ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா..! நிபுணர்களின் கருத்து என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய முதலீட்டு சந்தையில் குறைந்த வட்டி வருமானம் சூழ்நிலை இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளைக் காட்டிலும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தை அடையலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதுமட்டும் அல்லாமல் மார்ச் மாத சரிவிற்குப் பின் பெரும்பாலான ஸ்மால் கேப் பங்குகள் இரட்டிப்பு லாபத்தைக் கொடுத்துள்ளது, இந்த நிலையிலும் 2021 மற்றும் அதன் பின்பு அதிக லாபம் வாய்ப்புகள் இருப்பதாக பண்ட் மேனேஜர்கள் தெரிவித்துள்ளனர்.

 ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா..! நிபுணர்களின் கருத்து என்ன..!

தற்போதைய நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது மொத்த முதலீட்டில் அதிகப்படியாக 20 சதவீத தொகையை ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்கின்றனர்.

2018ல் இருந்து நிப்டி 50 குறியீட்டின் கீழ் இருக்கும் ஸ்மால் கேப் பங்குகள் வருடத்திற்கு சராசரியாக 29 சதவீத லாபத்தைக் கொடுக்கிறது. இதேநேரத்தில் நிப்டி ஸ்மால்கேப் 100 குறியீட்டில் 28 சதவீத சரிவை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2 வருடத்தில் ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது என ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சவல் பண்ட் CIO நரேன் தெரிவித்துள்ளார்.

கடைசி 7 நாள்.. கூடுதல் வட்டி, கூடுதல் லாபம்.. சிறப்பு பிக்ஸ்ட் டெபாசிட் திட்டம்..!

தற்போது லார்ஜ் கேப் பங்குகள் தங்களது சிறப்பான அளவை தாண்டிவிட்ட நிலையிலும், வட்டி விகிதம் குறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் இதன் மீது ரிஸ்க் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் வட்டி குறைவாக இருக்கும் நேரத்தில் ஸ்மால் கேப் நிறுவனத்தின் மூலதன சுமை குறைந்து லாப அளவீடு அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

இதனால் ஸ்மால் கேப் பங்குகள் மீதான முதலீட்டில் அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தை முதலீட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தைச் சரியாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is it right time to invest in small-cap funds.. what experts says?

Is it right time to invest in small-cap funds.. what experts says?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X