எல்ஐசி கொடுத்த அட்டகாசமான வாய்ப்பு.. இது முதலீட்டுக்கு சரியான தருணம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் அக்டோபர் 20 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபண்டானது நவம்பர் 3, 2021 அன்று முடிவடையவுள்ளது.

 

இந்த ஃபண்டினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பு, NFO என்றால் என்ன? இது யாருக்கெல்லாம் ஏற்றது? எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் சரியான வாய்ப்பா? வாருங்கள் பார்க்கலாம்.

சொமேட்டோ: 2 நாளில் 10 ரூபாய் சரிவு.. தமிழும், தமிழர்கள் செய்த சம்பவமும்..!

என்.எஃப்.ஓ (NFO - New Fund Offer)என்றால் என்ன? புதியதாக சந்தைக்கு வரும் இந்த ஃபண்டினை தான் என்.எஃப்.ஓ என கூறுகின்றனர். பங்கு சந்தையில் ஒரு பங்கு தொடக்கத்தில் வெளியிடப்படுகின்றது எனில், அதனை IPO என்பார்கள். அதே போல மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் ஒரு பங்கு வெளியிடப்படுகின்றது எனில் அதனை NFO என்பார்கள்.

எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்

எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்

அந்த வகையில் எல் ஐ சி கடந்த அக்டோபர் 20 அன்று வெளியிடப்பட்ட பண்ட் தான் எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட். பங்கு சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். இந்த மாதிரியான சமயங்களில் முதலீட்டு போர்ட்போலியோவில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்கள் இருப்பது அவசியமான ஒன்று.

எப்படி சிறந்தது?

எப்படி சிறந்தது?

ஏனெனில் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது, இந்த ஃபண்டுகள் பங்குகள் மீதான முதலீட்டினை குறைத்துக் கொள்கின்றன. மாறாக ரிஸ்கினை குறைக்கும் விதமாக கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடுகளை செய்கின்றன. பொதுவாக பேலன்ஸ்டு ஃபண்டுகள் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக் கூடியவை.

முதலீட்டாளார்களுக்கு ஏற்ற திட்டம்
 

முதலீட்டாளார்களுக்கு ஏற்ற திட்டம்

இதில் வருமானம் என்பது சுமாராக இருக்கும். ஆனால் ரிஸ்க் சற்றே குறைவு. இதில் பங்கு சார்ந்த ஃபண்டுகள், கடந்த சார்ந்த ஃபண்டுகள் என இரு வகை உண்டு. ஆக பங்கு சந்தையின் போக்கிற்கு ஏற்ப இந்த ஃபண்டில் முதலீடுகள் மாற்றியமைக்கப்படுவதுண்டு. இதனால் இந்த ஃபண்டுகள் முதலீட்டாளார்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

ரிஸ்க் இல்லா ஃபண்ட்

ரிஸ்க் இல்லா ஃபண்ட்

குறிப்பாக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும் ஏற்ற ஃபண்டாகும். மொத்தத்தில் அனைவரின் போர்ட்போலியோவிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு ஃபண்ட் ஆகும். அதிலும் எல் ஐ சி-யின் ஃபண்ட் எனும்போது, இது இன்னும் கூடுதலான அம்சமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC Balanced Advantage Fund NFO review: is it right time to invest in balanced fund

LIC latest updates.. LIC Balanced Advantage Fund NFO review: is it right time to invest in balanced fund
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X