உங்கள் முதலீட்டில் இந்த திருத்தம் மட்டும் செய்யுங்க.. லாபத்தினை அள்ளுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பத்து வருடங்களுக்கு முன்பு உங்களால் 10 ரூபாய்க்கு ஒரு முழு சாப்பாட்டினை வாங்கியிருக்க முடியும். ஆனால் இன்று அப்படியில்லை. 10 ரூபாய்க்கு ஒரு தயிர் பாக்கெட்டினை கூட வாங்க முடியாது. இன்று பெரு நகரங்களில் ஒரு சாப்பாட்டின் விலை குறைந்தபட்சம் 100 ரூபாய். இதே இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும்போது 200 ரூபாய் அலது அதற்கு மேலாக அதிகரிக்கலாம்.

 

ஆக எதிர்காலத்திற்கு ஏற்ப உங்களது முதலீட்டினை சரியான திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது. இல்லையெனில் பணவீக்கம் என்பது முழுக்க முழுக்க உங்கள் வருமானத்தினை எடுத்துக் கொள்ளும்.

பின்னர் கடைசியில் சேமிப்பும் இருக்காது. முதலீடும் இருக்காது. ஆக இன்றைய காலத்தில், நீங்கள் சரியான முதலீட்டினை தேர்தெடுப்பதன் மூலமே இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க முடியும்.

தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இதில் இன்னும் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. அதில் ஒன்று உங்களது முதலீட்டின் பாதுகாப்பு. எளிதில் பணமாக்கும் முறை. அடுத்தது லாப விகிதம். ஏனெனில் பாதுகாப்பு நிறைந்ததாக மட்டும் இருந்தால் மட்டும் போதாது. எதிர்காலத்தில் உங்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும். மொத்தத்தில் உங்களது நீண்டகால முதலீடுகள் எதிர்காலத்தில் உங்களது தேவைகளை பூர்த்தி செய்வதாக, லாபகரமானதாக இருக்க வேண்டும்.

பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை

பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை

இன்று எரிபொருள் விலைகள், உணவு பொருட்கள், எண்ணெய் வகைகள், என பல காமாடிட்டிகள் என தொடர்ந்து விலை உச்சம் தொட்டு வருகின்றது. இது பனவீக்கத்தின் அறிகுறியே. இது இந்தியாவில் மட்டும் அல்ல. உலகளவில் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. எனினும் ஒவ்வொரு நாட்டின் வங்கிகளும் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த, நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பணவீக்கத்தினை ஈடுகட்டும் முதலீடு
 

பணவீக்கத்தினை ஈடுகட்டும் முதலீடு

இதேபோல நீங்களும் உங்களது முதலீடுகள் பணவீக்கத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆக இப்போதிலிருந்தே அதற்காக நடவடிக்கையை எடுக்க வேண்டும். உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் பணவீக்கத்திற்கு எதிரான சில திட்டங்களையும் சேர்க்க வேண்டும். அந்த வகையில் சில திட்டங்களைத் தான் நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.

ஈக்விட்டி ஃபண்டுகள் பெஸ்ட் ஆப்சன்

ஈக்விட்டி ஃபண்டுகள் பெஸ்ட் ஆப்சன்

ஈக்விட்டிகள், மற்ற முதலீடுகளை போல் அல்லாமல் பணவீக்கத்தினையும் தாண்டி, நல்ல லாபத்தினை ஈட்டி வருகின்றன. ஆக இதற்கு சிறந்த வழி மியூச்சுவல் பண்டுகள் தான். ஈக்விட்டி பண்டுகளை எஸ் ஐ பி மூலம் தேர்தெடுக்கலாம். இது நீண்டகால இலக்கினை அடைய வழிவகுக்கும். உங்களது போர்ட்போலியோவினை பன்முகப்படுத்துங்கள். குறிப்பிட்ட எந்த துறையிலும் முதலீட்டினை குவிப்பதை தவிருங்கள்.

சில்லறை முதலீட்டாளர்கள்

சில்லறை முதலீட்டாளர்கள்

சில்லறை முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை ஈக்விட்டிகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம். இது தான் சம்பாதிக்க சரியான நேரம். பங்கு சந்தைகள் என்பது நீண்டகாலத்திற்கு ஒரே மாதிரி இருக்காது. ஏற்றம் இருந்தால், சரிவும் இருக்கும். ஆக முதலீடுகளை தற்காலிகமாக முதலீடு செய்வதை விட, நீண்டகால நோக்கில் செய்யுங்கள். பங்குகள் பொதுவாக நீண்டகால நோக்கில் ஏற்றம் காணுகின்றன. ஆக லாபம் என்பதை உங்களின் இலக்குடன் இணைக்க வேண்டும்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கமும், உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் இருக்கட்டும். குறைந்தபட்சம் 10% ஆவது இருக்கட்டும். இது தங்க பத்திரம், தங்க பண்டுகள் மூலம் செய்யலாம். பணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கம் விலையானது அதிகரிக்கும். ஆக உங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும்.

லாபத்தினை எடுத்துக் கொள்ளும் பணவீக்கம்

லாபத்தினை எடுத்துக் கொள்ளும் பணவீக்கம்

பணவீக்கம் அதிகரிக்கும்போது, அது உங்களின் வாங்கும் சக்தியை குறைக்கும். ரூபாயின் மதிப்பு மூலம் வாங்கும்போது மதிப்பு குறையும். ஆக உங்களது லாபத்தினை பணவீக்கம் எடுத்துக் கொள்ளும். அது ஈக்விட்டிகள் ஆனாலும் சரி, பத்திரங்களாக இருந்தாலும் உங்களது லாபம் குறையும்.

வட்டி விகிதத்தினை அதிக நாட்கள் கட்டுபடுத்த முடியாது?

வட்டி விகிதத்தினை அதிக நாட்கள் கட்டுபடுத்த முடியாது?

பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்போது வட்டி விகிதம் அதிகரிப்பதை கட்டுபடுத்த முடியாது. இதனை அதிக நாட்கள் கட்டுப்படுத்த முடியாது. பணவீக்கம் கட்டுக்குள் வராவிட்டால் சந்தைகள் சரியலாம். இதனால் உங்களது முதலீடு பாதிக்கப்படலாம். மொத்தத்தில் பணவீக்கத்திற்கு எதிரான முதலீடு என்பது உங்களது போர்ட்போலியோவில் அவசியம்.

டெப்ட் ஃபண்டுகளுக்கு நல்ல வாய்ப்பு

டெப்ட் ஃபண்டுகளுக்கு நல்ல வாய்ப்பு

பத்திர விலைகள் என்பது வட்டி விகிதங்களின் இயக்கத்திற்கு நேர்மாறான ஒன்றாகும். பணவீக்கம் உயரும் போது, வட்டி விகிதமும் அதிகரித்தால் பத்திரங்கள் வீழ்ச்சிக்கு தள்ளப்படலாம். அதிக வட்டி விகிதம் இருக்கும்போது பத்திர லாபம் குறையலாம். இது புதிய முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதே சமயம் இது டெஃப்ட் ஃபண்டுகளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.

குறுகிய கால டெப்ட் ஃபண்டு

குறுகிய கால டெப்ட் ஃபண்டு

டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இது முக்கியமான காலகட்டம் எனலாம். ஆக இந்த சூழ்நிலைகளில் நீண்டகால கடன் நிதியினை வாங்குவதை விட, குறுகிய கால முதிர்வு கொண்ட கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அல்லது நடுத்தர கால டெப்ட் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is inflation taking your returns? Hedge your portfolio with these investments; check details

Investment latest updates.. Is inflation taking your returns? Hedge your portfolio with these investments; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X