உங்க வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்துவிட்டீர்களா.. ஜனவரி 1ல் இருந்து முடக்கப்படலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கி வாடிக்கையாளர்கள் KYC அப்டேஷனை செய்யாவிட்டால், ஜனவரி 1ல் இருந்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உங்கள் கணக்குகளை முடக்கலாம்.

 

இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பு KYC என்றால் என்ன? என தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வாடிக்கையாளரை பற்றி வங்கி அறிந்து கொள்ள பயன்படும் ஆப்சனாகும்.

பொதுவாக இந்த KYC ஆப்சன் என்பது முழுமையாக இருந்தால் தான் தற்போது வங்கிகளில் கணக்கு தொடங்க முடிகின்றது. எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வங்கிகளில் கேஓய்சியினை அப்டேட் செய்ய ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கே ஒய் சி அப்டேட்

கே ஒய் சி அப்டேட்

சமீபத்தில் புதிதாக கணக்கு தொடங்கியவர்கள் கூட, தாங்கள் கணக்கு தொடங்கும்போது ஓரிடத்தில் இருப்பார்கள். ஆனால் தற்போது இருப்பது ஒரிடமாக இருக்கும். ஆனால் வங்கிகளில் அதனை அப்டேட் செய்யாமலேயே இருப்பார்கள். முகவரி மட்டும் அல்ல, மொபைல் எண் உள்ளிட்ட பலவும் அப்படி தான். ஆக இதனை முடிந்த மட்டில் டிசம்பர் 31-க்குள் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

போதிய கால அவகாசம்

போதிய கால அவகாசம்

அப்படி செய்யாவிடில் உங்களது கணக்கு வைத்துள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களால் உங்களது கணக்கு முடக்கப்படலாம். இது குறித்து அரசு பலமுறை எச்சரித்தும், கால அவகாசமும் கொடுத்துள்ளது. எனினும் பலரும் இன்று வரையில் இதனை செய்யமாலேயே உள்ளனர். ஆக அப்படியிருக்கும் வங்கி கணக்குகள் முடக்கப்படலாம்.

விரைவில் அப்டேட் செய்யுங்கள்
 

விரைவில் அப்டேட் செய்யுங்கள்

ஏற்கனவே வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இது குறித்து உங்களுக்கு அலட்ர் செய்திருக்கலாம். ஆக இதனை அப்டேட் செய்ய வங்கிகளுக்கு நேரிடையாக சென்றும் அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி இல்லாவிட்டால், பல வங்கிகளும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளன. சில வங்கிகள் வீடியோ மூலமாக கூட கே ஓய்சியை அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளன.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு முக்கியம்

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு முக்கியம்

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக வங்கிகள் போதிய கால அவகாசத்தினை கொடுத்தன. ஆனால் இனி இந்த அவகாசம் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

கே.ஒய்.சி ஆவணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும். மேலும் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட்

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அப்டேட்

வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், இந்த கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 ஆண்டுகள் மற்றும் எட்டு ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எனவும் இந்த கே.ஒய்.சியானது புதுப்பிக்கப்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

KYC issue: Banks and finance companies will freeze it from January 1,2021

KYC issue: Banks and finance companies will freeze it from January 1,2021/உங்க வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்துவிட்டீர்களா.. ஜனவரி 1ல் இருந்து முடக்கப்படலாம்..!
Story first published: Friday, December 24, 2021, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X