மியூச்சுவல் ஃபண்ட் Vs பங்குகளில் முதலீடு.. எது சரியானது.. லாபகரமானது.. உங்களுக்கு ஏற்றது எது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், அதில் முதலீடு செய்ய ஆர்வம் அதிகரித்து வருகின்றது. எனினும் சமீபத்திய ஆய்வொன்றில் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளியானது.

 

இதற்கிடையில் குட் ரிட்டர்ன்ஸ் ரீடர் ஒருவர் பங்கு சந்தையில் நேரடியாக பங்குகளாக வாங்கி வைக்கலாமா? அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா? எது பெஸ்ட் என கேட்டுள்ளார். அதனை பற்றித் தான் பார்க்க விருக்கிறோம்.

பங்கு சந்தையினை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்ட் சந்தைகளில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு சில முக்கிய காரணிகளும் கூறப்பட்டுள்ளன.

ஓலாவின் புதிய நிறுவனம்.. பாவிஷ் அகர்வால்-வின் பிரம்மாண்ட வளர்ச்சி..!

லாபாமா? நஷ்டமா?

லாபாமா? நஷ்டமா?

பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும்போது முதலீடு நேரடியாக குறிப்பிட்ட பங்குகளில் மட்டும் முடங்கும் அபாயம் உள்ளது. இதே மியூச்சுவல் ஃபண்டுகள் எனும் போது பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. குறிப்பாக உங்களது முதலீடு துறை வாரியாக பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இதனால் ஒரு துறையில் லாபம் குறைந்தாலும், நஷ்டம் வந்தாலும் மற்ற துறைகளில் கிடைக்கும் லாபம் சரி செய்கின்றது. இதனால் மொத்தமாக முதலீடு என்பது லாபத்தில் தான் இருக்கும். ஆனால் பங்கு சந்தையில் அப்படியில்லை. நீங்கள் முதலீடு செய்த பங்கு சரிவினைக் கண்டால் நஷ்டமே.

நேரடி முதலீடால் என்ன பிரச்சனை?

நேரடி முதலீடால் என்ன பிரச்சனை?

மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் உங்களது முதலீடு, பங்கு சந்தை, கடன் சந்தை, தங்கம் என பலவகையிலும் பிரித்து செய்யப்படுகிறது. பங்கு சந்தையில் தற்போது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்தாலும், இது இன்னும் எவ்வளவு அதிகரிக்கும். திடீரென சரிந்தால் அடுத்து என்ன செய்வது? எவ்வளவு குறையும்? என தெரியாது. ஆக லாபம் கிடைத்தாலும் அது பெரியளவில் இருக்கும். இதே நஷ்டம் கிடைத்தாலும் மிக மோசமான அளவில் இருக்கும்.

சிறந்த ஆப்சன் எது?
 

சிறந்த ஆப்சன் எது?

ஆக இதில் எது சிறந்தது என தெரிந்து கொள்ள சில முக்கிய விஷயங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் முதலில் பார்க்கவிருப்பது நீங்கள் சந்தைக்கு புதிய முதலீட்டாளரா? நீங்கள் புதிய முதலீட்டாளர், உங்களுக்கு பங்கு சந்தை பற்றி அதிகம் தெரியாது எனில், உங்களுக்கு நிச்சயம் மியூச்சுவல் ஃபண்ட் தான் சிறந்த ஆப்சனாக இருக்க முடியும்.

பிரித்து முதலீடு செய்யலாம்

பிரித்து முதலீடு செய்யலாம்

ஒன்று உங்களது பணம் பல போர்ட்போலியோக்களிலும் முதலீடு செய்யப்படும். மியூச்சுவல் ஃபண்டுகளிலேயே பல வகையான ஃபண்டுகள் உள்ள நிலையில் அவற்றில், எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்து கொள்ளலாம். பல ஃபண்டுகளை தேர்தெடுக்கலாம். ஆக ஒரே இடத்தில் உங்கள் முதலீட்டினை முடக்குவதற்கு பதிலாக பிரித்து போடும்போது உங்களுக்கு ரிஸ்கு குறைவு. லாபமும் சராசரியாக இருக்கும்.

ரிஸ்க் தான்

ரிஸ்க் தான்

ஆக நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு என்பது ரிஸ்கானதே. இதே மியூச்சுவல் ஃபண்டுகளில் திறமையான ஃபண்ட் ஆலோசகர் மூலம் ஆலோசிக்கப்பட்டு முதலீடு செய்யப்படும். இதனால் நிச்சயம் புதிய முதலீட்டாளார்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்த ஆப்சன்.

போதுமான நேரம் உண்டா?

போதுமான நேரம் உண்டா?

உங்களுக்கு பங்கு சந்தையில் கவனம் செலுத்த போதிய நேரம் உண்டா? சந்தையில் உள்ள ரிஸ்கினை எதிர்கொள்ள போதிய திறன் இருந்தால் அதனை எதிர்கொள்ளலாம். அப்படியில்லை என்னால் முடியாது என்றால், நிச்சயம் நீங்கள் பங்கு சந்தைக்கு முதலீட்டுக்கு சரியானவர் அல்ல. உங்களுக்கு சரியான ஆப்சன் மியூச்சுவல் ஃபண்டுகளே. இல்லை என்னால் எதையும் எதிர்கொள்ள முடியும் எனில் பங்குசந்தைகளில் நல்ல லாபத்தினை பார்க்கலாம். இதற்காக சந்தைக்கு என்று சிறிது கால நேரத்தினை நீங்கள் செலவிட வேண்டும். இதே மியூச்சுவல் ஃபண்ட் எனில் ஃபண்ட் மேனேஜர்கள் அதனை பார்த்துக் கொள்வார்கள்.

பிரித்து முதலீடு செய்ய வேண்டுமா?

பிரித்து முதலீடு செய்ய வேண்டுமா?

பங்கு சந்தையில் முதலீடு செய்யும்போது நீங்கள் பங்குகளில் மட்டும் தான் முதலீடு செய்வீர்கள். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் பிரித்து பல்வேறு அசெட்களில் முதலீடு செய்வார்காள் ஆக இங்கும் உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்த ஆப்சனாக இருக்கும். இதன் மூலம் உங்களின் நிதி இலக்குகளை விரைவில் அடைய முடியும். இது தவிர மியூச்சுவல் ஃபண்டுகளில் ELSS பங்குகளில் வரிச்சலுகையும் உண்டு. பங்கு சந்தையில் அந்த ஆப்சன் கிடையாது. இதே பங்கு சந்தைகளில் வரி சலுகை கிடையாது மாறாக எஸ்.டி.டி, டிவிடெண்ட் விநியோக வரி, மூலதன ஆதாய வரி, தரகு கட்டணங்கள் போன்ற சில கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

பங்கு சந்தையில் நிபுணத்துவம் உள்ளதா?

பங்கு சந்தையில் நிபுணத்துவம் உள்ளதா?

பங்கு சந்தை பற்றிய முழுமையான அறிவு உள்ளதா? அப்படி இருந்தால் மட்டுமே அது நேரடியாக பங்கு சந்தை முதலீடுகள் அதிக லாபத்தினை அளிக்கும். இது மற்றவர்களிடம் கேட்டு அறிதல், ஆலோசனை மேற்கொள்ளுதல், செய்திகள் போன்றவற்றினை கருத்தில் எடுத்துக் கொண்டாலும், ஒரு பங்கினை முழுமையாக அறிந்த பின்னரே அது லாபகரமானதாக மாறும். இது தவிர டெக்னிக்கல் பேட்டர்ன்கள் பற்றியும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் அப்படி ஏதும் தேவையில்லை. எனினும் தெரிந்து கொள்வது இன்னும் உதவிகரமாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது அனைவருக்கும் பொருந்தும் திட்டங்களாகும். இது ரிஸ்க் குறைவானது. அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். குறைவான நிதி, ரிஸ்க் குறைவு, சராசரி லாபம், நேரடியாகவும் முதலீடு செய்யலாம். மொத்தத்தில் பங்கு சந்தையினை விட, மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லா விதத்திலும் சரியான முதலீட்டு ஆப்சனாகும். பங்கு சந்தையினை பற்றி முழுமையாக தெரியாமல் முதலீடு செய்வது ஆழம் தெரியாமல் காலை விடுவது போல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual Fund Vs share market; which one is a best investment option for you

investment latest updates.. Mutual Fund Vs share market; which one is a best investment option for you
Story first published: Wednesday, August 18, 2021, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X