தீபாவளிக்கு 1 ரூபாய்க்கு கூட தங்கம் வாங்கலாம்.. எப்படி.. முழு விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் மீதான காதல் என்பது சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் இருந்து வந்தாலும், இந்தியாவில் சற்று அதிகம் எனலாம். குறிப்பாக தமிழக மக்கள் மத்தியில் மிக அதிகம் எனலாம். ஏனெனில் மக்களின் வாழ்வில், உணர்வுகளில் கலந்துள்ள ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

 

பிறந்த குழந்தை முதல் வயதான பாட்டிமார்கள் வரையில், விரும்பி அணியும், அணிவிக்கும் ஒரு கவர்ச்சிகரமான, உணர்வுபூர்வமான உலோகமாக தங்கம் இருந்து வருகிறது.

அது மட்டுமல்ல பல நூறு ஆண்டுகளாக மிகவும் நம்பிக்கைக்குரிய, பாதுகாப்பான முதலீட்டு அம்சமாகவும் தங்கம் இருந்து வருகிறது.

ரூ.8,700 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையுமா..!

பல்வேறு ஆப்சன்கள்

பல்வேறு ஆப்சன்கள்

ஆரம்ப காலகட்டத்தில் தங்கத்தினை நாணயங்களாக, நகையாக அல்லது பார்களாகவும், நம் முன்னோர்கள் முதலீடு செய்து வந்தனர். ஆனால் இன்று அப்படி இல்லை தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. குறிப்பாக டிஜிட்டல், பேப்பர் தங்கம் என பல ஆப்ஷன்கள் முதலீடு செய்வதற்கு உள்ளன.

வாலட்கள் மூலம் தங்கம்

வாலட்கள் மூலம் தங்கம்

குறிப்பாக தங்க பத்திரங்கள், கமாடிட்டியில் தங்க வர்த்தகம், தங்க ஃபண்டுகள், கோடு இடிஎஃப் என பலவிதங்களில் தங்கத்தில் முதலீடுகள் இருந்து வந்தன. ஆனால் தற்போது இதெல்லாம் போய், ஒரு படி மேலாக பேடிஎம், கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற பல்வேறு வாலட்கள் மூலம், குறைந்தபட்சம் ஒரு ரூபாயிலிருந்து நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யுமளவிற்கு முதலீட்டு யுக்திகள் பெருகிவிட்டது.

போர்ட்போலியோவில் அவசியம்
 

போர்ட்போலியோவில் அவசியம்

பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கத்தினை கட்டாயம் சேர்க்கின்றனர். இது பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் என்பதால் கட்டாயம், போர்ட்போலியோவில் இருப்பது மிக அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் மதிப்பானது தொடர்ந்து நீண்ட கால நோக்கில் அதிகரித்து வரும் நிலையில். முதலீடு செய்வது என்பது மிக அவசியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான ஆப்சன்

கவர்ச்சிகரமான ஆப்சன்

எனினும் தற்போதைய காலகட்டத்தில் சில்லறை முதலீட்டாளர்களை கவரும் விதமாக, பல்வேறு நிதி நிறுவனங்கள், ஆன்லைன் ஈ காமர்ஸ் நிறுவனங்கள், பே வாலட்கள் என பலவும் தங்கத்தினை குறைந்த அளவிலிருந்து முதலீடு செய்யும் ஆப்ஷன்களை கொண்டுள்ளன.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்டது. தற்போது கொரோனாவின் தாக்கமானது குறைந்தாலும், மீண்டும் மூன்றாம் கட்ட அலை வரலாமோ என்ற அச்சமும் நிலவிவருகிறது. இதற்கிடையில் பணவீக்கத்தின் அச்சமும் இருந்து வருகின்றது. இதனால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1க்கு தங்கம் வாங்கலாம்

ரூ.1க்கு தங்கம் வாங்கலாம்

நீண்ட கால நோக்கில் தங்கத்திற்கான எதிர்காலம் என்பது மிக நன்றாக உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக டிஜிட்டல் தங்கத்தின் மீதான மோகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் தான் பேடிஎம் அமேசான் பே, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல ஆப்களும் தங்கத்தில், குறைந்த அளவில் முதலீடு செய்யலாம். குறிப்பாக 1 ரூபாயிலிருந்து கூட தங்கத்தை வாங்கலாம். இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிக கவர்ச்சிகரமான விஷயமாக உள்ளது.

எளிதாக வாங்கலாம்

எளிதாக வாங்கலாம்

இவ்வாறு டிஜிட்டல் மூலமாக தங்கத்தை வாங்கும் போது, மிக ஈசியாக மொபைல் ஆப் மூலமாக வாங்க முடியும். இதில் தரம் என்பது மிக கவலை கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இவை டிஜிட்டல் வடிவில் இருப்பதால் கவலையில்லை. அப்படி பிசிகலாக தங்கமாக வாங்கினாலும், 24 கேரட் ஆக உள்ளது. இது மிக பாதுகாப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்

எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்

மேலும் முதலீடு என்பது குறைந்தபட்சமாக ஒரு ரூபாயிலிருந்து கூட வாங்கிக் கொள்ள முடியும் என்பதால், எஸ்ஐபி போன்று போன்று, இதில் மாத மாதம் சிறு சிறு அளவில் தங்கத்தினை வாங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது உங்கள் கையில் பணம் இருக்கும் அளவுக்கு வாங்கி வைக்கலாம். மேலும் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

 செய்கூலி, சேதாரம் இல்லை

செய்கூலி, சேதாரம் இல்லை

பொதுவாக நீங்கள் தங்கமாக வாங்கினால் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பலவும் நாம் செலுத்த வேண்டி இருக்கும். இதே டிஜிட்டல் வடிவில் இருக்கும்போது உங்களுக்கு செய்கூலி சேதாரம் என்ற கவலை இல்லை. இதுவே ஒரு காலகட்டத்தில் லாபமாக மாறக்கூடும். மேலும் குறைந்த தொகையினை கூட நீங்கள் முதலீடு செய்ய முடியும் என்பதால், யார் வேண்டுமானாலும் இந்த டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விற்கலாம்

சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விற்கலாம்

நீங்கள் வாங்கிய தங்கத்தினை விற்கும்போதும் சந்தை நிலவரம் என்னவோ? அதற்கு ஏற்ப உங்களது தங்கத்தினை நீங்கள் விற்றுக் கொள்ளலாம். அல்லது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கமாகவும் வழங்குகின்றன.

பொதுவாக நீங்கள் இந்த டிஜிட்டல் தங்கத்தினை வாங்கும் போது ஜிஎஸ்டி மூன்று சதவிகிதத்திற்கும் மேலாக செலுத்த வேண்டி இருக்கும். இதனுடன் கூடுதலாக இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்கள் 2 - 3% செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல இதற்கு முதிர்வுகாலம் என்பது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகின்றது. ஆக நீங்கள் தங்கம் வாங்குவதற்கு முன்பே இதனையெல்லாம் தெரிந்து கொண்டு வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now you can buy digital Gold at Rs.1 during Diwali season

Now you can buy digital Gold at Rs.1 during Diwali season, check tax, purity and other details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X