தினசரி ரூ.220 முதலீடு மூலம் ரூ.17 லட்சம் வருமானம்.. எப்படி.. எத்தனை ஆண்டுகள் முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினசரி 220 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 17 லட்சம் ரூபாய் வருமானம் பெற முடியுமா? எப்படி சாத்தியம். எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். எந்த திட்டத்தில் முதலீடு செய்வது? என்பதனை தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

 

நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் எல்ஐசி-யின் ஜீவன் லாப் பாலிசி தான். இது இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தால் வழங்கப்படும், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் ஒன்று சேர வழங்கும் ஒரு திட்டமாகும்.

ஆக குறைந்த முதலீட்டினை கொண்டு, மிகப்பெரிய அளவிலான கார்ப்பஸினை உருவாக்க இந்த திட்டமானது உதவும் எனலாம். சரி வாருங்கள் இந்த பாலிசியினை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

எல்ஐசி-யின் மூன்று பிளான்கள்

எல்ஐசி-யின் மூன்று பிளான்கள்

இந்த திட்டத்தில் மூன்று பிளான்கள் உள்ளன, ஒன்று 16 வருட பாலிசியாகும்.. இந்த பாலிசியில் நீங்கள் 10 வருடம் பணம் கட்டினால் போதும். இதே இரண்டாவது திட்டம் 21 வருட பாலிசி காலமாகும்.. இந்த பாலிசியில் 15 வருடம் நீங்கள் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. மூன்றாவது 25 வருட பாலிசி காலம் கொண்ட திட்டத்தில், 16 வருடம் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

இந்த பாலிசியின் சிறப்பம்சங்கள்

இந்த பாலிசியின் சிறப்பம்சங்கள்

இந்த பாலிசியில் பங்கு சந்தை அபாயங்கள் கிடையாது. பாலிசி காலம் முதிர்வு வரை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கான சிறந்த பாலிசியாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன் ரைடர்ஸ் பாலிசிகளையும் பெற்றுக் கொள்ளும் அமசம் உண்டு. ஆக உங்களுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக் கொள்ள இது சரியான ஒரு பாலிசியாக அமையலாம்.

வரி சலுகை உண்டு
 

வரி சலுகை உண்டு

இந்த பாலிசியில் 80சி கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. முதிர்வு தொகைக்கு 10 (10டி)யின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பாலிசியில் குறைந்தபட்ச வயது வரம்பு 8 வயது. அதிகபட்ச வயது வரம்பு 16 அண்டு பாலிசிக்கு 59 வயது. இதே 21 ஆண்டு பாலிசிக்கு 54 வயதாகும். இதே 25 ஆண்டு பாலிசி எனில் அதிகபட்ச வயது 50 ஆகும்.

காப்பீடு எவ்வளவு?

காப்பீடு எவ்வளவு?

இந்த பாலிசியினை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 2 லட்சம் காப்பீடாகும். அதிகபட்ச காப்பீட்டு வரம்பு என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த பாலிசி எடுத்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. இதே 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

பிரீமியம் தள்ளுபடி

பிரீமியம் தள்ளுபடி

இந்த பாலிசியில் பிரீமியம் அடிப்படையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வருடாந்திர பிரீமியத்திற்கு 2% மற்றும் அரை வருட பிரீமியத்திற்கு கட்டணங்களின் மீது 1% தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய் 5 லட்சத்திலிருந்து 9.9 லட்சம் வரைக்கும் இருக்கும் போது 1.25% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய். 10 லட்சத்திலிருந்து ரூபாய். 14 லட்சம் வரைக்கும் இருந்தால் 1.50% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகை 15 லட்சம் மற்றும் அதற்கு மேலே இருந்தால் 1.75% தள்ளுபடியை வழங்கப்படுகின்றது.

இறப்பு பலன் எவ்வளவு?

இறப்பு பலன் எவ்வளவு?

பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், வாரிசுதாரர், அடிப்படை காப்பீடு தொகை மற்றும் திரட்டப்பட்ட எளிய போனஸ் தொகை மற்றும் இறுதி கூட்டல் போனஸ் (FAB) என அனைத்தும் சேர்ந்து பெறுவார். ஆக பாலிசி எடுக்கும்போது நாமினி விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

அதெல்லாம் சரி தினசரி 220 ரூபாய் முதலீட்டின் மூலம் 17 லட்சம் ரூபாய் எப்படி சாத்தியம்? வாருங்கள் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு பாலிசிதாரருக்கு 25 வயது என வைத்துக் கொள்வோம். 25 வருட பாலிசியினை எடுத்துள்ளார் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் அவர் 16 வருடம் பிரீமியம் செலுத்துவார். இவரின் முதிர்வு தொகையானது 17 லட்சம் ரூபாயாகும். இதில் எந்தவித ரைடர் பாலிசியும் சேர்க்கவில்லை. இவரின் முதல் ஆண்டு பிரீமியம் 73,911 ரூபாய் ஆகும். இதனுடன் ஜிஎஸ்டி விகிதம் 4.5% சேர்த்தால், 77237 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் மாதம் 6,573 ரூபாய் பீரிமியம் செலுத்துவார். இதனை தினசரி கணகீடாக எடுத்து பார்த்தால் மாதம் 220 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். (இது குறித்த முழு விவரங்களை https://www.licpremiumcalculator.in/jeevan-labh-plan-936.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம். எனினும் இரண்டாம் ஆண்டில் இருந்து இந்த விகிதமானது சற்று குறையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC jeevan labh policy: invest Rs.220 every day and earn Rs.17 lakh, get tax exemption too

Insurance updates.. LIC offers a variety of excellent plans to its customers. if you want to become wealthy through safe investments, this LIC policy is for you. You can get a fund of Rs 17 lakhs in the LIC Jeevan Labh scheme
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X