பொதுவாக வீட்டுக்கடன் வாங்கும்போது நம்முடைய கிரெடிட் ஸ்கோர், வருமானம், வயது என பலவும் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு வருமானம் குறைவாக இருக்கும்போது ஜாய்ண்ட் லோன் ஆகவும், வயது அதிகமாக இருந்தாலும் ஜாய்ண்ட் லோன் ஆகவும் போடுவார்கள்.
ஆனால் சாதரணமாகவே இது போன்று ஜாய்ண்ட் லோனாக வாங்கும்போது பல்வேறு வகையான பலன்கள் உண்டு.
அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
முகேஷ் அம்பானியின் சொத்து பிரிக்கும் மெகா திட்டம்.. 3 சூப்பர் ஸ்டார்களுக்கு என்ன தேவை..!

வங்கிக் கடன்
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் வங்கிக் கடன் வாங்கித் தான் பலரும் வீடு கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலையே இருந்து வருகின்றது. அந்தளவுக்கு விலைவாசி விண்ணை தொட்டுள்ளது. ஒரு புறம் வாட்டி வதைக்கும் விலைவாசி, மறுபுறம் போதிய நிதிப்பற்றாக்குறையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த காலகட்டத்தில் பலருக்கும் உதவுவது வங்கிக் கடன்கள் தான்.

குறைந்த வட்டி விகிதம்
வயது அதிகம், வருமானம் குறைவு, என பற்பல காரணிகளுக்கு மத்தியில் தான் ஜாய்ண்ட் லோன் ஆப்சன் பரிந்துரைக்கப்படுகிறது.
பொதுவாகவே தற்போதைய காலகட்டங்களில் வங்கிகளில் வட்டி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் இது வீட்டுக் கடன் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஜாய்ண்ட் அக்கவுண்டாக, குறிப்பாக பெண் விண்ணப்பதாரர் ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஹோல்டராக இணையும்போது உங்களது கடனுக்கான வட்டி விகிதம் இன்னும் குறையலாம்.
ஏனெனில் பல்வேறு வங்கிகளிலும் இன்றைய காலகட்டத்தில் பெண் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் என்பது குறைவாக வழங்கப்படுகிறது. ஆக ஜாய்ண்ட் லோனில் இது மிகப்பெரிய நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடன் அளவை அதிகரிக்கலாம்
வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் ஜாய்ண்ட் அக்கவுண்டாக விண்ணப்பிக்கும் போது உங்களது கடனின் தொகை அளவு அதிகரிக்கும். தனியாக விண்ணப்பிக்கும்போது ஒருவரின் வருமானத்தினை பொறுத்தே கடன் அளவு இருக்கும். ஆக இருவர் விண்ணப்பதாரர்களாக மாறும்போது கடன் தொகை அளவு அதிகரிக்கும். இங்கு விண்ணப்பதாரர்கள் இருவரின் வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

வரி சலுகை உண்டு
கடனுடன் வரிச் சலுகையும் கிடைக்கும். பிரிவு 24 பின் கிழ் சொத்துக்களுக்கான வட்டியை திரும்ப செலுத்துவதில் 2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை கிடைக்கும். இது பெண்கள் முதன்மை விண்ணப்பதாரராக இருந்தால் தான் 2 லட்சம் ரூபாய் வரையில் சலுகையாக பெற முடியும். மேலும் கடனை திரும்ப செலுத்துவதற்காக 1.5 லட்சம் ரூபாய் வரையில் தனித்தனியான வரி விலக்கு பெறலாம்.
கூடுதலாக முதன் முறையாக வீடு வாங்குபவராக இருப்பின் அதற்கும் 80 EE பிரிவின் கீழ் 50,000 ரூபாய்க்கு வரி சலுகை பெற முடியும்.
ஆக இருவர் விண்ணப்பதாரராக இருக்கும்போது இரு வகையிலும் வரிச்சலுகை கிடைக்கும்.

மாத தவணை சுமை குறையும்
உதாரணத்திற்கு 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக 15 ஆண்டுகால அவகாசத்தில் பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 7% வட்டி விகிதம் என வைத்துக் கொள்வோம். இவர்கள் தோராயமாக மாத தவணையாக 26,965 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒருவரே எனும் போது அது மிக கடினமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதே இருவர் எனும் போது சற்று சுமை குறையும்.