கடைசி நாள்..! வருமான வரியை மிச்சம் பிடிக்க என்ன செய்யலாம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வியாபாரிகள் செலவு கணக்கைச் சொல்லி வருமான வரியில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் நம்மை போன்ற சம்பள ஏழைகளுக்கு சம்பளம் வரும் முன்பே டிடிஎஸ் என்கிற பெயரில் வருமான வரி பிடித்தம் செய்துவிடுவார்கள்.

 

இந்த வருமான வரி என்கிற சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம். இன்று தான் கடைசி தேதி என்பதால் என்ன செய்ய முடியும் என்பதைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

முதலில் இன்சூரன்ஸில் இருந்து தொடங்குவோம்.

ஆபத்தில் 136 மில்லியன் வேலைகள்.. எந்த துறை எப்படி பிரச்சனை சந்திக்க போகிறது..!

லைஃப் இன்சூரன்ஸ்

லைஃப் இன்சூரன்ஸ்

ஒரு வேளை நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், நம் குடும்பத்தினர் வாழ போதுமான பணத்தை இந்த லைஃப் இன்சூரன்ஸ் மூலம் கொடுக்கலாம். இந்த லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் வருமான வரிக் கழிவு பெறலாம்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

ஹெல்த் இன்சூரன்ஸ்

இன்று எந்த நோய் எப்போது யாரைத் தாக்கும் என்றே தெரியவில்லை. அதற்கு சிறந்த உதாரணம் கொரோனா வைரஸ். இப்படி பல நோய்களுக்கான வைத்தியச் செலவுகளுக்கு நம் பாக்கெட்டைப் பதம் பார்ப்பதற்கு பதில், ஹெல்த் இன்சூரன்ஸ் வழியாக வைத்தியச் செலவுகளை க்ளெய்ம் செய்து கொள்ளலாம். இந்த ஹெல்த் இன்சூரன்ஸுக்குச் செலுத்தும் பிரீமியம் பணம் 80டி வருமான வரி பிரிவின் கீழ் வருமான வரிக் கழிவு பெறலாம்.

என்பிஎஸ்
 

என்பிஎஸ்

இன்று கடைசி ஒரு நாளில் கூட, என்பிஎஸ் டயர் 1 திட்டத்தில் இணைந்து ரூ. 50,000 முதலீடு செய்து மொத்த பணத்துக்கு முழுமையாக வருமான வரிச் சட்டம் 80 சிசிடி (1 பி) பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். இது வழக்கமான 80 சி பிரிவின் கீழ் வரும் 1.5 லட்சம் ரூபாய்க்குள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வாடகை

வீட்டு வாடகை

இப்போதே வீட்டு வாடகை ரசீதுகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்துக்குள் சம்பளதாரர்களுக்கான வருமான வரிப் படிவம் வெளியாகிவிடும். அப்போது இந்த வீட்டு வாடகை ரசீதுகளை ஆடிட்டர்களிடம் காட்டி, வருமான வரிக் கழிவு பெறலாம். எனவே இப்போதே இந்த ரசீதுகளை பக்காவாக தயார் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே அலுலகவத்தில் வீட்டு வாடகை ரசீது கொடுத்தவர்களுக்கு பிரச்சனை இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

last day to save your income tax by insurance NPS

Today is the last day for the financial year 2019 - 20. So if you are not having anything to save your income tax you can buy life and health insurance and NPS to save your tax.
Story first published: Tuesday, March 31, 2020, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X