இன்றைய காலகட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்கின்றனர்.
அதிலும் சிறிய டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு சென்று மளிகை பொருளை வாங்கினாலும் கூட, அதற்கு கார்டில் தான் பலரும் பணம் செலுத்துகின்றனர். இந்த கலாச்சாரம் தற்போது கிராம்புறங்களிலும் கூட அதிகரித்து வருகின்றது.
இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால், அச்சச்சோ ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதே. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே இருப்போம்.
அலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..!

இருந்த இடத்திலிருந்தே ஏடிஎம்மினை பிளாக் செய்யலாம்
ஏனெனில் ஏடிஎம் மூலம் பணம் திருடப்படலாம் என்ற பயம் தான். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் இது டிஜிட்டல் உலகம் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் இருந்த இடத்திலேயே நீங்கள் உங்களது தொலைந்து போன ஏடிஎம்களை பிளாக் செய்ய முடியும். விண்ணபிக்கவும் முடியும்.

எஸ்பிஐயில் எளிய நடைமுறை தான்
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், என்னென்ன ஆஃப்சன் உள்ளது என்று தான். எஸ்பிஐ-யில் ஏடிஎம்மினை பிளாக் செய்யவோ அல்லது புதியதாக விண்ணப்பிக்கவோ எளிதான நடைமுறைகள் தான். சரி வாருங்கள் பார்க்கலாம். எப்படியெல்லாம் பிளாக் செய்யலாம் என்று.

எப்படி கார்டினை பிளாக் செய்வது?
உங்களது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 1,800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு டயல் செய்து, உங்களது ஏடிஎம் கார்டினை பிளாக் செய்யலாம். அதே போல மிக எளிதாக புதிய கார்டுக்கும் விண்ணபிக்கலாம். அதற்காக நீங்கள் 1800 425 3800 என்ற எண்ணை அழைக்கலாம்.

ஆன்லைனில் புதிய கார்டினை எப்படி விண்ணப்பிக்கலாம்?
https://www.sbicard.com/creditcards/app/user/login என்ற இணையதளத்தில் சென்று லாக் ஆன் செய்து கொள்ளவும். அங்கு request என்ற ஆப்சனை கிளிக் செய்து அங்கு Reissue/Replace Card என்ற ஆப்சனை கிளிக் செய்து, அங்கு உங்களது ஏடிஎம் கார்டு நம்பரை தேர்வு செய்த பிறகு, சப்மிட் செய்ய வேண்டும்.

மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்
உங்களது sbicard mobile appப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் மெனு டேப்பினை கிளிக் செய்து, Service Request என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு Reissue/Replace Card என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்களது கார்டு நம்பரை தேர்வு செய்து பின்பு, சப்மிட் செய்யவும்.

கார்டை திரும்ப பெற கட்டணம் உண்டா?
நிச்சயம் கட்டணம் உண்டு. உங்களது பழைய கார்டுக்கு பதிலாக புதிய கார்டினை பெற 100 ரூபாய் கட்டணம் + வரியும் பெறப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்த பிறகு உங்களது புதிய கார்டு ஏழு வேலை நாட்களில் உங்களுக்கு கிடைக்கும். எனினும் உங்களது முகவரி இருப்பிடத்தினை பொறுத்து இந்த டெலிவரி நாட்கள் மாறலாம்.

ஏடிஎம் பின் நம்பர்
எஸ்பிஐஒ வாடிக்கையாளர்கள் ஒரு அழைப்பின் மூலம் ஏடிஎம் பின்னையும் உருவாக்க முடியும். இதற்காக பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் இருந்து கட்டணமில்லா எண்களை டயல் செய்து பெற்றுக் கொள்ளலாம். இது 1800 112 211 என்ற எண்ணையோ அல்லது 1800 425 3800 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.