எல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசியில் (LIC) ஆரோக்கிய ரக்ஷா (LIC Aarogya Rakshak Health Insurance plan) என்ற பெயரில் புதிய மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

பொதுவாக மெடிக்கல் இன்சூரன்ஸ் என்றாலே, மக்களுக்கு அவசர காலங்களில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் பல விதமான மருத்துவ செலவுகளுக்கும் பணத்தை, திரும்ப செலுத்த உதவும் ஒரு ஆப்சனாக உள்ளது.

சூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

குறிப்பாக எதிர்பாராத, அதிக மருத்துவ செலவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதன் மூலம் உங்களுடைய உடல்நலம், நோய் மற்றும் திடீர் செலவுகளுக்கும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது.

மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி

மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி

நாட்டில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் பலர் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி தெரிந்து கொள்ள நினைக்கக்கூடும். ஆக அவர்களுக்கானதே இந்த பாலிசிகள். முதலில் இந்த பாலிசிகளை நாம் ஏன் வாங்க வேண்டும். அதன் சிறப்பம்சங்கள் என்ன? அதனால் என்ன நன்மை உங்களுக்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தனிநபர் இன்சூரன்ஸ்

தனிநபர் இன்சூரன்ஸ்

எல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டம் பங்கு சந்தை ரிஸ்க் இல்லாத ஒரு திட்டமாகும். இது வழக்கமான இன்சூரன்ஸ் திட்டங்களை போலவே, பிரீமியத்துடன் கூடிய ஒரு தனிநபர் இன்சூரன்ஸ் திட்டமாகும். இது அவசர காலத்திற்கு தேவையான நிதி தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.

குடும்பத்தினருக்கும் உதவும் திட்டம்
 

குடும்பத்தினருக்கும் உதவும் திட்டம்

இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் ஜூலை 19, 2021ல் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த பாலிசியில் தனக்காகவோ அல்லது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காகவோ இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணையலாம். இது குறிப்பிட்ட நோய்களுக்கு எதிரான நிலையான நன்மை அளிக்கக் கூடிய வகையிலும், அவசர காலத்தில் உதவும் வகையிலும் உள்ள ஒரு திட்டமாகும்.

வயது தகுதி?

வயது தகுதி?

எல்ஐசியின் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரையில் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். அதேபோல 91 நாட்கள் முதல் 20 வயது வரையில் உள்ள பிள்ளைகளை இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கலாம். இந்த மெடிக்கல் பாலிசியில் பாலிசிதாரரின் பெற்றோருக்கு 80 வயது வரையிலும், குழந்தைகளுக்கு 25 வயது வரையிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

பிரீமிய சலுகை

பிரீமிய சலுகை

அதோடு இந்த பாலிசியினை பொறுத்தவரையில் பிரீமியம் கட்டணமும் நெகிழ்வு முறையில் செலுத்திக் கொள்ளலாம்.

அதே போல பாலிசி நன்மைகளையும் பிளெக்ஸிபிள் முறையில் க்ளைம் செய்து கொள்ளலாம்.

இந்த பாலிசியில் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால், ஒரு வேளை துரதிஷ்டவசமாக பாலிசிதாரர் இறந்து விட்டால், மற்றவர்களுக்கு பீரிமியத்தில் சலுகை அளிக்கப்படும்.

இணையதளத்தில் விவரங்களை பார்க்கலாம்

இணையதளத்தில் விவரங்களை பார்க்கலாம்

இந்த பாலியில் மருத்துவ செலவு உள்பட, அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளுக்கும் க்ளைம் செய்து கொள்ள முடியும். ஆம்புலன்ஸ் செலவினையும் வழங்குகின்றது. இது தவிர இன்னும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள https://licindia.in./ என்ற எல் ஐ சியின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC aarogya rakshak health insurance; eligibility, benefits, features

LIC’s arogya rakshak plan offers health cover against some specific diseases.
Story first published: Sunday, July 25, 2021, 15:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X