நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, மக்களுக்கு உதவும் வகையில் பல வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் திட்டம் எல்ஐசி-யின் ஜீவன் அமர் பாலிசி பற்றித் தான்.
3 மாதத்தில் ரூ.10000 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தும் ஹெச்டிஎப்சி வங்கி..!
வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, எல்ஐசி-யின் இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களாக உள்ளன.

இரண்டு திட்டங்கள்
காப்பீட்டுக் காலம் முழுவதும் ஒரே காப்பீட்டுத் தொகையைப் பெறுவதைத் தேர்வு செய்யலாம். இது, Level Sum Assured எனப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் அதிகரித்துக்கொண்டே வரும் முறையைத் தேர்வு செய்யலாம். இது, Increasing Sum Assured எனப்படுகிறது.

இரண்டு வகையில் க்ளைம்
இதில் இணைய 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் பாலிசி முதிர்வடையும் காலத்தில் பாலிசி எடுத்திருப்பவரின் வயது அதிகபட்சம் 80 வரை மட்டுமே இருக்கலாம். எனவே, 65 வயதுக்குள் இந்தக் பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். பாலிசி எடுத்தவர் காப்பீட்டு காலத்திலேயே இறந்தால், பலன் அவருடைய நாமினிக்கு கிடைக்கும். அதனை முழு தொகையையும் மொத்தமாகப் பெறலாம் அல்லது 5,10 அல்லது 15 ஆண்டுகள் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பிரீமியம்?
பாலிசிக்கான ப்ரீமியம் கட்டுவதை பாலிசி காலம் முழுக்க செலுத்தி வரலாம். இல்லையேல் விரைவாகவும் செலுத்தி முடித்துவிடலாம். இல்லை என்றால் ஒரே முறையிலேயே முழு பாலிசி தொகையையும் செலுத்தலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாய். ஆனால், அதிகபட்சம் வரம்பு என்பது இல்லை.

ரைடர் பாலிசி
இப்பாலிசியில் விபத்துக்கான ரைடர் பாலிசி, புகை பிடிக்காதோருக்கும் பிரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன. இது இந்த பாலிசியின் இன்னொரு கூடுதல் அம்சமாகும்