வீட்டுக் கடன் வாங்க திட்டமா.. அப்படின்னா முதலில் இதை படியுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொந்த வீடு ஆசை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம். வீடு இல்லாதவர்கள் எப்படியாவது ஒரு சிறிய வீட்டை கட்டி விட வேண்டும். வீடு இருப்பவர்கள் அதனை பெரியதாக கட்ட வேண்டும். அதில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என நினைப்போம். ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு முதல் தடையாக வந்து நிற்பது பணம் தான்.

 

அந்த சமயத்தில் நாம் நினைப்பது வீட்டுக் கடன் பற்றித் தான். ஆக அப்படி வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் எந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தீபாவளி ஷாப்பிங்-ஐ பாதுகாப்பாக செய்வது எப்படி.. கூகுள்-ன் 3 முக்கிய டிப்ஸ்..!

தற்போது விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், பல வங்கிகள் வட்டி விகிதத்தில் சலுகைகளை கொடுத்துள்ளன. அதோடு கூடுதலாக இன்னும் பல சலுகைகளை அறிவித்துள்ளன. இப்படி பல சலுகைகளுக்கும் மத்தியில் பலர் வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருக்கலாம். ஆக அவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

கடன் பற்றி ஆய்வு செய்யுங்கள்

கடன் பற்றி ஆய்வு செய்யுங்கள்

நீங்கள் வாங்க போகும் வீட்டுக் கடன் பற்றி ஆய்வு செய்யுங்கள். எந்த வங்கியில் வட்டி விகிதம் குறைவு. மற்ற கட்டண விகிதங்கள் எவ்வளவு? எங்கு உங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். இதனை மற்றவர்கள் சொல்வதை கேட்பதை விட, நீங்களாக தீர்மானித்து அலசி பார்த்து கடன் வாங்கலாம்.

உங்கள் வட்டி விகிதம் எப்படி?

உங்கள் வட்டி விகிதம் எப்படி?

எந்தவொரு வங்கியிலும் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு உங்களது கடனுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், நிலையானதா (Fixed rate) அல்லது ஃப்ளோட்டிங் (Floating) விகிதமா? என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதில் என்ன வித்தியாசம் உள்ளது. இதில் நிலையான விகிதம் எனில், ஆரம்பம் முதல், முடிவு வரையில் நீங்கள் செலுத்தும் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. இதே ஃப்ளோட்டிங் விகிதம் எனில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும்.

கிரெடிட் ஸ்கோர் எப்படியுள்ளது?
 

கிரெடிட் ஸ்கோர் எப்படியுள்ளது?

கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களது வீட்டுக் கடனில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில் இதனடிப்படையில் தான் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்கலாமா? வேண்டாமா? அப்படி கொடுத்தாலும் வட்டி விகிதம் எவ்வளவு கொடுக்கலாம் என தீர்மானிக்கின்றன. உதாரணத்திற்கு உங்களது கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், உங்களுக்கு எளிதில் வீட்டுக் கடன் அனுமதிக்கப்படலாம்.

முன்கூட்டியே செலுத்தினால் அபராதமா?

முன்கூட்டியே செலுத்தினால் அபராதமா?

வீட்டுக் கடன் மட்டும் அல்ல, எந்தவொரு கடன் வாங்கினாலும் சரி, இதனை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய கடனைமுன் கூட்டியே செலுத்தினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது வங்கிக்கு வங்கி வேறுபடும். ஆக அதனை தெரிந்து கொள்வது நல்லது.

செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு?

செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு?

வங்கிக் கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாக உள்ளன. ஏனெனில் சில வங்கிகள் 0.4%ல் இருந்து ஆரம்பிக்கின்றன. இது அதிகபட்சம் 1% வரை உள்ளது. ஆக அதனையும் கவனத்தில் கொண்டு செயல்படும்போது, உங்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.

சலுகைகளை சரியாக புரிந்து கொள்ளுங்கள்

சலுகைகளை சரியாக புரிந்து கொள்ளுங்கள்

குறிப்பாக இந்த சலுகை காலக்கட்டங்களில், சலுகைகள் மூலம் கடன் வாங்க நினைப்பவர்கள், அதற்கான ஆவணங்களை சரியாக படித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் சிறு விஷயங்கள் கூட, உங்களுக்கு பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை?

கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை?

நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணபிக்கும்போது, பின்வரும் அனைத்து நிதி தகவல்களையும் கவனிக்க வேண்டும்.

*வட்டி விகிதங்கள்

*செயல்பாட்டுக் கட்டணங்கள்

*விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் கட்டணங்கள் ரீபண்ட் திரும்ப கிடைக்குமா?

*வட்டி விகிதம் (Fixed or Floating)

உங்களுக்கு கடன் அங்கீகரிக்கப்பட்டால்

உங்களுக்கு கடன் அங்கீகரிக்கப்பட்டால்

உங்களது வீட்டுக் கடன் அங்கீகரிக்கப்பட்டால், அதன் பிறகு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.

உங்கள் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒப்புகை

கடனை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.

அனுமதி கடிதம்

அனைத்து ஆவணங்களும் கொண்ட ரசீது

டெபாசிட் செய்ய அனைத்து பிந்தைய தேதியிடப்பட்ட காசோலைகளுக்கும் ரசீது உள்ளிட்ட பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Planning to apply for a home loan? Read this details

Home loan latest updates.. Planning to apply for a home loan? Read this details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X