மாதம் ரூ.25,000 – 30,000 வேண்டுமா.. எதில் முதலீடு செய்யலாம்? எவ்வளவு முதலீடு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவசரகால காலகட்டத்தில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த கொரோனா நமக்கெல்லாம் நறுக்கொன்று சொல்லிவிட்டது. ஏனெனில் தடையில்லாமல் வருமானம் இருந்த காலத்தில், இதன் அருமை பலருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவசர காலத்திற்காக நம்மிடம் எந்த சேமிப்பும் இல்லை. முதலீடும் இல்லை எனும் போது இது புரிந்திருக்கும்.

 

ஆக இனியேனும் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்று பலரும் நினைத்திருப்போம். ஆனால் எதில் முதலீடு செய்வது? எதில் லாபம் அதிகமாக இருக்கும். எது பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்பது பற்றிய ஒரு அலசல் தான் இது.

தங்கத்தின் விலையானது தாறுமாறாக இருந்து வருகிறது? வங்கிகளிலும் வட்டி விகிதம் குறைந்து வருகிறது. பங்கு சந்தைகளும் வேண்டாம் என்பவர்கள் பலர், அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த கட்டுரை.

ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துதள்ளும் மக்கள்.. ஏன் என்ன ஆச்சு..!

எதில் முதலீடு செய்யலாம்?

எதில் முதலீடு செய்யலாம்?

இடியில் வெளியான ஒரு செய்தியினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது. 62 வயதான தாய் தனது வீட்டினை விற்று விட்டு, தனது மகளுடன் தங்கியுள்ளார். அவர் கையில் தற்போது 40 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. அவருக்கு மாதம் 25,000 - 30,000 ரூபாய் வருமானம் வேண்டும் என்கிறார். அதற்காக எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேடிக் வித்டிராவல் திட்டத்தில் முதலீடு செய்யலாமா? என்பது தான் அவரின் கேள்வி.

வேறு எதில் முதலீடு செய்யலாம்?

வேறு எதில் முதலீடு செய்யலாம்?

அப்படி எஸ்ஐபி வேண்டாம் என்றால், நான் வேறு எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம், எனது வயதினையும் கருத்தில் கொண்டு எதில் முதலீடு செய்யலாம் எனக் கேட்டுள்ளார். அந்த தாய்க்கு 62 வயது என்பதால் அவர் ஒரு மூத்தகுடி மகள். இது அவரின் வாழ்க்கைக்கான அத்தியாவசியமான முதலீடு என்பதால், பாதுகாப்பான பழமைவாத முதலீட்டினை அணுகுவது மிக அவசியம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
 

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

ஏனெனில் மூலதனமும் முக்கியம். அதே சமயம் கணிசமான வருவாயும் வேண்டும். ஆக உயர்தர கடன் பண்டுகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள் அவருக்கு பொருந்தும் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது AAA பத்திரங்கள் 5 ஆண்டு ஆவணங்களுக்கு வருவாய் 5.5% ஆகவும், இதே 10 ஆண்டு ஆவணங்களுக்கு வருவாய் 6.5% ஆகவும் உள்ளது. ஆக அவர் இதில் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 18,000 - 21,000 வரை கிடைக்கலாம்.

மூத்த குடி மக்களுக்கான திட்டம்

மூத்த குடி மக்களுக்கான திட்டம்

இதே மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் முதலீடு செய்யும் போது 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகையும் கிடைக்கும். இது அவருக்கு அதிக வருவாய்க்கு வழிவகுக்கும். இந்த திட்டங்களில் 7.4% வரை வருவாய் கிடைக்கிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆக மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் 15 லட்சம் ரூபாயினை, மூத்த குடிமக்கள் திட்டத்தில் 5 ஆண்டுகால திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு கூட முதலீடு செய்யலாம்.

இதில் கொஞ்சம் முதலீடு செய்யலாம்?

இதில் கொஞ்சம் முதலீடு செய்யலாம்?

ஆதித்யா பிர்லா சன் லைஃப் கார்ப்பரேட் பாண்ட் பண்ட், ஹெச்டிஎஃப்சி கார்ப்பரேட் பாண்ட் பண்ட் போன்ற உயர்தர கார்ப்பரேட் பத்திர பண்ட் திட்டங்களில் 12.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 12.5 லட்சம் ரூபாயினை ஐடிஎஃப்சி அல்ட்ரா ஷார்ட் டெர்ம் பண்ட் மற்றும் ஹெச்டிஎஃப்சி லிக்வுட் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investment, mutual fund, முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்

Investment plan.. How to invest Rs.40 lakhs to get Rs.25000 – 30000 per month?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X