை?
 

என்ன ஆவணங்கள் தேவை?

முகவரிச் சான்று, அடையாளச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சரியான ஆவணம் உள்ளிட்டவை தேவைப்படும். இந்த ஆவணங்களை முன்னிலை முனையம் என்று அழைக்கப்படும் POPs கொடுத்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

TIER-1 - திட்டம்

TIER-1 - திட்டம்

TIER-1 - ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தவிர்க்க முடியாத அவசர தேவைக்களுக்காக வெளியேறும் ஆப்சன் உண்டு. இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இதில் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.

TIER-2 - திட்டம்

TIER-2 - திட்டம்

TIER-2 - ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

எதில் முதலீடு

எதில் முதலீடு

மேற்கண்ட இந்த திட்டத்தில் தினசரி 50 ரூபாய் முதலீடு செய்து, மாதத்திற்கு 1500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதெல்லாம் சரி எப்படி 34 லட்சம் பெறுவது? தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஈக்விட்டி மற்றும் கடன் திட்டங்களில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும்.

எவ்வளவு ஆண்டு முதலீடு?

எவ்வளவு ஆண்டு முதலீடு?

உதாரணத்திற்கு உங்களுக்கு 25 வயது என வைத்துக் கொள்வோம். நீங்கள் தினசர் 50 ரூபாய் என மாதம், 1500 ரூபாய் முதலீடு செய்தால், உங்களது ஒய்வூகாலத்திற்கு 34 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். இருப்பினும் இந்த 34 லட்சம் ரூபாய் வருவாய்க்கு 35 வருடங்கள் நீங்கள் தினசரி முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

உத்தேச மதிப்பீடு

உத்தேச மதிப்பீடு

மாத முதலீடு - ரூ.1,500

மொத்த முதலீட்டு காலம் - 35 ஆண்டுகள்

மொத்த முதலீட்டு தொகை - ரூ.6.30 லட்சம்

வட்டி விகிதம் - ரூ.27.9 லட்சம்

மொத்த ஓய்வூதியம் - ரூ.34.19 லட்சம்

வரி சேமிப்பு - ரூ.1.89 லட்சம்

ஓய்வூகாலத்திற்கு எவ்வளவு கிடைக்கும்?

ஓய்வூகாலத்திற்கு எவ்வளவு கிடைக்கும்?

ஓய்வூகாலத்தில் உங்களது மொத்த கார்ப்பஸில் 60% வரையில் வித்டிராவல் செய்து கொள்ளலாம். ஆக நீங்கள் 20.51 லட்சம் ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.

மீதமுள்ள தொகையை வருடாந்திர திட்டத்தில் வைக்கலாம். இதன் மூலம் மாத மாதம் ஓய்வூதியத்தினை பெறலாம். அதேபோல் வட்டி விகிதம் சுமார் 8% என வைத்துக் கொண்டால் நீங்கள் மாதம் 9,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம். மொத்தத்தில் இதன் மூலம் ஓய்வுகாலத்தினை எந்தவித நிதி நெருக்கடியும் இல்லாமல் சமாளிக்கலாம்.

புதிய விதிகளுக்கு வரவேற்பு

புதிய விதிகளுக்கு வரவேற்பு

அரசின் இந்த என்பிஎஸ் திட்டத்தில் சமீபத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது எஸ்பிஎஸ் சந்தாதாரர் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முழு கார்பஸினையும் பெற முடியும். முன்னதாக பென்ஷன் தொகையை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானமாக கிடைக்கும்.

நிபந்தனை உண்டு

நிபந்தனை உண்டு

எனினும் அவசர நிலை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக ஓய்வூதிய நிதியை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நுழைய அதிகபட்ச வயது 65 வயதாக இருந்த நிலையில், 70 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதிர்வு வயதும் 75 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசின் இந்த திட்டத்தில் பல வரி சலுகைகளும் உள்ளதால், முதிர்வு காலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

இதனையும் கொஞ்சம் பாருங்க

இதனையும் கொஞ்சம் பாருங்க

ஓய்வூதிய திட்ட முதலீட்டிலிருந்து ஒரு பகுதியை அவசரகால நிதியாக பெறுவது சாத்தியம் என்றாலும், ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, மூன்றாண்டுகள் கழித்தே அவசரகால நிதியை பெறமுடியும். ஓய்வூதிய திட்டத்தில் முதிர்வு காலம் வரும் முன்னர், 3 முறை மட்டுமே அவசர கால நிதியை பெற முடியும். ஒவ்வொரு அவசரகால பெறுதல்களுக்கும் இடையில், குறைந்தது ஐந்தாண்டுகள் இடைவெளி அவசியமாகிறது. ஆனால், சிறப்பான மருத்துவ தேவைகளுக்கு இந்த விதி பொருந்தாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Invest Rs.50 daily in National Pension System and get Rs.34 lakh on retirement; check details

NPS latest updates.. Invest Rs.50 daily in National Pension System and get Rs.34 lakh on retirement; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X