ரூ.151ல் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்.. LIC மணி பேக் திட்டம்.. ரூ19 லட்சம் வரை க்ளைம் செய்யலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், அவ்வப்போது மிகப்பெரிய பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

தற்போது எல் ஐ சி குழந்தைகளுக்கான வருங்கால நலனைக் கருதி சிறப்பான மணி பேக் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க நினைக்கும் எவரும், இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். எல்ஐசியின் இந்திய புதிய மணி பாலிசி திட்டம் (LIC news children's money back plan) பற்றிய முழு அம்சங்களையும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இந்த பாலிசியை எத்தனை வயது வரை எடுக்கலாம்?
 

இந்த பாலிசியை எத்தனை வயது வரை எடுக்கலாம்?

இந்த காப்பீட்டினை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 0 வயது என அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு எடுப்பதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்ச பாலிசி தொகை 10,000 ரூபாயாகும். ஆனால் காப்பீட்டிற்கான அதிகபட்ச தொகை என்ற வரம்பு ஏதும் இல்லை. குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான உடன் 20 சதவீதம் தொகையை பெறலாம்.

குழந்தைகளின் எதிர்காலம்

குழந்தைகளின் எதிர்காலம்

பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிசியின் 20 சதவீத தொகையை பெறலாம். இது தவிர நீங்கள் பாலிசி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி சொல்லவேண்டுமானால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும். LIC-யின் இந்த புதிய குழந்தைகள் மணி பேக் பாலிசி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரிமியம் எவ்வளவு?

பிரிமியம் எவ்வளவு?

இதில் முதல் ஆண்டு பிரீமியம் - ஆண்டு ஒன்றுக்கு பிரிமீயம் 55239 ரூபாய் (ரூ.52860 + ரூ.2379 ஜிஎஸ்டியுடன்) என கணக்கிடப்பட்டுள்ளது. இதே அரையாண்டு பிரீமியம் 27917 (ரூ.26715 + ரூ.1202 ஜிஎஸ்டியுடன்) ரூபாய் எனவும், இதே காலாண்டு பிரிமியம் 14108 ரூபாய் (ரூ.13500 + ரூ.608 ஜிஎஸ்டியுடன்), இதுவே மாத பிரீமியம் 4703 ரூபாயாகும் (ரூ.4500 + ரூ.203 ஜிஎஸ்டியுடன்). இதே நாள் ஒன்றுக்கு 151 ரூபாயாகும் கட்டவேண்டியிருக்கும்.

க்ளைம் பெனிபிட்
 

க்ளைம் பெனிபிட்

இந்த திட்டத்தில் பிரிமீயம் வேவர் பெனிபிட் ரைடர் ஆப்ஷன் உள்ளது. இந்த பாலிசியின் டெர்ம் 25 ஆண்டுகாள் ஆகும். உதாரணத்திற்கு உங்களது குழந்தைக்கு 5 வயது எனில், உங்களது பாலிசி டெர்ம் 18 ஆண்டுகளாகும். இந்த பாலிசியினை பொறுத்த வரையில் க்ளைம் பெனிபிட் என்பது உங்களது பிரிமியம் செலுத்தும் தொகையை பொறுத்து இருக்கும். மற்ற விவரங்களை https://www.licindia.in/Products/Insurance-Plan/LIC-s-NEW-CHILDREN-S-MONEY-BACK-PLAN-(2) என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC gives a super plan for your child, Spend Rs151 per day to get 19 lakhs

LIC gives a super plan for your child, Spend Rs151 per day to get 19 lakhs
Story first published: Monday, September 14, 2020, 13:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X