45 வயதாகிறது.. மாதம் ரூ.45,000 முதலீடு.. ரூ.3 - 4 கோடி ஓய்வுகால கார்ப்பஸ் வேண்டும்.. சாத்தியமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய நெருக்கடியான காலக்கட்டத்தில் இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்தில் இப்படி ஒரு நிலையை எதிர்கொள்ள கூடாது. ஓய்வுகாலத்திற்காக கட்டாயம் சேமிக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கும்.

 

ஆனால் எவ்வளவு சேமிக்க வேண்டும். எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்ய வேண்டும். எது பாதுகாப்பானது. எதன் மூலம் நம் இலக்கினை அடைய முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

#வலிமை அடைந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்..!

முதலில் நமது தேவை எவ்வளவு என்பதை தீர்மானிக்க வேண்டும். இதனை அறிந்து கொள்ள, ஒருவர் தற்போது செய்யும் செலவோடு, பணவீக்க விகிதத்தினை சேர்த்து கணக்கிட்டு பார்த்தால், சுமாராக எவ்வளவு தேவை என்பதை கணக்கிட முடியும். ஆக இதனை பொறுத்து உங்களது ஓய்வுகாலத்திற்கான முதலீட்டினை நீங்கள் தொடங்கலாம்.

தொடர் முதலீடு அவசியம்

தொடர் முதலீடு அவசியம்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒருவர் செய்யும் முதலீடு என்பதை இடையில் நிறுத்தக்கூடாது. அப்போது தான் கூட்டு வட்டி என்பது கிடைக்கும். இதன் மூலம் பணவீக்கத்தினை தாண்டி நல்ல லாபத்தினையும் பெற முடியும். அப்போது தான் இலக்கினை அடைய முடியும். அதெல்லாம் சரி என்னுடைய இலக்கு அதிகம். நான் எதில் முதலீடு செய்யலாம் என்பது அடுத்த கேள்வியாக இருக்கும்.

எதில் முதலீடு செய்யலாம்

எதில் முதலீடு செய்யலாம்

உங்களது ஓய்வூகால கார்ப்பஸ் இலக்கு அதிகமாக உள்ள பட்சத்தில், அதனை அடைய ஈக்விட்டி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை தான் சிறந்த ஆப்சன். ஏனெனில் இதில் தான் லாபம் அதிகம். எனினும் அதே அளவு ரிஸ்கும் உண்டு. இதனையும் கவனிக்க வேண்டும். இதனால் தான் ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்யும்போது, இளமை காலத்தில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும்.

வயது அதிகமுள்ளவர்களுக்கு சிறந்த ஆப்சன்
 

வயது அதிகமுள்ளவர்களுக்கு சிறந்த ஆப்சன்

வயது அதிகரிக்கும்போது ரிஸ்கு குறைந்த முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். அந்த நேரத்தில் எஸ்.ஐ.பி சிறந்த ஆப்சனாக இருக்கலாம். 45 வயதான ஒருவர் மாதம் 45,000 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார். அவரது ஓய்வுகாலத்திற்கு 3 - 4 கோடி கார்ப்பஸ் வேண்டும். எனது ஓய்வுகாலத்திற்கான கார்ப்பஸ் 69 லட்சம் ரூபாய்க்கு அருகில் தற்போது உள்ளது. இது போதுமா? என்கிறார்.

என்னென்ன ஃபண்டுகள்

என்னென்ன ஃபண்டுகள்

என்னுடைய மாத செலவு தற்போது 50,000 ரூபாயாக உள்ளது. 10 - 15 ஆண்டுகளில் இலக்கினை அடைய முடியுமா? தற்போது HDFC Top 100 Fund, Franklin Prima Plus Fund, PPFAS Long Term Equity Fund and Kotak Flexi Cap Fund-களில் முதலீடு செய்து வருகிறேன். இதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதே தற்போது அவரின் கேள்வி.

மாற்றம் செய்யலாம்

மாற்றம் செய்யலாம்

ஒருவர் தனது ஓய்வுகாலத்தில் அவரின் செலவுகளை ஈடுகட்டும் விதமான வருமானத்தினை பெறும்போது, அவரின் ஓய்வுகாலம் என்பது சுமூகமாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் போகும். ஆக மேற்கண்ட ஃபண்டுகளில் சில மாற்றங்களை செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இலக்கு எவ்வளவு?

இலக்கு எவ்வளவு?

உங்களது வருடாந்திர ஓய்வூதிய இலக்கு, உங்களது வருடாந்திர செலவில் 50 மடங்கு இருக்க வேண்டும். ஆக உங்களது ஓய்வூதிய கார்ப்பஸ் சுமார் 3 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்.

உங்களது எஸ்.ஐ.பி முதலீடு என்பது 12% வருமானமாக கணக்கில் கொண்டால் உங்களிடம் 5.5 கோடி ரூபாய் கார்ப்பஸ் இருக்கும். இது உங்களது செலவுக்கு போதுமானதாக இருக்கும்.

பங்குகளில் கிடைக்கும் லாபத்தினை முடக்குங்கள்

பங்குகளில் கிடைக்கும் லாபத்தினை முடக்குங்கள்

அதே சமயம் உங்களது ஓய்வூதிய முதலீடுகளில் மிக கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் வயது அதிகரிக்க அதிகரிக்க, பங்குகள் மூலம் கிடைக்கும் வருமானத்தினை முடக்க வேண்டும். ஆக உங்களின் தேவைக்கு ஏற்ப நிதியினை திரட்ட சரியான ஆலோசனையுடன் வேறு முதலீட்டு திட்டங்களை நாடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is it possible to create a retirement corpus of Rs.4 crore in 10 – 15 years?

Investment updates.. Is it possible to create a retirement corpus of Rs.4 crore in 10 – 15 years?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X