பஞ்சாப் நேஷனல் வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. ரூ.1 – 10 லட்சம் வரை நிதியுதவி..யாரெல்லாம் வாங்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் கிராமப்புறங்களில் பின் தங்கிய பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் நிதியுதவி என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

 

இது நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புறங்கள் மற்றும் பின் தங்கிய பகுதிகளிலும் உள்ள மக்கள் முன்னேற்றத்திற்காக பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவிக் குழு அமைக்கப்பட்டு, அதன் மூலமாக பெண்கள் சுய தொழில் செய்யவும், குழந்தைகளில் கல்விக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகை நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரூ.10 லட்சம் வரை நிதியுதவி

ரூ.10 லட்சம் வரை நிதியுதவி

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தியில் வெளியிட்டுள்ளது. அதன் படி தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் இனி, கிராமங்களும் வளர்ச்சி காணும். மேலும் மகளின் சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும் இதற்கு சில நிபந்தனைகளையும் கொடுத்துள்ளது.

என்ன நிபந்தனை அது?

என்ன நிபந்தனை அது?

பிஎன்பி-யின் மூலமான இந்த நிதியுதவியினை பெற சில நிபந்தனைகளும் உண்டு. அதன் படி சுய உதவி குழுக்கள் கிராமப்புற மற்றும் பழங்குடி பகுதியினை சேர்ந்ததாக இருக்க வேண்டும். குழுவில் குறைந்தபட்சம் 10 - 15 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறைந்தபட்சம் ஐந்து பேராவது இருக்க வேண்டும்.

எவ்வளவு நிதியுதவி
 

எவ்வளவு நிதியுதவி

இந்த குழுக்களுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் சுற்று நிதியும், 50,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் உதவியும் வழங்கப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 7% வரை வட்டி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தீன்தயாள் அந்தோயோதயா திட்டம் (DAY-NULM)

தீன்தயாள் அந்தோயோதயா திட்டம் (DAY-NULM)

தீன்தயாள் அந்தோதயா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NULM), நகர்ப்புற ஏழை குடும்பங்களை வறுமை மற்றும் வன்கொடுமை பாதிப்புக்குள்ளாக்குவதிலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு, அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமையான ஊதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்த உதவும் திட்டம்ன்.

தீன்தயாள் அந்தோயோதயா  - நிபந்தனை

தீன்தயாள் அந்தோயோதயா - நிபந்தனை

மேற்கண்ட இந்த திட்டத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்காக ஒரு தனிப்பட்ட மைக்ரோ நிறுவனத்தை அமைக்க விரும்பும் நகர ஏழை தனி நபர் பயனாளி மற்றும் சுய உதவிக் குழு அல்லது DAY-NULM கீழ் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் அல்லது சுய வேலைக்காக நகர்புற ஏழைகளின் குழு இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் தான். இந்த குழு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். குறிப்பாக நகர்புற ஏழைக் குடும்பங்களை சேர்ந்த குறைந்தபட்சம் 70% உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

அந்தோயோதயா

அந்தோயோதயா

இதில் தனி நபர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை 2 லட்சம் ரூபாய் வரையிலும், இதே குழு நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படும். இதில் 50,000 ரூபாய் வரையிலான கடன் மற்றும் அதிகளவிலான கடன்களுக்கு மார்ஜின் சலுகை உண்டு என்பது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி விகிதம், வங்கிகள் கடன் வழங்கும்போது அப்போதைய விகித்திற்கு ஏற்ப பரிந்துரைக்கும்.

இன்னும் சில திட்டங்கள்

இன்னும் சில திட்டங்கள்

பிஎன்பி வங்கி மேற்கண்ட இந்த திட்டங்கள் தவிர, Scheme for Rehabilitation of Manual Scavengers (SRMS), Differential Rate of Interest (DRI), Self Help Groups (SHGs), என்ற அடிப்படையிலும் சில சலுகைகளை அளிக்கிறது. இதுவும் ஏழை மக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள சில திட்டங்களாகும். ஆக இதனை பற்றிய முழு விவரங்களுக்கு வங்கிகளை நேரடியாக அணுகி உதவிகளை பெறலாம். இதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதரத்தினை பெருக்கிக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PNB financial assistance for self help group; From Rs.1 lakh to Rs.10 lakh! Check details

Punjab national bank latest updates.. PNB financial assistance for self help group; From Rs.1 lakh to Rs.10 lakh! Check details
Story first published: Friday, July 9, 2021, 19:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X