மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மீதான ஆர்வம் சமீபத்திய காலமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் அது சிக்கலானதாகவோ அல்லது அச்சத்திற்குரிய முதலீடாகவோ பார்க்கப்படுகிறது.
10 கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. சந்தையை தீர்மானிக்க போக்கும் காரணிகள்..!
ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரையில் பங்கு சந்தைக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இதனால் சமீபத்திய காலமாக முதலீடுகள் பெருகி வருகின்றன.

எதில் முதலீடு செய்வது?
30 வயதான சச்சின் தனது 55 வயதில் ஓய்வு பெற நினைக்கிறார். அதற்குள் அவர் முதுமை காலத்திற்கு தேவையான நிதியை பெற நினைக்கிறார். சந்தையில் ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறார். எனினும் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியாது. அதற்கான நேரமும் இல்லை. மன நிலையும் இல்லை என்கிறார். ஆக நான் எப்படி முதலீடு செய்வது? எனது இலக்கினை அடைய எது சிறந்த வழி என்பதை பற்றித் தான் இதில் பார்க்க இருக்கிறோம்.

சிறு சிறு மாற்றங்கள்
இது குறித்து பரிந்துரை செய்த நிபுணர்கள், அவரின் இலக்கை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சரியான முதலீட்டு திட்டங்களாக இருக்கும். எனினும் முதலீடு செய்ததோடு விட்டு விடாமல் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.
55 வயதிற்கு பிறகு அவர் மாதம் 5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெற, SWP முறை சிறந்த முறையாகும்.

முதலீடு எவ்வளவு?
30 ஆண்டுகளுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெற, எஸ்ஐபி-க்களே சிறந்த வழியாக உள்ளன. ஏனெனில் இதனை எப்போது வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக் கொள்ளலாம்.

இலக்கு
அதெல்லாம் சரி மியூச்சுவல் ஃபண்ட். எஸ் ஐ பி என கணக்கில் கொண்டாகிவிட்டது. இலக்கு 7 கோடி ரூபாய் என வைத்து கொள்வோம். தற்போது சச்சினின் வயது 30 ஆகும். ஆக அவர் 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் இது 7 கோடி இலக்கினை அடைய போதுமானதா?

வருமானம் எவ்வளவு?
சராசரியாக உங்களது முதலீட்டின் லாபம் 15% லாபம் என வைத்துக் கொண்டால், உங்களது இலக்கினை அடைய இது போதுமானதாக இருக்கும். எனினும் வருடத்திற்கு வருடம் சம்பள விகிதம் அதிகரிக்கும்போது, உங்களது முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கும்போது உங்களது இலக்கினை எளிதில் அடைய முடியும்.